விகராபாத் மாவட்டம்

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
விகராபாத் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்

விகராபாத் மாவட்டம் (Vikarabad district) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விகாராபாத் நகரத்தில் உள்ளது.

ரங்காரெட்டி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது.[2]

மாவட்ட எல்லைகள்

விகாராபாத் மாவட்டம், சங்கர்ரெட்டி மாவட்டம், ரங்காரெட்டி மாவட்டம், மகபூப்நகர் மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.

மக்கள் தொகையியல்

விகாராபாத் மாவட்டம் 3,386 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[3] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8,91,405 ஆகும்.[3] இம்மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பெருமளவில் பேசப்படுகிறது. இம்மாவட்டம் நான்கு தெலுங்கானா சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்ட வாகனத் தகடு எண் TS–34 ஆகும்.[4]

மாவட்ட நிர்வாகம்

விகராபாத் மாவட்டம் தண்டூர் மற்றும் விகாராபாத் என இரண்டு வருவாய் கோட்டங்களையும் 18 மண்டல்களையும் கொண்டுள்ளது.[1] புதிதாக நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் முதல மாவட்ட ஆட்சித்தலைவர் டி. திவ்யா ஆவார்.[5]

விகாராபாத் மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்களில் உள்ள 18 மண்டல்கள்:

வ எண். தண்டூர் வருவாய் கோட்டம் விகராபாத் வருவாய் கோட்டம்
1 பசீராபாத் பந்த்துவாரம்
2 பொம்மரசம்பேட்டை தாரூர்
3 தௌத்தாபாத் தோமா
4 கொடங்கல் குல்காசேர்லா
5 பெத்தமூல் கோட்டேபள்ளி
6 தண்டூர் மார்பள்ளி
7 யெலால் மொமீன்பேட்டை
8 நவாப்பேட்டை
9 புதூர்
10 பர்கி
11 விகராபாத்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Vikarabad district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 12 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  2. "Vikarabad district". Archived from the original on 2017-12-04. பார்க்கப்பட்ட நாள் 2017-02-28.
  3. 3.0 3.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  4. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  5. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள்