அரயோப்பாகு மேடை
அரயோப்பாகு (Areopagus) கிரேக்கத்தின் ஏதென்ஸ்சில் உள்ள அக்ரோபோலிஸின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மேடை போன்ற அல்லது உயரமான பாறையாகும். அதன் ஆங்கிலப் பெயர் கிரேக்க பெயர் ஆரேயோஸ் பகோஸ், "ஏரிஸ் பாறை" (பண்டைய கிரேக்க: Ἄρειος Πάγος) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பண்டைய காலங்களில் , இது வேண்டுமென்றே கொலை செய்தல், காயப்படுத்துதல் மற்றும் சமய விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாக செயல்பட்டது.[1][2]
ஏதென்சின் பிரப்புக்களையும், முன்னாள் ஆர்கோன் தலைவர்களைக் கொண்ட பூலி அவையானது இந்த அரயோப்பாகு குன்றின் மீது கூடி நகர அரசின் நிர்வாக விவகாரங்களை நடத்திவந்தனர். ஏதென்சின் மன்னர்களான ஆர்கோனை இந்த அவையே நியமித்தது அதிகாரமும் இந்த அவையிடமே இருந்தது.[3]
சான்றுகள்
- ↑ MacDowell, Douglas M. (1978). The law in classical Athens. Ithaca, N.Y.: Cornell University Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801493652. இணையக் கணினி நூலக மைய எண் 20663324.
- ↑ Pseudo-Aristotle. "Atheneion Politeia". Perseus. Perseus Tufts. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
- ↑ வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 129–130.