அளிப்புரிமை
அளிப்புரிமை (copyleft) என்ற சொல், காப்புரிமை (copyright) என்ற சொல்லிற்கு தத்துவரீதியாக செய்யப்பட்ட மாற்றமாகும். இது காப்புரிமைச் சட்டத்தையே பயன்படுத்தி ஆக்கமொன்றின் நகல்களை விநியோகிப்பதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கும் ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்படுகிறது.
ஆக்கமொன்றினை, அதன் நகல்களை, அவ்வாக்கத்தின் மாற்றம் செய்யப்பட்ட நகல்களை விநியோகிப்பதற்கான சுதந்திரத்தையும், அவ்வாறு விநியோகிக்கப்பட்ட நகல்களும் அதேமாதிரியான சுதந்திரத்தை கொண்டிருப்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ Newman, John (29 December 2011). "Copyright and Open Access at the Bedside". NEJM 365 (26): 2447–2449. doi:10.1056/NEJMp1110652. பப்மெட்:22204721.