ஆசியக் கிண்ணம்
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்டக் குழு |
---|---|
வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் & இ20ப |
முதல் பதிப்பு | 1984 |
கடைசிப் பதிப்பு | 2018 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டி |
மொத்த அணிகள் | 6 |
தற்போதைய வாகையாளர் | இந்தியா |
அதிகமுறை வெற்றிகள் | இந்தியா (7 தடவைகள்) |
அதிகபட்ச ஓட்டங்கள் | சனத் ஜெயசூரிய (1220)[1] |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | லசித் மாலிங்க (33)[2] |
ஆசியக் கிண்ணம் (Asia Cup), என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். ஆசிய நாடுகளிடையே நல்லெண்ணத்தை வளர்த்தெடுப்பதற்காக 1983 ஆம் ஆண்டில் ஆசியத் துடுப்பாட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இச்சுற்றுப் போட்டியை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 இல் அமீரகத்தில் சார்ஜாவில் இடம்பெற்றது. ஆசியக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அந்தஸ்து பன்னாட்டு துடுப்பாட்டக் குழுவினரால் வழங்கப்பட்டது. இந்திய, மற்றும் இலங்கை அணிகள் இதுவரையில் (2008) நான்கு தடவைகள் ஆசியக் கிண்ணத்தைப் பெற்றன. இந்திய அணி இரண்டு தடவைகள் இச்சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றவில்லை. 1986 இல் இலங்கை இனப்பிரச்சினையைக் காரணம் காட்டியும், 1993, மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசுடன் அரசியல் பிரச்சினையைக் காரணம் காட்டியும் இந்திய அணி பங்கு பற்றவில்லை. இலங்கை அணி அனைத்துப் போட்டிகளிலும் பங்கு பற்றியது.
2008 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஆசியக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறும் என ஆசியத் துடுப்ப்பாட்டக் குழு அறிவித்தது[3]
முதலாவது போட்டி, 1984
முதலாவது ஆசியக்கிண்ணத்துக்கான போட்டிகள் சார்ஜாவில் இடம்பெற்றன. பாகிஸ்தான், இந்தியா, மற்றும் இலங்கை அணிகள் பங்கு பற்றின. ஒவ்வொரு அணியும் ஒரு முறை எதிர் அணியுடன் மோதியது. முதலாவது ஆட்டம் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இந்திய அணி ஆசியக் கிண்ணத்தை வென்றது.
இரண்டாவது போட்டி, 1986
இரண்டாவது ஆசியக்கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. வங்காளதேசத் துடுப்பாட்ட அணி முதற் தடவையாக பங்குபற்றியது. இந்திய அணி பங்குபற்றவில்லை. இறுதிப் போட்டியில் இலங்கை அணி,,பாகிஸ்தான் அணியை வென்று ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
மூன்றாவது போட்டி, 1988
மூன்றாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் வங்காள தேசத்தில் இடம்பெற்றன. நான்கு அணிகள் பங்கு பற்றிய இப்போட்டிகளில் இறுதிச் சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வென்று ஆசியக்கிண்ணத்தைத் தனதாக்கியது.
நான்காவது போட்டி, 1990/91
நான்காவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்றன. பாகிஸ்தான் அணி பகிஷ்கரித்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வென்று ஆசியக்கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
ஐந்தாவது போட்டி, 1995
ஐந்தாவது ஆசியப் போட்டிகள் சார்ஜாவில் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அணி,இலங்கையை வென்று நான்காவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.
ஆறாவது போட்டி, 1997
ஆறாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வென்றது.
ஏழாவது போட்டி, 2000
ஏழாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இரண்டாவது தடவையாக வங்காள தேசத்தில் நிகழ்ந்தன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வென்ற்று முதற் தட்டவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.
எட்டாவது போட்டி, 2004
எட்டாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. இம்முறை ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி, ஹொங்கொங் துடுப்பாட்ட அணி ஆகியன முதன் முறையாக பங்கு பற்றின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 25 ஓட்டங்களால் வென்று ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.
ஒன்பதாவது போட்டி, 2008
ஒன்பதாவது போட்டிகள் பாகிஸ்தானில் இடம்பெற்றன. போட்டிகள் ஜூன் 24, 2008 இல் ஆரம்பித்து ஜூலை 6 இல் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வென்று நான்காவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.
பத்தாவது போட்டி, 2010
பத்தாவது போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றன. போட்டிகள் சூன் 15, 2010 இல் ஆரம்பித்து சூன் 24 இல் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வென்று ஐந்தாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றது.
பதினோராவது போட்டி, 2012
பன்னிரண்டாவது போட்டி, 2014
வெற்றியாளர்கள்
ஆண்டு | இடம் | வெற்றியாளர் | இரண்டாம் இடம் |
---|---|---|---|
1984 | ஐக்கிய அரபு அமீரகம் | இந்தியா | இலங்கை |
1986 | இலங்கை | இலங்கை | பாக்கிஸ்தான் |
1988 | வங்காள தேசம் | இந்தியா | இலங்கை |
1990-91 | இந்தியா | இந்தியா | இலங்கை |
1993 | பாகிஸ்தான் | ரத்து | |
1995 | ஐக்கிய அரபு அமீரகம் | இந்தியா | இலங்கை |
1997 | இலங்கை | இலங்கை | இந்தியா |
2000 | வங்காள தேசம் | பாக்கிஸ்தான் | இலங்கை |
2004 | இலங்கை | இலங்கை | இந்தியா |
2008 | பாகிஸ்தான் | இலங்கை | இந்தியா |
மேற்கோள்கள்
- ↑ "Most runs in combined format". Cricinfo.
- ↑ "Most wickes in combined format". Cricinfo.
- ↑ Asia Cup to be held biennially, from Cricinfo, retrieved 22 June 2006
வெளி இணைப்புகள்
- Asia Cup History, Schedule & News பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம்
- Asia Cup 2008 Fixtures @ RubaiSport பரணிடப்பட்டது 2008-03-09 at the வந்தவழி இயந்திரம்