ஆசியத் துடுப்பாட்ட அவை
சுருக்கம் | ACC |
---|---|
உருவாக்கம் | 19 செப்டம்பர் 1983 |
நோக்கம் | துடுப்பாட்ட நிருவாகம் |
தலைமையகம் | கொழும்பு, இலங்கை |
உறுப்பினர்கள் | 25 அவைகள் |
ஆட்சி மொழிகள் | ஆங்கிலம் |
தலைவர் | ஜெய் சா |
துணைத் தலைவர் | பங்கச் கிம்சி |
தாய் அமைப்பு | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
வலைத்தளம் | www |
ஆண்கள்
பெண்கள்
ஏனையவை |
ஆசியத் துடுப்பாட்டு வாரியம் (Asian Cricket Council; ACC) என்பது ஆசியாவில் துடுபாட்டத்தை மேம்படுத்த 1983 இல் தொடங்கப்பட்ட ஒரு துடுப்பாட்ட அமைப்பாகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு ஆசியக் கண்டத்தின் பிராந்திய நிர்வாக அமைப்பாகும். இதில் தற்போது 24 உறுப்பு நாடுகளின் துடுப்பாட்ட வாரியங்கள் அங்கத்துவம் பெற்றுள்ளன. ஜெய் சா இதன் தற்போதைய தலைவராக உள்ளார்.[1][2]
வரலாறு
1983 செப்டம்பர் 19 இல் புதுதில்லியில் இந்த அமைப்பு ஆசிய துடுப்பாட்ட மாநாடு என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகால உறுப்பினர்கள் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, பாக்கித்தான், சிங்கப்பூர், இலங்கை ஆகியயாகும். 1995 இல் இதன் பெயர் ஆசியத் துடுப்பாட்ட அவை என மாற்றப்பட்டது. 2003 வரை, இதன் தலைமையகம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவையின் தலைவர்கள், செயலாளர்களின் சொந்த நாடுகளில் சுழற்சி முறையில் இருந்து வந்தது. இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் ஜெய் சா, இவர் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் செயலாளராகவும் உள்ளார்.
ஆசியக் கிண்ணம், ஆசியத் தேர்வு வாகை, ஏசிசி கிண்ணம், மற்றும் பல்வேறு போட்டிகள் உட்பட அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட போட்டிகளின் போது சேகரிக்கப்படும் தொலைக்காட்சி வருவாயில் இருந்து கிடைக்கப்பெறும் நிதியுதவி, அவையின் உறுப்பினர் நாடுகளில் பயிற்சி, நடுவர் தெரிவு மற்றும் விளையாட்டு மருத்துவ திட்டங்களை ஆதரிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறது.
ஆசியத் துடுப்பாட அவையின் தற்போதைய தலைமையகம் இலங்கையின் கொழும்பில் 2017 ஆகத்து 20 இல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.[3]
உறுப்பினர்கள்
ஆசியத் துடுப்பாட்ட அவையின் உறுப்பினர் சங்கங்கள் முழுமையான மற்றும் இணை உறுப்பினர்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழுமையான உறுப்ப்புரிமை உள்ளோருக்கு "முழு உறுப்பினர் தகுநிலை" வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பன்னாட்டு அவையில் இணை உறுப்பினர்களாக உள்ளோருக்கும், பன்னாட்டு அவையில் உறுப்பினர்களல்லாதோருக்கும் (கம்போடியா, தைவான், 2021 இல்) "இணை உறுப்பினர் தகுநிலை" வழங்கப்பட்டுள்ளது.[4] பிஜி, சப்பான், பப்புவா நியூ கினி ஆகியவை முன்பு ஆசிய அவையில் உறுப்பினர்களாக இருந்தன, ஆனால் 1996 இல் நிறுவப்பட்டபோது கிழக்காசிய-பசிபிக் பிராந்தியப் பேரவை தொடங்கியபோது, இந்த அவையில் இணைந்தன.[5]
முழு உறுப்புரிமை நாடுகள்
இல. | நாடு | அவை | ஐசிசி உறுப்புரிமை (ஒப்புதல் நாள்) |
ஐசிசி உறுப்புரிமை |
ஏசிசி உறுப்புரிமை |
---|---|---|---|---|---|
1 | இந்தியா | இந்திய வாரியம் | முழு (31 மே 1926) | 1926 | 1983 |
2 | பாக்கித்தான் | பாக்கித்தான் வாரியம் | முழு (28 சூலை 1952) | 1952 | 1983 |
3 | இலங்கை | இலங்கை வாரியம் | முழு (21 சூலை 1981) | 1965 | 1983 |
4 | வங்காளதேசம் | வங்காளதேச வாரியம் | முழு (26 சூன் 2000) | 1977 | 1983 |
5 | ஆப்கானித்தான் | ஆப்கானித்தான் வாரியம் | முழு (22 சூன் 2017) | 2001 | 2003 |
துணைநிலை உறுப்பினர்கள் (ஒநாப, இ20ப தகுநிலையுடன்)
இல. | நாடு | ஐசிசி உறுப்புரிமை | ஐசிசி உறுப்புரிமை |
ஏசிசி உறுப்புரிமை |
---|---|---|---|---|
1 | ஆங்காங் | துணைநிலை | 1969 | 1983 |
2 | நேபாளம் | துணைநிலை | 1996 | 1990 |
3 | ஓமான் | துணைநிலை | 2000 | 2000 |
4 | ஐக்கிய அரபு அமீரகம் | துணைநிலை | 1990 | 1984 |
துணைநிலை உறுப்பினர்கள் (இ20ப தகுநிலையுடன்)
இல. | நாடு | ஐசிசி உறுப்புரிமை | ஐசிசி உறுப்புரிமை |
ஏசிசி உறுப்புரிமை |
---|---|---|---|---|
1 | பகுரைன் | துணைநிலை | 2001 | 2003 |
2 | பூட்டான் | துணைநிலை | 2001 | 2001 |
3 | சீனா | துணைநிலை | 2004 | 2004 |
4 | ஈரான் | துணைநிலை | 2003 | 2003 |
5 | குவைத் | துணைநிலை | 2003 | 2005 |
6 | மலேசியா | துணைநிலை | 1967 | 1983 |
7 | மாலைத்தீவுகள் | துணைநிலை | 1998 | 1996 |
8 | மங்கோலியா | துணைநிலை | 2021 | N/A |
9 | மியான்மர் | துணைநிலை | 2006 | 2005 |
10 | கத்தார் | துணைநிலை | 1999 | 2000 |
11 | சவூதி அரேபியா | துணைநிலை | 2003 | 2003 |
12 | சிங்கப்பூர் | துணைநிலை | 1974 | 1983 |
13 | தஜிகிஸ்தான் | துணைநிலை | 2021 | 2012 |
14 | தாய்லாந்து | துணைநிலை | 2005 | 1996 |
15 | கம்போடியா | துணைநிலை | 2022 | 2012 |
மங்கோலியா 2021 சூலை 18 அன்று ஐசிசி உறுப்பினராக அனுமதிக்கப்பட்டது, ஆனால் இன்னும் எந்த பிராந்திய அமைப்பின் உறுப்புரிமையையும் அது பெறவில்லை. இருப்பினும், ஆசிய நாடாக இருப்பதால், ஏசிசியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி உறுப்பினரல்லாதோர்
இல. | நாடு | ஐசிசி உறுப்புரிமை | ஐசிசி உறுப்புரிமை |
ஏசிசி உறுப்புரிமை |
---|---|---|---|---|
1 | சீனக் குடியரசு | பொருத்தமில்லை | 2012 |
கிழக்காசிய-பசிக்கில் இணைந்த முன்னாள் உறுப்பினர்கள்
இல. | நாடு | ஐசிசி உறுப்புரிமை | ஐசிசி உறுப்புரிமை |
ஏசிசி உறுப்புரிமை |
---|---|---|---|---|
1 | பிஜி | துணைநிலை | 1965 | 1996 |
2 | சப்பான் | துணைநிலை | 1989 | 1996 |
3 | பப்புவா நியூ கினி | துணைநிலை (ஒநாப தகுநிலை) | 1973 | 1996 |
முன்னாள் உறுப்பினர்கள்
இல. | நாடு | ஐசிசி உறுப்புரிமை | ஐசிசி உறுப்புரிமை |
ஏசிசி உறுப்புரிமை |
---|---|---|---|---|
1 | புரூணை | பொருத்தமில்லை | 2002–2015 | 1996 |
வரைபடம்
மேற்கோள்கள்
- ↑ Sportstar, Team. "Jay Shah takes over as the president of Asian Cricket Council". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
- ↑ "BCCI secretary Jay Shah appointed Asian Cricket Council president". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-28.
- ↑ "ASIAN CRICKET COUNCIL TO BE SHIFTED TO COLOMBO". News Radio. Archived from the original on 9 November 2016. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
- ↑ Members – Asian Cricket Council. Retrieved 9 July 2012.
- ↑ The Formation of the ACC பரணிடப்பட்டது 2012-01-06 at the வந்தவழி இயந்திரம் – Asian Cricket Council. Retrieved 9 July 2012.