ஆல்சைமர் நோய்
ஆல்சைமர் நோய் Classification and external resources | |
சாதாரண வயது முதிர்ந்த ஒருவரின் மூளையினதும் (இடபக்கம்), ஆல்சைமர் நோயாளியின் மூளையினதும் (வலப்பக்கம்) ஒப்பீடு. வேறுபாடான இயல்புகள் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. | |
ஐ.சி.டி.-10 | G30., F00. |
ஐ.சி.டி.-9 | 331.0, 290.1 |
OMIM | 104300 |
DiseasesDB | 490 |
MedlinePlus | 000760 |
ஈமெடிசின் | neuro/13 |
MeSH | D000544 |
ஆல்சைமர் நோய் (Alzheimer disease) நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும், மெதுவாக ஆரம்பித்து, நாட்கள் செல்கையில் மோசமான நிலைமைக்கு நகரும் ஒரு நாட்பட்ட நோயாகும். இது அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். 60-70 % ஆன மறதிநோய் இந்த ஆல்சைமர் நோயினால் ஏற்படுவதாகும்[1]. திசுக்கள் அழிவினால் உருவாகும், குணப்படுத்த முடியாத இந் நோயை 1906 ஆம் ஆண்டில், செருமானிய மனநோய் மருத்துவரான ஆலோயிசு ஆல்சைமர் (Alois Alzheimer) என்பவர் முதன் முதலில் விளக்கினார்[2]. 65 வயதுக்கு மேற்பட்டோரில் 6% மானவர்களில் இந்நோய் காணப்படுவதுடன், வயது அதிகரிக்கையில் இந்த நோயால் தாக்கத்திற்குள்ளாபவரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது[3]. எனினும் மிக அரிதாக இது மிகவும் முன்னதாகவே பீடிக்கக் கூடும். அமெரிக்காவில் ஆல்சைமர் நோயுள்ள 5 மில்லியனுக்கும் மேற்பட்டோரில் 5 % ஆனவர்கள் 65 வயதைவிடக் குறந்தவர்களாக இருக்கின்றனர்.[4] 2006 ஆம் ஆண்டில் உலகம் முழுதும் 26.6 மில்லியன் மக்கள் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டில் இது நான்கு மடங்காகக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.[5]
பொதுவாக இதன் ஆரம்ப அறிகுறி சமீபத்திய நிகழ்வுகளை மறத்தல் அல்லது குறுகிய கால நினைவு இழப்பு ஆகும்.[6] இந் நோயால் பீடிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் இது தனித்துவமான முறையில் பாதிக்கின்றது எனினும் சில பொதுவான அறிகுறிகளும் காணப்படுகின்றன. தொடக்கத்தில் கவனிக்கப்படக்கூடிய அறிகுறிகள் முதுமையுடன் தொடர்புபட்டதாகவோ அல்லது, மன அழுத்தம் காரணமாக ஏற்படுவதாகவோ தவறாக எண்ணப்படலாம். தொடக்கத்தில் மிகவும் பொதுவாகக் கவனிக்கக் கூடிய அறிகுறி நினைவாற்றல் இழப்பு ஆகும். இந் நோய் இருப்பதாக ஐயம் எழும்போது இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நடத்தை மதிப்பீடுகளும், அறிதிறன் சோதனைகளும் செய்யப்படுகின்றன.
நோயுற்றவரின் இயல் நிலையில் குறைபாடு ஏற்படும்போது, வீழ்ச்சியுற்றால், அவர்கள் தம் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து விலகுகின்றனர். படிப்படியாக, உடல் செயல்பாடுகள் குறைந்து, இறுதியில் மரணத்தை அடைகின்றனர்.[7] நோயின் முன்னேற்ற வேகம் மாறுபட்டாலும், சராசரி ஆயுட்கால எதிர்பார்ப்பு மூன்று முதல் ஒன்பது ஆண்டுகள் ஆகும்.[8][9]
2015 ஆம் ஆண்டில், உலகளாவிய அளவில் ஏறத்தாழ 29.8 மில்லியன் ஆல்சைமர் நோயாளிகள் இருந்தனர்.
ஆய்வுகள்
அல்சைமர் நோயினை தீர்க்கவல்ல முதல் வேதிப்பொருளை லைஸ்டர் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூளையில் உள்ள திசுக்களை உயிரிழக்கச் செய்யும் நோய்களான அல்சைமர், நடுக்குவாதம், ஹண்டிங்டன்சு (en:Huntington's disease) போன்ற நோய்களை தீர்க்கும் மருந்தைத் தயாரிக்க இதுவே முதல் படியென்றும், இன்னும் பல வேலைகள் இருப்பதாகவும் கூறினர்.[10]
அல்சைமர் நோய் நிலைகள்
அறிவாற்றல் குறைபாடு மற்றும் செயல்பாட்டு குறைபாடு ஆகியவற்றின் வளர்ச்சியின் அடிப்படையில் அல்சைமர் நோய் நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அல்சைமர் நோயின் மிக ஆரம்ப நிலை
- மனதின் நினைவகத்தில் அல்சைமர் நோய் அல்லாத மற்றும் வயது முதிர்வினால் ஏற்படும் விளைவுகள்
- எப்போதாவது குறிப்பிட்ட பொருட்கள் அல்லது விஷயங்களை மறந்துவிடுதல்
- சில நேரங்களில் பொருட்களை இடம் மாற்றி வைத்தல்
- குறைந்த அளவிலான குறுகிய கால நினைவு இழப்பு
- சரியான விவரங்களை நினைவில் இருத்திக் கொள்ள முடிவதில்லை
அல்சைமர் நோயின் ஆரம்ப நிலை
- மறதி மற்றும் மறந்த பகுதிகளை நினைவில் இருத்துவது இல்லை
- குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் பெயர்களை மறந்துவிடுதல்
- நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களால் மட்டுமே இத்தகைய மாற்றங்கள் கவனிக்கப்படும்
- நன்கு தெரிந்த இடங்களில் உள்ள சூழ்நிலைகளில் எற்படும் சில குழப்பங்கள்
அல்சைமர் நோயின் இடைக்கால நிலை
- சமீபத்தில் கற்ற தகவல்களை நினைவில் நிறுத்துவதில் பெரிய அளவில் சிரமம் கொண்டிருத்தல்
- பல சூழ்நிலைகளில் குழப்பத்தை விரிவுபடுத்தி ஆழமாக்குதல்
- தூக்கம் வருவதில் சிக்கல்கள்
- தாங்கள் எங்கே இருக்கிறோம் என்று தெரிந்துகொள்வதில் சிக்கல்
அல்சைமர் நோயின் இறுதி நிலை
- குறைந்த அளவு சிந்திக்கும் திறன்
- பேசுவதில் சிக்கல்கள்
- ஒரே உரையாடல் அல்லது ஒரே மாதிரியான உரையாடல்களை மீண்டும், மீண்டும் கூறுவது
- அதிக அளவு தவறான நடத்தை அல்லது முறையற்ற பயன்பாடு, அதிக அளவு ஆர்வம் அல்லது அதிக அளவு சித்தப்பிரமை
அறிவாற்றல் குறைபாடு மற்றும் செயல்பாட்டு குறைபாடு ஆகியவற்றின் வளர்ச்சியின் அடிப்படையில் அல்சைமர் நோய் நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முன்-மன உடைவு உளக்கேடு நோய்
ஆரம்ப கால அறிகுறிகள் முதுமை மறதி மனநோயையும், மன அழுத்த நோயையும் ஒத்திருப்பதால் இதை வேறுபடுத்திக் கண்டுபிடிப்பது கடினமாகின்றது. எனவே, இது முதுமை மறதி மனநோயெனவும், மன அழுத்த மனநோயெனவும், தவறுதலாக கணிக்கப்படுகிறது. அல்சைமர் நோயின் தாக்குதலை அறிவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், அறிவாற்றல் கோளாறுகள் வெளிப்படும். இதனை விரிவான நரம்பியல்-உளவியல் சோதனை மூலமே அறிய முடியும். இந்த ஆரம்ப கால அறிகுறிகள் அன்றாட வாழ்வில் இடம்பெறக்கூடிய மிகவும் சிக்கலான செயல்களை பெரிதும் பாதிக்கலாம். மிகவும் குறிப்பிடத்தக்க இழப்பு அல்லது பற்றாக்குறை குறுகிய கால நினைவு இழப்பு ஆகும். இதனால் சமீபத்தில் அறியப்பட்ட கருத்துகள், நிகழ்வுகள் மற்றும் உண்மைகள் போன்றவை எளிதில் மறக்கப்படுகின்றன. புதிய தகவல்களைப் பெற இயலாத நிலை ஏற்படுகிறது.
அறிகுறிகள்
பொதுவாக இதன் ஆரம்ப அறிகுறி சமீபத்திய நிகழ்வுகளை மறத்தல் அல்லது குறுகிய கால நினைவு இழப்பு ஆகும்.[6] இந்த நோய் தீவிரமாகும்போது மனக்குழப்பம், எரிச்சலூட்டும் தன்மை, தன் முனைப்பு நடத்தை (aggression), மனநிலை மாற்றங்கள், நீண்டகால நினைவாற்றல் இழப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றுகின்றன. அத்துடன் புலன் உணர்வுகள் குறைவதால், பாதிக்கப்பட்டவரின் செயல்பாடுகள் குறையவும் தொடங்கும். படிப்படியாக உடற் செயற்பாடுகள் குறைந்து இறுதியில் இறப்பு ஏற்படும்.
நோய் அதிகரிக்கும் போது தோன்றும் அறிகுறிகள்:
- சமீபத்திய நிகழ்வுகளை மறத்தல் (குறுகிய கால நினைவு இழப்பு).[6]
- மொழிப் பயன்பாட்டில் பிரச்சினைகள் ஏற்படல்.
- மனநிலை ஊசலாட்டம்
- சுய பராமரிப்பு மேலாண்மை பிரச்சினைகள்
- நடத்தை பிரச்சினைகள்
- நோயுற்றவரின் இயல் நிலையில் குறைபாடு ஏற்படும்போது, வீழ்ச்சியுற்றால், அவர்கள் தம் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து விலகுகின்றனர். படிப்படியாக, உடல் செயல்பாடுகள் குறைந்து, இறுதியில் மரணத்தை அடைகின்றனர்.[7]
அல்சைமர் நோயின் ஆரம்ப கால கட்டங்களில் காணப்படும் பொதுவான அறிகுறிகள்:
- நெகிழ்வின்மை
- கவனிக்கும் தன்மை இன்மை
- சுருக்க சிந்தனை குறைபாடு
- விழிப்புணர்வின்மை
- திட்டமிட இயலாமை
- சொற்பொருள் நினைவக குறைபாடுகள்
- சொற்பொருள் அறியாமை
- கருத்துகளுக்கு இடையேயுள்ள தொடர்பு அறியாமை
- செயல்திறன் சிக்கல்கள்
- நுட்பமான கருத்துகளை உணராமை
- அக்கறையற்ற நிலை
- உணர்வின்மை
- நரம்பியல் மனநலக் குறைபாட்டு அறிகுறி
- மனச்சோர்வு அறிகுறிகள்
- எரிச்சல்
- நுட்பமான நினைவக சிரமங்கள்
இந்த நோய்க்கான மருத்துவம் தொடங்கும் முன் உள்ள நிலையில் இந்நோயுள்ளவர்களிடையே, உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் குறைந்து காணப்படும். இந்நிலை, மென்மையான அறிவாற்றல் வலுக்குறைவு (MCI) என்று அழைக்கப்படுகிறது. இது சாதாரண வயதில் ஏற்படும் மறதிக்கும், முதுமை மறதிக்கும் இடையில் ஒரு இடைநிலைக் கட்டமாக கருதப்படுகிறது. மென்மையான அறிவாற்றல் வலுக்குறைவு (MCI) பல்வேறு அறிகுறிகளுடன் கூடியது, அவற்றுள், நினைவக இழப்பு மிகவும் முக்கியமான அறிகுறியாகும். இது நினைவிழக்கும் நோயுடன் கூடிய மென்மையான அறிவாற்றல் வலுக்குறைவு நோய் என்று குறிப்பிடப்படுகிறது. இது அல்சைமர் நோயின் ஆரம்ப கால நிலையாகும்.
தொடக்க கால அல்சைமர் நோய்
அல்சைமர் நோயுடைய மக்களிடையே காணப்படும், கற்றல் குறைபாடுகள், நினைவாற்றல் குறைபாடுகள் போன்றவை நோயைக் கண்டறிந்து உறுதிப்படுத்த உதவுகின்றன. நினைவக பிரச்சினைகளைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த சிக்கல்கள்:
1 மொழி பயன்பாட்டுக் குறைபாடுகள்
2 நிர்வாக செயல்பாடுகளில் தேக்கம்
3 தூண்டல்களுக்கு பொருள் காண இயலாநிலை
4 நுண்ணுணர்விழப்பு
5 இயக்க குறைபாடுகள்
6 பொருள்களைப் புரிந்து கொள்ள இயலாமை
7 செயற்திறன்குறைபாடு
அல்சைமர் நோயுடையவர்களுக்கு எல்லா நினைவக திறன்களும் சமமாக பாதிக்கப்படாது. அல்சைமர் நோயுடையவர்களுக்கு, வாழ்க்கையின் பழைய நினைவுகள், தொடர் நிகழ்வு நினைவுகள், கற்ற உண்மைகள், சொற்பொருள் நினைவகம், உள்ளர்த்தமுள்ள மற்றும் வெளிப்படையில்லாத மறைமுக நினைவகம் ஆகியவை குறைவான அளவிற்கு பாதிக்கப்படுகின்றன.
சுருங்கி வரும் சொல்லாட்சி, குறைவான சொல் சரளாலயம் அல்லது சொல் வளம், வாய்வழி மற்றும் எழுத்துவழி மொழிப்பயன்பாடு போன்றவை அல்சைமர் நோயுடையவர்களுக்கு முக்கியமான மொழி பிரச்சினைகள் ஆகும். இந்த நிலையில் அல்சைமர் நோயுடையவர்கள் பொதுவாக தமக்குத் தேவையான அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் தேவைகளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருப்பர். எழுதுதல், வரைதல் அல்லது உடைத்தல் போன்ற சில உடல் இயக்க வேலைகளைச் செய்யும்போது, சிலஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல் சிக்கல்கள், பொருள்களைப் புரிந்து கொள்ள இயலாமை அல்லது செயற்திறன்குறைபாடு ஆகியவை ஏற்படலாம். ஆனால் அவை பொதுவாக வெளியே தெரியாமல் இருக்கலாம். அல்சைமர் நோயுடையவர்களுக்கு நோய் அதிகரிக்கும் போது, பெரும்பாலும் பல பணிகளைத் தொடர்ந்து செய்ய இயலும். ஆனால் மிகவும் அறிவாற்றல் தேவைப்படும் செயல்பாடுகளுக்கு போதிய உதவி அல்லது மேற்பார்வை தேவைப்படலாம்
மத்திம கால அல்சைமர் நோய்
வளர்ச்சி சீர்குலைவினால் அல்சைமர் நோயுடையவர்களுக்கு சுதந்திரம் குறைகிறது. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மிகவும் பொதுவான எளிய செயல்களைக்கூட இவர்களால் தன்னிச்சையாகச் செய்ய முடிவதில்லை. சொற்குவியல் அல்லது சொற்தொகுதி வளம் குன்றுவதாலும், நினைவூட்டுத் திறன் மங்குவதாலும் ஏற்படும் இயலாமை காரணமாக பேசுவதில் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. இவை வெளிப்படையாகத் தெரிகின்றன. தவறான வார்த்தை மாற்றுப் பயன்பாடு, தவறான வார்த்தைகளை இடைச் செருகல் செய்தல், அரைகுறைபேச்சு, தொடர்பற்ற பேச்சு ஆகியவை மிகுந்து காணப்படுகின்றன. மேலும் படித்தல் மற்றும் எழுத்து அறி திறன்கள் படிப்படியாக இழக்கப்படுகின்றன. அல்சைமர் நோய் அதிகரிக்கும்போது, சிக்கலான, இயக்குநரம்புக்கல வரிசை முறை செயல்களில் ஒருங்கிணைப்பு குறைவதால் கீழே விழக்கூடிய அபாயம் ஏற்படக்கூடும். இந்த கட்டத்தில், நினைவக பிரச்சினைகள் மோசமடைகின்றன, மேலும் நோய் தாக்கப்பட்ட நபர் நெருங்கிய உறவினர்களைக்கூட அடையாளம் காணத் தவறிவிடலாம். முன்னர் நிலைத்திருந்த நீண்ட கால நினைவாற்றல், படிப்படியாகக் குறைந்து முடக்கமடைகிறது.
நோய்க்கான காரணம்
அல்சைமர் நோய்க்கான் காரணம் குறைந்த அளவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்நோய் பொதுவாக (70%) மரபணுக்களினால் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இந்நோய்க்கான பிற ஆபத்து காரணிகள்: தலையில் காயங்கள், மனச்சோர்வு, அல்லது உயர் இரத்த அழுத்தம் ஆகியவை அடங்கும். இந்நோயானது, மூளையில் உள்ள இரத்த உறைக்கட்டி மற்றும் சிக்கலாக்கு தெத்து நோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது.[11] பிற சாத்தியமான நோயறிதல் காரணங்களை மருத்துவ வரைவு படமாக்கல் மற்றும் இரத்த பரிசோதனைகள், நோய் மற்றும் அறிவாற்றல் சோதனை மூலம் நிரூபிக்க முடியும்.[12] ஆரம்ப கால அறிகுறிகள், பொதுவாக சாதாரண வயதினர்களுக்கு பொருத்தமற்றவை ஆகும். திட்டவட்டமான ஆய்வு மற்றும் உறுதிபடுத்தலுக்கு மூளைதிசுப் பரிசோதனை தேவைப்படுகிறது.
மன பயிற்சி, உடல் பயிற்சி, மற்றும் உடல் பருமன் தவிர்க்கும் பயிற்சி, ஆகியவை ஆபத்துகளைக் குறைக்கக் கூடும்; இருப்பினும், இத்தகைய பயிற்சிகள் மேற்கொள்ள வழங்கப்படும் பரிந்துரைகளை ஏற்பதற்கான ஆதாரங்கள் வலுவாக இல்லை.[13] ஆபத்துகளை குறைக்க எந்த மருந்துகளோ அல்லது கூடுதல் உபகரணங்களோ தேவை இல்லை.[14]
சிகிச்சைகள்
சில சிகிச்சைகள் தற்காலிகமாக நோய் அறிகுறிகளைக் குறைத்து உடல்நலத்தை மேம்படுத்தினாலும், நோயினை முழுமையாக குணப்படுத்த எவ்வித சிகிச்சைமுறையும் இல்லை.[15] அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள், உதவிக்காக மற்றவர்களை பெருமளவில் நம்பியிருக்கிறார்கள், தங்களின் கவனிப்பாளருக்கு இவர்கள் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் மற்றும் பொருளாதார ரீதியாகவும், அழுத்தம் அளிப்பார்கள். சுமையாக இருப்பார்கள்.[16] தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளில் உடற்பயிற்சி திட்டங்கள் மிகுந்த நன்மை பயக்கும். மேலும் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.[17]
சில சிகிச்சைகள் தற்காலிகமாக நோய் அறிகுறிகளைக் குறைத்து உடல்நலத்தை மேம்படுத்தினாலும், நோயினை முழுமையாக குணப்படுத்த எவ்வித சிகிச்சைமுறையும் இல்லை.[15] அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள், உதவிக்காக மற்றவர்களை பெருமளவில் நம்பியிருக்கிறார்கள், தங்களின் கவனிப்பாளருக்கு இவர்கள் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் மற்றும் பொருளாதார ரீதியாகவும், அழுத்தம் அளிப்பார்கள். சுமையாக இருப்பார்கள்.[16] தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளில் உடற்பயிற்சி திட்டங்கள் மிகுந்த நன்மை பயக்கும். மேலும் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.[17]
நோய்த்தாக்கியவர்களுக்கு, மன உடைவு உளக்கேடு மற்றும் நடத்தை பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை அல்லது உளப்பிணி சிகிச்சை பொருத்தமானது. இந்த சிகிச்சைகளால் கிடைக்கும் பலனைவிட ஆரம்பகால மரண ஆபத்து அதிகமாக இருப்பதால், இது வழக்கமாக பரிந்துரைக்கப்படுவதில்லை.[18][19] [20][21]
படத்தொகுப்பு
-
1901முதலான நோயாளி
-
கண்டறியச்சோதனை1
-
கண்டறியச் சோதனை2
-
கண்டறியச் சோதனை3
-
நோய் நரம்பு நிலை
-
தடுக்க...
-
ஆரம்ப மருந்தமைப்பு
-
தீவிர மருந்தமைப்பு
-
தீர்வு பயிற்சி1(snoezelen)
-
நோயாளின் விகிதம்
மேற்கோள்கள்:
- ↑ "Dementia". Fact sheet N°362. World Health Organization. March 2015. Archived from the original on 2015-03-20. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017.
{cite web}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ Hanns Hippius, Gabriele Neundörfer (2003 March). "The discovery of Alzheimer's disease". U.S. National Library of Medicine. pp. 101–108. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017.
{cite web}
: Check date values in:|accessdate=
and|date=
(help); Unknown parameter|Issue=
ignored (|issue=
suggested) (help); Unknown parameter|Journal=
ignored (|journal=
suggested) (help); Unknown parameter|Volume=
ignored (|volume=
suggested) (help) - ↑ "Alzheimer's disease". 05 February 2009. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017.
{cite web}
: Check date values in:|accessdate=
and|date=
(help); External link in
(help); Unknown parameter|Doi=
|Doi=
ignored (|doi=
suggested) (help) - ↑ "Younger/Early Onset Alzheimer's & Dementia". Alzeimer's association. alz.org. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017.
{cite web}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Brookmeyer R1, Johnson E, Ziegler-Graham K, Arrighi HM. (July 2007). "Forecasting the global burden of Alzheimer's disease". Alzheimers Dement. 3 (3): 186-191. doi:10.1016/j.jalz.. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/19595937.
- ↑ 6.0 6.1 6.2 "Alzheimer's disease". The BMJ 338: b158. 5 February 2009. doi:10.1136/bmj.b158. பப்மெட்:19196745.
- ↑ 7.0 7.1 "About Alzheimer's Disease: Symptoms". National Institute on Aging. பார்க்கப்பட்ட நாள் 28 December 2011.
- ↑ "Alzheimer's disease". The New England Journal of Medicine 362 (4): 329–44. 28 January 2010. doi:10.1056/NEJMra0909142. பப்மெட்:20107219. https://archive.org/details/sim_new-england-journal-of-medicine_2010-01-28_362_4/page/329.
- ↑ "Survival in dementia and predictors of mortality: a review". International Journal of Geriatric Psychiatry 28 (11): 1109–24. November 2013. doi:10.1002/gps.3946. பப்மெட்:23526458.
- ↑ Alzheimer's breakthrough hailed as 'turning point'
- ↑ "Alzheimer's disease.". Lancet 377 (9770): 1019–31. 19 March 2011. doi:10.1016/S0140-6736(10)61349-9. பப்மெட்:21371747.
- ↑ "Dementia diagnosis and assessment" (PDF). National Institute for Health and Care Excellence (NICE). Archived from the original (PDF) on 5 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "So, What Can You Do?" (in ஆங்கிலம்). National Institute on Aging. 29 July 2016. Archived from the original on 3 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூலை 2017.
{cite web}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "More research needed on ways to prevent Alzheimer's, panel finds". National Institute on Aging. 29 August 2006. Archived from the original (PDF) on 28 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 29 February 2008.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 15.0 15.1 "Dementia Fact sheet N°362". World Health Organization. March 2015. Archived from the original on 18 March 2015. பார்க்கப்பட்ட நாள் 13 January 2016.
- ↑ 16.0 16.1 Systematic Review of Information and Support Interventions for Caregivers of People with Dementia.
- ↑ 17.0 17.1 Forbes, Dorothy; Forbes, Scott C.; Blake, Catherine M.; Thiessen, Emily J.; Forbes, Sean (2015-04-15). "Exercise programs for people with dementia". The Cochrane Database of Systematic Reviews (4): CD006489. doi:10.1002/14651858.CD006489.pub4. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-493X. பப்மெட்:25874613.
- ↑ National Institute for Health and Clinical Excellence. "Low-dose antipsychotics in people with dementia". National Institute for Health and Care Excellence (NICE). Archived from the original on 5 December 2014. பார்க்கப்பட்ட நாள் 29 November 2014.
{cite web}
: More than one of|author=
and|last=
specified (help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Information for Healthcare Professionals: Conventional Antipsychotics". US Food and Drug Administration. 16 June 2008. பார்க்கப்பட்ட நாள் 29 November 2014.
- ↑ National Institute for Health and Clinical Excellence. "Low-dose antipsychotics in people with dementia". National Institute for Health and Care Excellence (NICE). Archived from the original on 5 December 2014. பார்க்கப்பட்ட நாள் 29 November 2014.
{cite web}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Information for Healthcare Professionals: Conventional Antipsychotics". US Food and Drug Administration. 16 June 2008. பார்க்கப்பட்ட நாள் 29 November 2014.