இச்மித்
'இச்மித் (İzmit ) என்பது துருக்கியின் கோகேலி மாகாணத்தின் ஒரு மாவட்டமும் அதன் மத்திய மாவட்டமுமாகும். இது அனத்தோலியாவின் வடமேற்குப் பகுதியில், இசுதான்புல்லுக்கு கிழக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் மர்மரா கடலில் உள்ள இசுமித் வளைகுடாவில் அமைந்துள்ளது. 31 திசம்பர் 2021 அன்றைய கணக்கெடுப்பின்படி, நகரத்தில் 367,990 மக்கள் வசிக்கின்றனர். கோகேலி மாகாணம் (கிராமப்புறங்கள் உட்பட) 2,033,441 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. துருக்கியில் உள்ள மற்ற மாகாணங்களைப் போலல்லாமல், இசுதான்புல் தவிர, முழு மாகாணமும் பெருநகர மையத்தின் நகராட்சிக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
இது நிகோமீடியா என்றும் அறியப்பட்டது. பழங்காலத்தில், மற்றும் கி.மு 286 மற்றும் 324 க்கு இடையில் உரோமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மிக பழைய தலைநகரமாக இருந்தது, 324 இல் கிரிசோபோலிசு போரில் இணை-பேரரசர் இலிசினியசு மீதான போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 324 மற்றும் 330 க்கு இடையில் கான்ஸ்டன்டைனின் இடைக்கால தலைநகராக நிகோமீடியா இருந்தது. அவர் அருகிலுள்ள நகரமான பைசாந்தியத்தை புதிய உரோமானிய தலைநகராக மறுகட்டமைத்து விரிவுபடுத்தினார்; 330 இல் நோவா ரோமா (புதிய உரோம்) என்ற பெயருடன் அதை முறையாக அர்ப்பணித்தார். [1] பின்னர் அதை கான்ஸ்டண்டினோபில் (நவீன இசுதான்புல் ) என மறுபெயரிட்டார். [1] கான்ஸ்டன்டைன் 337 இல் நிகோமீடியாவுக்கு அருகிலுள்ள ஒரு அரச மாளைகையில் இறந்தார். உதுமானியப் பேரரசின் ஆட்சியின் போது, இசுமித் கோகேலியின் சஞ்சக்கின் தலைநகராக இருந்தது.
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "Istanbul". britannica.com. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Archived from the original on 1 April 2009. பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
வெளி இணைப்புகள்
- Official website of Kocaeli (İzmit) Metropolitan Municipality பரணிடப்பட்டது 2008-06-28 at the வந்தவழி இயந்திரம் (in துருக்கிய மொழி and ஆங்கில மொழி)
- Photos of Izmit (Nicomedia) and its environs on Pinterest