இந்து மகாசபை

அகில பாரத இந்து மகாசபை
நிறுவனர்மதன் மோகன் மாளவியா
தொடக்கம்1915
தலைமையகம்புது டில்லி
கொள்கைஇந்துத்துவம்
நிறங்கள் காவி
இ.தே.ஆ நிலைபதிவுசெய்தகட்சி Unrecognised[1]
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
இணையதளம்
இந்து மகாசபை இணையதளம்
இந்தியா அரசியல்

இந்து மகாசபை அல்லது அகில பாரதிய இந்து மகாசபை (Akhil Bharatiya Hindu Mahasabha), இந்து தேசியவாதம் கொள்கை கொண்ட ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். பிரித்தானிய இந்தியப் பேரரசிடமிருந்து இந்துக்களின் உரிமைகளைக் காப்பதற்கு இந்து மகாசபை கட்சி 1915இல் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் இந்திய அரசியலில் இந்து மகாசபையின் தாக்கம் தொடர்ந்து காணப்படுகிறது.

மகாராஷ்டிர மாநில இந்து மகாசபை தலைவர்களுடன் வினாயக் தாமோதர் சாவர்க்கர் - இரண்டாம் வரிசையில், வலப்பக்கத்திலிருந்து நான்காம் நபர்

வரலாறு

இந்து மகாசபை கட்சி இந்துக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு, 1915ஆம் ஆண்டில் அமர்தசரஸ் நகரில், பண்டிட் மதன் மோகன் மாளவியா மற்றும் லாலா லஜபத் ராய் தலைமையில் துவக்கப்பட்டது. அரித்துவார் இதன் தலைமையகம் ஆகும்.[2] [3]

1920 ஆண்டில் வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்து மகாசபை கட்சியின் தலைவரானார். 1925 ஆம் ஆண்டில் கேசவ பலிராம் ஹெட்கேவர் இந்து மகாசபையிலிருந்து பிரிந்து சென்று, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற அரசியல் சார்பற்ற இந்துத்துவா கொள்கை கொண்ட புதிய இயக்கத்தை துவக்கியதால், இந்து மகாசபை கட்சி வலுவிழந்தது.

மகாத்மா காந்தி கொலையில்

இந்தியாவிலிருந்து, பாகிஸ்தானை பிரிக்கும், முகமது அலி ஜின்னா-ஜவகர்லால் நேருவின் திட்டத்தை இந்து மகாசபை கடுமையாக எதிர்த்தது. இதனால் ஏற்பட்ட இந்து-இசுலாமியர்கள் மோதல்களில், மகாத்மா காந்தி, இசுலாமியர்கள் சார்பில், இந்துக்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய காரணத்தினால், இந்து மகாசபை கட்சியைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, 30 சனவரி 1948இல் தில்லியில் மகாத்மா காந்தியை சுட்டு கொன்றார். காந்தி கொலை வழக்கில் வினாயக் தாமோதர் சாவர்க்கர் கைது செய்த அரசு, பின்னர் விடுவித்தது. 1951 இல் சியாமா பிரசாத் முகர்ஜி, இந்து மகாசபை கட்சியை விட்டு வெளியேறி, பாரதிய ஜனசங்கம் கட்சியை தோற்றுவித்தார்.

புதுச்சேரி மாநிலம்

இக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட புதுச்சேரி மாநில தலைவர் திரு இராஜ தண்டபாணி ஆவார்.[4] ஹனுமான் ஜெயந்தி அன்று  அயோத்தியாவிற்க்கு குடை யாத்திரை வருடந்தோறும் நடைபெறுகிறது.[5] ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு நடத்துகிறது.[6]

மேற்கோள்கள்

  1. http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/year2018/Notification-13.04.2018.pdf
  2. http://www.savarkar.org/content/pdfs/en/History%20of%20Hindumahasabha.pdf
  3. http://india.wikia.com/wiki/Akhil_Bharat_Hindu_Mahasabha
  4. "சங்கரன்கோவிலில் அதிமுகவிற்கு ஆதரவு அகில பாரத இந்து மகா சபை அறிவிப்பு". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=415386. பார்த்த நாள்: 16 January 2019. 
  5. "இ.ம.க., இந்து மகாசபா 30 தொகுதிகளில் போட்டி: 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு". இந்து தமிழ் திசை. https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-30-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/article5866505.ece. பார்த்த நாள்: 16 January 2019. 
  6. "அகில பாரத இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் சொத்தவிளை கடலில் கரைப்பு". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/09/02044018/Vinayagar-statues-are-performed.vpf. பார்த்த நாள்: 16 January 2019. 

இராஜதண்டபாணி

மாநிலத் தலைவர்

அகில பாரத இந்து மகாசபா

புதுச்சேரி மாநிலம்

மாநிலத் தலைவர்

அகில பாரத இந்து மகாசபா

ஆதார நூற்பட்டியல்

மேலும் படிக்க