குருதிச்சோகை
Anemia | |
---|---|
வலது பக்கத்தில் ஒரு பெண்ணின் வெளிறிய கைகளும், இடது பக்கத்தில் அவரது கணவனின் சாதாரண கைகளும் உள்ளது. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | hematology |
ஐ.சி.டி.-10 | D50.-D64. |
ஐ.சி.டி.-9 | 280-285 |
நோய்களின் தரவுத்தளம் | 663 |
மெரிசின்பிளசு | 000560 |
ஈமெடிசின் | med/132 emerg/808 emerg/734 |
ம.பா.த | D000740 |
குருதிச்சோகை அல்லது இரத்தசோகை (Anemia) என்பது உடலில் உள்ள இரத்தத்தில் ஏற்படும் ஒரு குறைபாட்டை குறிக்கிறது. இரத்தத்தில் உள்ள குருதிச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் ஏற்படுகின்ற குறைபாட்டை அல்லது இரத்தத்தில் இருக்கும் குருதிச் சிவப்பணுக்களுக்குச் சிவப்பூட்டும் பொருளான ஈமோகுளோபின் (Hemoglobin) என்னும் இரத்தப் புரதத்தின் (குருதிச் சிவப்பணு நிறமி அல்லது செந்நிறக் குருதியணு உடலியின் வண்ணப்பொருள்) அளவு குறைவாக இருக்கும் நிலையே இரத்தச்சோகை எனப்படும்[1][2]. இந்த ஈமோகுளோபின் ஆனது இரும்புச்சத்தினால் ஆனது. இரும்புச்சத்து போதாத நிலையில் ஈமோகுளோபினின் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தால் அது ஆக்சிசனுடன் இணையும் திறன் குறைவதாலோ, ஈமோகுளோபின் உருவாகும் அளவில் ஏற்படும் குறைபாட்டினாலோ இந்த நிலை ஏற்படலாம்.
குருதிச் சிவப்பணுக்களின் உள்பகுதியிலே ஈமோக்ளோபின் உள்ளது. இதன் மூலமாகத்தான் சிவப்பணுக்கள் தங்களுடைய பிரதான செயல்பாடான ஆக்சிசன் அல்லது பிராணவாயுவை நுரையீரலில் இருந்து இழையம் அல்லது திசுக்களுக்கு எடுத்துச்செல்கின்றன. இரத்தசோகை உடலில் ஏற்படும் பொழுது, அத்தியாவசிய பொருளான பிராணவாயுவின் பரிமாற்றத்தில் குறைவு ஏற்படுவதால், உடலின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன.
இரத்தத்தில் காணப்படுகின்ற அனைத்து ஒழுங்கின்மையிலும், இரத்தசோகை மிகவும் வழக்கமானதாகும். இரத்தசோகையில் பல வகைகள், பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றது. இரத்தசோகையை பலவகையிலும் வகைப்படுத்தலாம். குருதிச் சிவப்பணுக்களின் உருவத்தில் காணப்படுகின்ற மாற்றத்தின் அடிப்படை, இரத்தசோகை ஏற்படுகின்ற காரணத்தின் அடிப்படை, நோயின் தன்மை போன்ற பல்வேறு அடிப்படையில் இரத்தச்சோகை வகைப்படுத்தலாம். அடிப்படையில் இரத்தசோகை ஏற்படுவதற்கான காரணங்களை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்க முடியும். அவையாவன: (1) குருதிப்பெருக்கினால் ஏற்படும் அதிகப்படியான இரத்த இழப்பு (2) அதிகப்படியான குருதிச் சிவப்பணுக்களின் அழிவு (Hemolysis) (3) குறைவான சிவப்பு அணுக்களின் உற்பத்தி.
குறிகளும், அறிகுறிகளும்
இரத்தசோகை உள்ளவர்களிடம், இரத்தசோகையினாலோ அல்லது இரத்தசோகை ஏற்பட காரணமான நோயினாலோ பல நோய்க்குறி (signs) (ஒரு நோய் பீடித்திருப்பதை குறிக்கும் வெளிப்படையான அறிகுறி) மற்றும் பல உணர்குறி (Symptoms) (நோயினை உணர்த்தும் அறிகுறிகள்) இருக்கலாம். பலரில் எந்தவித நோய்க்குறியும் இல்லாமல் இருப்பதாலோ அல்லது மிகவும் குறைந்த அள்வில் நோய்க்குறி இருப்பதாலோ நோய் கண்டு பிடிக்கப்படாமலே போகலாம். தளர்ச்சி, பலவீனம், உடல்சோர்வு, கவனக்குறைவு போன்ற தெளிவற்ற அல்லது வரையறுக்கப்படாத பொது குறிகளையே பலரும் கொண்டிருப்பர்.
குறைந்தளவு ஆக்சிசனே இழையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதனால், அதனை ஈடுசெய்வதற்காக, இதயம் விரைவாக இயங்கி அதிகளவு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்த விளையும். அதனால், இதயத் துடிப்பு அதிகரிக்கும். மனித உடலில் 5 முதல் 6 லிட்டர் வரையிலான இரத்தம் உள்ளது. இதில் 100 மில்லி லிட்டர் இரத்தம் சுமார் 20 மில்லி லிட்டர் பிராணவாயுவை நுரையீரலில் இருந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச்செல்கிறது. உடல் உறுப்புக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து மீண்டும் இதயத்தை வந்தடையும் பொழுது 100 மில்லி லிட்டர் இரத்தம் சுமார் 15 மில்லி லிட்டர் பிராணவாயுவைக் கொண்டதாக இருக்கும். அதாவது 100 மில்லி லிட்டர் இரத்தம் 5 மில்லி லிட்டர் பிராணவாயுவை உடல் உறுப்புகளுக்கு அளிக்கிறது. இந்த வகையில் கணக்கிடும் பொழுது முழு உடலும் ஒரு நிமிடத்திற்கு 250 மில்லி லிட்டர் பிராணவாயுவைப் பயன்படுத்துகின்றன. இரத்தசோகை உள்ள நபர்களுக்கு பிராணவாயு பரிமாற்றத் தன்மையில் குறைபாடு ஏற்படுவதால், அவர்களின் உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, இதயம் ஒரு முறை துடிக்கும் பொழுது சுமாராக 70 மில்லி லிட்டர் இரத்தத்தைத் தனது இடது கீழறையில் (Left Ventricle) இருந்து வெளியேற்றுகிறது. ஒரு நிமிடத்தில் சுமார் 70 முறை இதயம் துடிப்பதால் 70 x 70 = 4900, சுமாராக 5000 மில்லி லிட்டர் இரத்தம் இதயத்தை விட்டு பிராணவாயு கலக்கப்பட்ட சுத்தமான இரத்தமாக வெளியேற்றப்படுகிறது. 100 மில்லி லிட்டர் இரத்தம், அது எடுத்துச்செல்லவேண்டிய 20 மில்லி லிட்டர் பிராணவாயுவை இரத்தசோகை காரணமாக எடுத்துச்செல்லவில்லை என்றால், இதயத்தின் அருகில் உள்ள சில சிறப்பு அம்சங்களை தனது சுவற்றினுள் கொண்ட இரத்தநாளங்கள் அதனை உணர்ந்து உடனடியாக மூளைக்குத் தெரிவிக்கிறது. அதன் விளைவாக இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதயத்துடிப்பின் அழுத்தமும் அதிகரிக்கும். இதன் விளைவாக மார்புப் படபடப்பு (PALPITATION) இதயத்தில் ஏற்படவும் வாய்ப்புண்டு.
மருத்துவர் இரத்தசோகை உள்ள நோயாளியைக் காணுகையில் பல அறிகுறிகளை உடலில் காண்பார். ஏற்கனவே இதய நோயுள்ளவர்களில் இதயவலி ஏற்படும். தீவிரமான நோய் நிலையில் இதயத் துடிப்பு மிகவும் அதிகரித்து, இதயத் திறனிழப்பிற்கான அறிகுறிகள் ஏற்படும். மேலும், தோல், நகங்கள், கண்ணின் உள்புறம், நாக்கு போன்ற பகுதிகள் வெளிறி இருப்பினும், இவற்றை நம்பத்தகுந்த அறிகுறிகளாகக் கொள்ள முடியாது. Hemolytic anemia வில் குருதிச் சிவப்பணுக்கள் அழிவடைவதால், மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். மேலும் எலும்புகளில் அமைப்பு மாற்றம், கால்களில் அழற்சிப்புண் (sickle cell disease) போன்ற நோய்களும் ஏற்படும்.
இரும்புச்சத்து குறைபாட்டினால் உணவற்ற சில பதார்த்தங்களை உண்ண ஆரம்பிப்பர். காகிதம், மெழுகு, சமைக்கப்படாத அரிசி, அழுக்கு, புல், தலைமுடி, கரி போன்றவற்றை உண்ணும் பழக்கத்தை அறிகுறியாகக் கொண்டிருப்பினும், இவை இரத்தச்சோகை இல்லாதவர்கள் சிலரிலும் காணப்படும். நாட்பட்ட இரத்தச்சோகை ஏற்படும்போது, குழந்தைகளின் நடத்தையில் குழப்பம் ஏற்பட்டு, சில நரம்பியல் தொடர்பான விரும்பத்தகாத விருத்தி நிலைகளால் தமது கல்வியில் பின் தங்கியவர்களாக மாறிவிடுவர். இரும்புச்சத்து குறைபாட்டால் வரும் இரத்தச்சோகையில் கால்களில் தளர்வும், அமைதியற்ற நிலையும் காணப்படும்.
மிகக்குறைந்த அளவிலான அறிகுறிகளாவன: கால், கைகளில் வீக்கம், தொடர்ந்த இதயவலி, வாந்தி, அதிக வியர்வை, மலத்துடன் குருதி.
நோய் நிர்ணயம்
பொதுவாக மருத்துவர்கள் இரத்தத்தின் முழு அமைப்புதிறன் பற்றிய ஆய்வினை செய்வார்கள், இதன் விளைவாக குருதிச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, ஈமோக்ளோபின் அளவு, குருதிச் சிவப்பணுக்களின் அளவு ஆகிய விபரங்களைக் கண்டறிவார்கள். இவ்வகையான சோதனை முறைகள் இலகுவில் செய்ய முடியாத இடங்களில் இரத்தப் பூச்சுக்களை (blood smear) நுணுக்குக்காட்டியில் பார்வையிடுதலும் நோய் நிர்ணயத்துக்கு உதவலாம்.
வயதும், பாலும் | Hb வரையறை (g/dl) | Hb வரையறை (mmol/l) |
---|---|---|
குழந்தைகள் (0.5–5.0 வயது) | 11.0 | 6.8 |
பிள்ளைகள் (5–12 வயது) | 11.5 | 7.1 |
பதின்ம வயதினர் (12–15 வயது) | 12.0 | 7.4 |
கருப்பமில்லாத பெண் (>15yrs) | 12.0 | 7.4 |
கர்ப்பமான பெண் | 11.0 | 6.8 |
ஆண் (>15yrs) | 13.0 | 8.1 |
இரத்தசோகையின் வகையீடு
உற்பத்தி அளவு / அழிகின்ற அளவு / இழக்கின்ற வேகம் போன்றவற்றின் அடிப்படையில் இரத்தசோகையை மூன்று வகையில் பிரிக்கலாம். "இயக்கம் சார்ந்த" வகையில் இரத்தசோகையின் வகையை நெருங்குவதே சரியான முறை என்று அறிஞர்கள் பலர் நம்புகிறார்கள். இம்முறை சார்ந்து இரத்தசோகையின் வகையை பிரிப்பதற்கு பலவேறு விபரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமானது, இரத்தத்தில் குருதிச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை. இக்குருதிச் சிவப்பணுக்களின் பரிணாமத்தில் சிவப்பு அணுக்கள் முழு முதிர்ச்சியை அடைவதற்கு சற்று முன்னர் உள்ள முந்திய நிலையைத்தான் Reticulocyte என்று அழைப்பர். இந்த வகையான அணுக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இரத்தசோகையின் தன்மையை உணர முடியும். ஒரு வகையான திட்டம் சார்ந்த அணுகுமுறை உள்ளது.
தடுக்கும் முறைகள்
- இரும்புச் சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளை உட்கொள்ளுதல்
- இரும்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல்
- தானிய வகைகள்- கோதுமை,கேழ்வரகு,கம்பு,பட்டாணி, சோயாபீன்ஸ், பொட்டுக்கடலை
- பழ வகைகள்- தா்புசணி,மாதுளை,சீதாப்பழம்,வாழைப்பழம்
- உலா்ந்த பழ வகைகள்-உலா்ந்த திராட்சை,பேரீச்சம்பழம்,அத்திப்பழம்
- காய்கறிகள்- முருங்கைகீரை,முளைக்கீரை,அரைகீரை,காலிபிளவா்,சுண்டைக்காய்,பாகற்காய்,வாழைக்காய்
- திண்பண்டங்கள்- கடலைமிட்டாய்,கடலை உருண்டை,பனங்கற்கண்டு,அதிரசம்,பொறி உருண்டை.[5]
Reticulocyte Production Index
உற்பத்தியாகும் சூசகம் - சிவப்பணுக்களின் குறைவான உற்பத்தி Reticulocyte Production Index இரத்தசோகைக்கு தக்க சிவப்பணுக்களின் response = அதிகமான சிவப்பணுக்களின் அழிவு அல்லது இரத்த இழப்பு அனால் சிவப்பணுக்களின் உற்பத்தியில் எந்த வித மாற்றமுமில்லை
சிவப்பு அணுக்களின் உற்பத்தியில் குறைபாடு மாறுபாடான MCV: சிவப்பு அணுக்களின் அதிகப்படியான அழிவு , மற்றும் உற்பத்தியில் நாள்பட்ட குறைபாடு சரியான அளவு MCV= திடீரென்ற acute அதிகப்படியான சிவப்பு அணுக்களின் அழிவு அல்லது இழப்பு , அதனால் எலும்புமச்சையால் ( Bone Marow) உடனடியாக தனது செயல் பட்டினி பாட்டினை அதிகரிக்க முடியாத நிலை
Macrocytic anemia (MCV>100) Normocytic anemia (80<MCV<100) Microcytic anemia (MCV<80)
சிவப்பணுக்களின் அளவை வைத்து இரத்தசோகையை வகைப்படுத்தும் முறை (Morphological approach) ; சிவப்பணுக்களின் அளவு அளவை MCV (Mean Corpuscular Volume) என்று பிரிக்க முடியும். சிவப்பணுக்கள் இயல்பான அளவை விட சிறியதாக இருக்குமாயின் (80 femtolitre விட குறைவாக ), இந்த வகை இரத்தசோகையை microcytic என அழைக்கமுடியும், சரியான கனஅளவில் இருந்தால் (80–100 fl) அதனை normocytic இரத்தசோகை என அழைக்கமுடியும் மற்றும் மிக அதிகமான கனஅளவில் இருந்தால் (over 100 fl), அதனை macrocytic இரத்தசோகை என அழைக்கமுடியும். இவ்வாறு அலசுவதன் மூலம் இரத்தசோகை ஏற்பட்ட காரணத்தை எளிதில் உணரமுடியும்.
அடிக்குறிப்புக்கள்
- ↑ MedicineNet.com --> Definition of Anemia பரணிடப்பட்டது 2014-01-23 at the வந்தவழி இயந்திரம் Last Editorial Review: 12/9/2000 8:31:00 AM
- ↑ merriam-webster dictionary --> anemia Retrieved on May 25, 2009
- ↑ eMedicineHealth > anemia article Author: Saimak T. Nabili, MD, MPH. Editor: Melissa Conrad Stöppler, MD. Last Editorial Review: 12/9/2008. Retrieved on 4 April 2009
- ↑ World Health Organization (2008). Worldwide prevalence of anaemia 1993–2005 (PDF). Geneva: World Health Organization. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789241596657. பார்க்கப்பட்ட நாள் 2009-03-25.
- ↑ இரத்தசோகை நோயைத்த தடுப்போம் வளா் இளம் பெண்களின் வாழ்வைக் காப்போம். யுனிெசப். 2010. pp. 6, 7.