இளவேனில் இலைக்கோசு (Bomdong, spring cabbage (கொரிய மொழி: 봄동) என்பது சீன இலைக்கோசு வகைகளில் ஒன்றாகும். இந்த தடிமனான இயல்புடைய இலைக்கோசுத் தாவரம், சுவை (இனிப்பு?) உள்ள இலைகளைப் பெற்றுள்ளது.[1][2] இதன் இலைகள் கொரிய பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கிம்சி (Kimchi) தயாரிக்க முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. சாலட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. உலகின் 70% பயிர் மகசூல், கொரிய நாடாகும்.[3] இதன் வளர்ச்சியின் போது, இவ்விலைகள் பூக்கள் போன்று பரந்து இருக்கின்றன.[4] இதன் அறுவடைக் காலம் கொரிய நாட்டின் இளவேனில் காலம் ஆகும். கொரிய நாட்டின் இக்காலம் ஏப்பிரலில் தொடங்கி சூன் மாதம் முடிவடைகிறது.[5] இக்காய்கறி விற்பனைக்கு சனவரி, மார்ச்சு மாதங்களில் பறிக்கப்படுகிறது.[3]
↑"봄동". Standard Korean Dictionary. National Institute of Korean Language. Archived from the original on 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 31 மார்ச்சு 2024.