ஈய நஞ்சூட்டல்
ஈய நஞ்சூட்டல் (Lead poisoning) என்பது ஈயத்தினால் மனித உடலில் ஏற்படும் ஒருவகை நச்சுத்தன்மை ஆகும்.[1] அடி வயிற்றில் வலி ஏற்படுதல், மலச்சிக்கல், தலைவலி, அரிப்புத் தோலழற்சி, மறதிநோய், மலட்டுத்தன்மை, கை மற்றும் கால்களில் வற்றுணர்வு ஏற்படுதல் ஆகியவை அறிகுறிகளாகும்.[2] இந்த நச்சுத் தாக்குதலினால் பெரும்பான்மையாக நடத்தையியலில் பிரச்சினைகளும் , 10 விழுக்காடு அறிவார்ந்த இயலாமைகளும் ஏற்படுகின்றன.[1] சில விளைவுகள் நிரந்தரமாக இருக்கக்கூடும்.[1] சில சமயங்களில் குருதிச்சோகை, முயலகப்பீடிப்பு, ஆழ்மயக்கம் மற்றும் இறப்புகளும் ஏற்படலாம்.[2]
அசுத்தமான காற்று, நீர், தூசி, உணவு மற்றும் சுகாதாராமற்ற பொருட்கள் போன்றவற்றின் மூலமாக இந்த நச்சுத்தன்மை ஏற்படலாம்.[1] ஈய வண்ணப்பூச்சு கொண்ட பொருட்களை குழந்தைகள் உட்கொள்வதால் இந்த நச்சுத் தன்மை குழந்தைகளைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.[1] வேலைகளில் உள்ள மன அழுத்தம் காரணமாக விடலைப் பருவங்களில் உள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.[3] குருதியில் உள்ள ஈயத்தின் அளவைப் பொருத்து இது அளவிடப்படுகிறது.[1] அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள நோய்த் தடுப்பு மையமானது குருதியில் உள்ள ஈயத்தின் அளவானது விடலைப் பருவத்தினருக்கு 10 µg/dl (10 µg/100 கி) மற்றும் குழந்தைகளுக்கு 5 µg/dl. எனும் அளவினையும் நிர்ணயித்துள்ளது.[4][5]
ஈய நஞ்சூட்டல் என்பது வருமுன் காக்கக்கூடியது ஆகும்.[1] ஈயத்தினால் செய்யப்பட்ட பொருட்களை வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் தவிர்த்தல் மற்றும் காற்றோட்டமான சூழல் போன்றவற்றின் மூலமாகவும் இதனைத் தவிர்க்கலாம்.[6][7] மேலும் நீர் அல்லது மண் போன்றவற்றில் இருந்து நீக்கப்படவேண்டிய ஈயத்தின் அளவுகள் மற்றும் வண்ணப்பூச்சு மற்றும் பாறை எண்ணெய் போன்றவற்றில் சட்டத்தின் படியான அளவுகளில் ஈயத்தினைச் சேர்ப்பது போன்றவற்றின் மூலமாகவும் இதனைத் தவிர்க்கலாம்.[1][6][8] இடுக்கல் சிகிச்சை போன்றவற்றின் மூலமாகவும் இதனைக் குணப்படுத்தலாம்.[8] இந்த சிகிச்சையானது குழந்தைகளின் குருதியில் உள்ள ஈயத்தின் அளவானது 40–45 µg/dl விட அதிகமாக இருக்கும் போது செய்யப்படுகிறது.[8][9]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Lead poisoning and health". WHO. September 2016. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
- ↑ 2.0 2.1 "Lead Information for Workers". CDC. 30 September 2013. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
- ↑ Gracia, RC; Snodgrass, WR (1 January 2007). "Lead toxicity and chelation therapy.". American Journal of Health-System Pharmacy 64 (1): 45–53. doi:10.2146/ajhp060175. பப்மெட்:17189579. https://archive.org/details/sim_american-journal-of-health-system-pharmacy_2007-01-01_64_1/page/45.
- ↑ "Advisory Committee On Childhood Lead Poisoning Prevention (ACCLPP)". CDC. May 2012. Archived from the original on 4 May 2012. பார்க்கப்பட்ட நாள் 18 May 2012.
- ↑ The Code of Federal Regulations of the United States of America (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 2005. p. 116. Archived from the original on 2017-11-05.
- ↑ 6.0 6.1 "Lead Information for Employers". CDC. 30 September 2013. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
- ↑ Needleman, H (2004). "Lead poisoning". Annual Review of Medicine 55: 209–22. doi:10.1146/annurev.med.55.091902.103653. பப்மெட்:14746518.
- ↑ 8.0 8.1 8.2 Dapul, H; Laraque, D (August 2014). "Lead poisoning in children.". Advances in pediatrics 61 (1): 313–33. doi:10.1016/j.yapd.2014.04.004. பப்மெட்:25037135.
- ↑ "What Do Parents Need to Know to Protect Their Children?". CDC. 30 October 2012. Archived from the original on 9 October 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
வெளியிணைப்புகள்
- Binns, H.J.; Ricks, O.B. "Helping Parents Prevent Lead Poisoning". ERIC Digest. Archived from the original on 2004-05-05. பார்க்கப்பட்ட நாள் 2018-10-06.
- Agency for Toxic Substances and Disease Registry (August 20, 2007). "Lead Toxicity". Environmental Health and Medicine Education. U.S. Department of Health and Human Services. Course: WB 1105.
- Health and Safety Executive UK. "Lead". Working safely with lead. HSE.
- Karalus, Daniel E (2010). "Review: The Great Lead Water Pipe Disaster". Electronic Green Journal 1 (29). http://escholarship.org/uc/item/6m68b873.
- Katz, N.L. (June 26, 2007). "City payout to Brooklyn family largest ever in lead poisoning". NY Daily News இம் மூலத்தில் இருந்து 2011-06-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110603180052/http://www.nydailynews.com/news/2007/06/26/2007-06-26_12m_for_toxic_hell.html.
- National Institute for Occupational Safety and Health. "Lead". NIOSH Workplace Safety & Health Topics. Centers for Disease Control and Prevention.
- National Pollutant Inventory. "Lead and compounds: Health effects". Fact Sheets. Canberra, Australia: Department of Sustainability, Environment, Water, Population and Communities. Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2018-10-06.
{cite web}
: Unknown parameter|=
ignored (help) - தேசிய பாதுகாப்பு குமுகம் (2008). "Lead Poisoning" (PDF). Fact Sheets. Itasca, Illinois, U.S.: National Safety Council.
- Küpper, Hendrik (2017). "Chapter 15. Lead Toxicity in Plants". In Astrid, S.; Helmut, S.; Sigel, R. K. O. (eds.). Lead: Its Effects on Environment and Health. Metal Ions in Life Sciences. Vol. 17. de Gruyter. pp. 491–500. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1515/9783110434330-015.