உலு சிலாங்கூர் நகராட்சி

உலு சிலாங்கூர் நகராட்சி

Hulu Selangor Municipal Council
Majlis Perbandaran Hulu Selangor
உள்ளாட்சி சட்டம் 1976
உலு சிலாங்கூர் நகராட்சி சின்னம்
வரலாறு
தோற்றுவிப்பு1 சனவரி 1977
தலைமை
நகர முதல்வர்
முகமட் அசுரி நோர் முகமட்
(Mohd Hasry Nor Mohd)
8 செப்டம்பர் 2021[1]
கட்டமைப்பு
உறுப்பினர்கள்24
அரசியல் குழுக்கள்
நகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
கூடும் இடம்
உலு சிலாங்கூர் நகராட்சி தலைமையகம்
Jalan Bukit Kerajaan, 44000 Kuala Kubu Bharu
சிலாங்கூர்
வலைத்தளம்
www.mphs.gov.my
அரசியலமைப்புச் சட்டம்
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976

உலு சிலாங்கூர் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Hulu Selangor; ஆங்கிலம்: Hulu Selangor Municipal Council); (சுருக்கம்: MPHS) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டம் (Hulu Selangor District); மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை நிர்வகிக்கும் நகராட்சி ஆகும். இந்த நகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[2]

உலு சிலாங்கூர் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கின் (Klang Valley)வடக்கில் 174,047 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது; ஏறக்குறைய மலாக்கா மாநிலத்தின் பரப்பளவைக் கொண்டது.[2]

உலு சிலாங்கூர் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மிகப் பெரியது. இது வடக்கில் பேராக் மாநிலத்தையும் கிழக்கில் பகாங் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இந்த மாவட்டம், உலு சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.

பொது

பொறுப்புகள்

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

  1. பத்தாங்காலி (Batang Kali)
  2. பூலோ தெலுர் (Buloh Telor)
  3. அம்பாங் பெச்சா (Ampang Pechah)
  4. உலு பெர்ணம் (Ulu Bernam)
  5. களும்பாங் (Kalumpang)
  6. கெர்லிங் (Kerling)
  7. கோலா குபு பாரு (Kuala Kubu Bharu)
  8. பெரெதாக் (Peretak)
  9. ராசா (உலு சிலாங்கூர்) (Rasa)
  10. செரண்டா (Serendah)
  11. சுங்கை குமுட் (Sungai Gumut)
  12. சுங்கை திங்கி Sungai Tinggi)
  13. புக்கிட் பெருந்தோங் (Bukit Beruntung)
  14. புக்கிட் செந்தோசா (Bukit Sentosa)
  15. சுங்கை புவாயா (Sungai Buaya)
  16. லெம்பா பெரிங்கின் (Lembah Beringin)
  17. உலு யாம் (Ulu Yam)
  18. உலு யாம் பாரு (Ulu Yam Baharu)

மக்கள் தொகையியல்

மலேசியப் புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கிய புள்ளிவிவரங்கள்:[3]

உலு சிலாங்கூரில் உள்ள இனக்குழுக்கள் (2010)
இனம் மக்கள்
தொகை
விழுக்காடு
மலாய்க்காரர்கள் 133,080 70.1%
சீனர்கள் 23,498 12.4%
இந்தியர்கள் 32,459 17.1%
இதர இனத்தவர் 9,698 0.4%
மொத்தம் 189,836 100%

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்