ஊமைத் திரைப்படம்
ஊமைத் திரைப்படம் (Silent film) என்பது சினிமாத்துறை பேசமுடியாத நிலையில் இருந்த கால கட்டத்தில் வெளியிடப்பட்ட திரைப்படத்தை குறிக்கும். அதாவது தொழில் நுட்பரீதியில் சினிமா வளர்ச்சி அடையாத கால கட்டத்தில் பேசும் ஒலி அல்லது சத்தம் வெளியில் கேட்காத நிலையில் திரையில் காண்பிக்கப்பட்ட படங்களை அழைத்த ஒரு பெயராகும்.[1] பேசும் ஒலி கேட்கக்கூடிய வளர்ச்சியை திரைப்படத்துறை அடைந்ததன் பின்னர் வெளியிடப்பட்ட திரைப்படங்களை "பேசும் படம்" என்று அழைத்தனர்.[2] தற்போது வெறுமனே திரைப்படம் என்று அழைக்கப்படுகின்றது.
சொல்விளக்கம்
ஒருவரின் பேச முடியாத தன்மையை ”ஊமை” என்று அழைப்பது போன்றே, திரைப்படத்துறையின் பேச முடியாத தன்மை நிலவியக் காலங்களில் திரையிடப்பட்ட திரைப்படத்தை "ஊமைப்படம்" என்றே அழைத்தனர். இருப்பினும் இவ்வாறான திரைப்படங்களை "சலனப்படம்", "நகரும்படம்", ”மெளனப்படம்” என்று வெவ்வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் ஊமைப்படம்". Archived from the original on 2009-07-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-19.
- ↑ தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்"
வெளியிணைப்புகள்
- இந்தியாவில் தயாரான முதல் ஊமைப்படம் பரணிடப்பட்டது 2009-07-01 at the வந்தவழி இயந்திரம் அரிச்சந்திரா
- தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ்