ஊரிசு கல்லூரி
ஊரிசு கல்லூரி | |
முந்தைய பெயர்கள் | ஆற்காடு மிசன் கல்லூரி |
---|---|
குறிக்கோளுரை | Nisi dominus frusta |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | கடவுள் இல்லாமல் வெற்றி இல்லை (In Vain without God) |
உருவாக்கம் | 1898 |
சார்பு | திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் |
தலைவர் | டி. எ. ராசவேலு |
முதல்வர் | டாக்டர்.சிடான்லி சோன்சு |
அமைவிடம் | , , 12°54′37.75″N 79°7′55.19″E / 12.9104861°N 79.1319972°E |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | வேலூர் மறைமாவட்டத்தின் தென்னிந்திய திருச்சபை |
இணையதளம் | http://www.voorheescollege.edu.in/ |
ஊரிசு கல்லூரி (Voorhees College) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில், வேலூர் நகரத்தில் உள்ளது. ஆற்காடு மிசன் உயர்நிலைப் பள்ளியானது சென்னை பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டபோது, 1898 ஆம் ஆண்டில் ஆற்காடு மிசன் கல்லூரியாக இக்கல்லூரி நிறுவப்பட்டது[1]. அமெரிக்காவின் மறுசீரமைப்பு திருச்சபையைச் சேர்ந்த கல்லூரியின் புரவலர்களான ரால்ப் மற்றும் எலிசபெத் ஊரிசு தம்பதியரின் நினைவாக கல்லூரிக்கு ஊரிசு கல்லூரி எனப் பெயரிடப்பட்டது[2]. 1902, 1911-ஆம் ஆண்டுகளில் ரால்ப் ஊரிசு தம்பதியினரால் அளிக்கப்பட்ட பண உதவியினால் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன.
முன்னதாக தொடக்கக் காலத்தில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கும் இருபாலர் கல்லுரியாக இருந்தபோது இக்கல்லூரி ரால்ப் மற்றும் எலிசபெத் ஊரிசு கல்லூரி என்றே அழைக்கப்பட்டு வந்தது. அறுபதுகளின் பிற்பகுதியில் அப்போதைய முதல்வராக இருந்த டாக்டர் ஏ. என். கோபால் தனது பதவி முடியும் போது பெண்களை கல்லூரியில் சேர்ப்பதை நிறுத்தி விட்டார். ரால்ப் மற்றும் எலிசபெத் என்ற புரவலர்களின் பெயரையும் கைவிட்டார். ஊரிசு கல்லூரி என்று இக்கல்லூரி பெயர் மாற்றம் கண்டது. ஊரிசு கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு முதல் முதுகலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன. வேலூர் மறைமாவட்ட தென்னிந்திய திருச்சபையால் ஊரிசு கல்லூரி சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. ’கடவுள் இல்லாமல் வெற்றி இல்லை’ என்பது இக்கல்லூரியின் குறிக்கோளாகும்.
வேலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் ஊரிசு கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. மேலும் 2005 ஆம் ஆண்டு தரம் “எ” முதல் நிலையைப் பெற்றுள்ளது. இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதா கிருட்டிணன் ஊரிசு கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது கல்லுரிக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
படிப்புகள்
பின்வரும் படிப்புகள் கல்லூரில் வழங்கப்படுகிறது
இளங்கலை படிப்புகள்
இளங்கலை-பாதுகாப்பு மற்றும் போர்த்திறஞ்சார்ந்தஆய்வுகள் இளங்கலை- ஆங்கிலம்,தமிழ்,வரலாறு,பொருளாதாரம் இளங்கலை அறிவியல்- வேதியியல்,கணினிஅறிவியல்,இயற்பியல், விலங்கியல்,தாவரவியல் இளங்கலை வணிகம் இளங்கலை வியாபார நிர்வாகம்
முதுகலை படிப்புகள்
முதுகலை-பாதுகாப்பு மற்றும் போர்த்திறஞ்சார்ந்த ஆய்வுகள் முதுகலை- வரலாறு,தமிழ்(சுயநிதியளிப்பு),ஆங்கிலம்(சுயநிதியளிப்பு),பொருளியியல்(சுயநிதியளிப்பு)
முதுகலை அறிவியல்
வேதியியல் (சுய நிதியளிப்பு),கணிதம்,இயற்பியல் (சுய நிதியளிப்பு),விலங்கியல்
ஆராய்ச்சி படிப்புகள்
தமிழ்,வரலாறு,வர்த்தகம்,விலங்கியல்,இயற்பியல்,வேதியியல்,கணிதம்
முனைவர்
வர்த்தகத்தில்,வரலாற்றில்,தமிழில்,விலங்கியல்
மேற்கோள்கள்
- ↑ "A short history of the college". பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.
{cite web}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Hope College, Michigan. Elizabeth Rodman Voorhees (PDF). Hope College, Michigan.