எகிப்தின் பதினேழாம் வம்சம்
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் 17-ஆம் வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1580–கிமு 1550 | |||||||||
தலைநகரம் | தீபை | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 1580 | ||||||||
• முடிவு | கிமு 1550 | ||||||||
|
எகிப்தின் பதினேழாம் வம்சம் (Seventeenth Dynasty of Egypt - Dynasty XVII) (ஆட்சிக் காலம்:கிமு 1580 - கிமு 1550), எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது ஆட்சி செய்த மூன்றாவது வம்சம் ஆகும். பண்டைய எகிப்தை கிமு 1580 முதல் கிமு 1550 முடிய 30 ஆண்டுகள் இவ்வம்சத்தவர்கள் ஆண்டனர்.[1] இவ்வம்சத்தவர்கள் மேல் எகிப்தின் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டவர்கள். இவர்களது சமகாலத்தவர்கள் பதினைந்தாம் வம்சத்தவர்களான ஐக்சோஸ் எனும் போனீசியா நாட்டவர்கள் ஆவார். பதினாறாம் வம்சத்தவர்களை வென்ற பதினேழாம் வம்சத்தவர்கள், பின்னர் கீழ் எகிப்தின் ஐக்சோஸ் ஆட்சியாளர்களை வென்று புது எகிப்து இராச்சியம் அமைத்தனர் .
17-ஆம் வம்ச பார்வோன்கள்
பார்வோன் | உருவம் | ஆட்சிக் காலம் | |||||
---|---|---|---|---|---|---|---|
ரகதேப் | கிமு 1585 | ||||||
முதலாம் சோபேகேம்சப் | 7 | 7 | |||||
இரண்டாம் சோபேகேம்சப் | |||||||
ஐந்தாம் இன்டெப் | |||||||
ஆறாம் இன்டெப் | |||||||
ஏழாம் இன்டெப் | |||||||
செனக்தென்ரெ அக்மோஸ் | |||||||
செக்கனென்ரே தாவோ | கிமு 1558/1560 முதல் கிமு 1558 | ||||||
காமோஸ் | கிமு 1555 - 1550 |
இவ்வமசத்தின் இறுதி பார்வோனாக நெப்மாத்த்ரி என்பவர் கருதப்படுகிறார். [3]
பண்டைய எகிப்திய வம்சங்கள்
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641
மேற்கோள்கள்
- ↑ Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 481. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
- ↑ Seventeenth Dynasty of Egypt
- ↑ K. S. B. Ryholt, Adam Bülow-Jacobse, The political situation in Egypt during the second intermediate period, c. 1800-1550 B.C., pp 168, 170, 171, 179, 204, 400