ஐனு இனக்குழு
அயினு மக்கள், 1904 படம். | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(50,000 அரை அல்லது அதற்கு மேற்பட்ட அயினு மரபுவழியைச் சேர்ந்தோர். 150,000 ஓரளவு அயினு மரபுவழு கொண்ட ஜப்பானியர் *(அயினுக் கலப்புள்ள ஜப்பானியரின் எண்ணிக்கை 1,000,000 வரை இருக்கலாம் எனச் சிலர் மதிப்பிடுகிறார்கள். சரியான எண்ணிக்கை தெரியவில்லை) ஜப்பானியருக்கு முந்திய காலம்: ~50,000, ஏறத்தாழ எல்லோரும் தூய அயினுக்கள்.) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சப்பான் உருசியா | |
மொழி(கள்) | |
அயினு மரபுவழி மொழியாகும். அலெக்சாண்டர் வோவின் என்பவரின் ஆய்வுப்படி, 1996 இல் இம் மொழியைச் சரளமாகப் பேசக்கூடிய 15 பேர் மட்டும் இருந்தனர். இதன் சக்காலின் கிளைமொழியைப் பேசக்கூடிய கடைசி நபர் 1994 ஆம் ஆண்டு இறந்தார். பெரும்பாலான அயுனு மக்களின் தாய்மொழி இன்று ஜப்பானியம் அல்லது ரஷ்ய மொழி ஆகும். *Gordon, Raymond G., Jr. (ed.) (2005). Ethnologue: Languages of the World, Fifteenth edition. Dallas: SIL International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55671-159-X. {cite book} : |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)[1][2][3] | |
சமயங்கள் | |
Animism, some are members of the Russian Orthodox Church |
அயினு இனக்குழு ஜப்பானின், ஹொக்கைடோ, குரில் தீவுகள், ரஷ்யாவின் ஒரு பகுதியான சக்காலின் தீவு ஆகியவற்றில் வாழும் ஒரு இனக்குழுவாகும். வடக்கு ஹொன்ஷுவின் சில பகுதிகளிலும், கம்சத்கா குடாநாட்டின் தெற்குப்பக்க மூன்றிலொரு பகுதியிலும், முற்காலத்தில் இவர்கள் வாழ்ந்திருக்கக் கூடும் எனச் சிலர் எண்ணுகிறார்கள். இவர்களைக் குறிக்கப் பரவலாகப் பயன்படும் இனப்பெயர், அயினு மொழியின் ஹொக்கைடோ கிளைமொழிகளின் மனிதன் எனப் பொருள்படும் ஐனு (aynu) என்பதில் இருந்து பெறப்பட்டது. எமிஷி, எசோ, யெசோ போன்ற இவ்வினத்தவரைக் குறிக்கும் பெயர்கள் ஜப்பானிய மொழிப் பெயர்களாகும். இவையும், மனிதன் என்னும் பொருள் குறிக்கும் என்சிவ் (enciw) அல்லது எஞ்ஜு (enju) எனும் தற்கால சக்காலின் அயினு மொழிச் சொல்லின் பழங்கால வடிவம் என நம்பப்படுகின்றது. தோழர் என்னும் பொருள்படும் உத்தாரி என்னும் சொல்லையே இவ்வினத்தவரில் சிலர் விரும்புகிறார்கள். இவர்களின் தொகை சுமார் 150,000 இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இவர்களில் பலர் தங்கள் அடையாளத்தை மறைப்பதாலும், சிலருக்கு அவர்கள் அடையாளம் தெரியாமலே இருப்பதாலும், இனவாதத்தில் இருந்து தப்புவதற்காகப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடமிருந்து அவர்கள் அடையாளத்தை மறைப்பதாலும், அவர்களது எண்ணிக்கையைச் சரியாகக் கூறமுடியாது.
மேற்கோள்கள்
- ↑ "Ainu seikatsu jittai chōsa" アイヌ生活実態調査 [Survey on the actual living conditions of the Ainu] (in ஜப்பானியம்). ஹொக்கைடோ. பார்க்கப்பட்ட நாள் April 20, 2018.
- ↑ "Results of the All-Russian Population Census of 2010 in relation to the demographic and socio-economic characteristics of individual nationalities". Federal State Statistics Service (in ரஷியன்). March 2019. Archived from the original on July 15, 2012. பார்க்கப்பட்ட நாள் January 28, 2013.
- ↑ "2010 Census: Population by ethnicity". Federal State Statistics (in ரஷியன்). Archived from the original on April 24, 2012.