ஒப்பீட்டுச் சட்டம்
ஒப்பீட்டு சட்டம் (Comparative law) அல்லது ஒப்பீட்டு சட்டவியல் என்பது பலதரப்பட்ட நாடுகளின் சட்டங்கள் மற்றும் சட்ட அமைப்பு முறைகளின் வேற்றுமை மற்றும் ஒற்றுமைகளைப் பற்றி படித்தலாகும். மிகச்சரியாக குறிப்பிட்டால், இதில் உலகின் நிலவிலுள்ள மாறுபட்ட சட்ட அமைப்புகளை பற்றிய படிப்பை உள்ளடக்கியதாகும். பொதுச் சட்டம், இஸ்லாமியச் சட்டம், இந்து சட்டம், சீனச் சட்டம், நாட்டுச் சட்டம், சமூகவியச் சட்டம், கெணோன் சட்டம், யூதச் சட்டம் ஆகியன இதில் உட்பட்டதாகும். ஒப்பீடல் ஏற்றேடுக்காவிட்டாலும் கூட வெளிநாட்டு சட்ட அமைப்பை விளக்கல் ஆய்தல் ஆகியன இதில் உட்படும். தற்போது ஒப்பீட்டு சட்டம் கூடிவருவதற்கான முக்கியக் காரணம் தேசம்கடந்திய-மயமாக்கம், பொருளாதார உலகமயமாக்கம் மற்றும் மாந்தர்மாட்சி-மயமாக்கம். ஒப்பீட்டு சட்டம் என்பது ஒரு சட்டம் அல்ல மாறாக, அறிவுசார் சொத்தை பாதுகாத்தல், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், குற்றவிய சட்டம் மற்றும் செயற்படுமுறை, வரிக் கொள்கை ஆகிய சட்டங்களை ஒப்புமை செய்தலை முக்கிய விடயமாகக் கொண்ட படிப்புமுறை.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Leibniz, Dissertatio de origine Germanorum (1697), Epistolica de Historia Etymologica Dissertatio, (1712).
- ↑ Baron De Montesquieu (1949). The Spirit of Law. New York: Hafner.
- ↑ Raymond Cocks (2004). Sir Henry Maine: A Study in Victorian Jurisprudence. Cambridge University Press. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521524964.