காட்மாண்டு
காட்மாண்டூ | |
---|---|
குறிக்கோளுரை: என் மரபு, என் பெருமை, என் காட்மாண்டூ | |
நாடு உள்ளூராட்சி | நேபாளம் காட்மாண்டூ மாநகரம் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1.5 மில்லியன் |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள நேரம்) |
இணையதளம் | http://www.kathmandu.gov.np/ |
காத்மாண்டு அல்லது காட்மாண்டூ (நேபாள மொழி:काठमाडौं, நேபாள் பாசா:यें) நேபாளத்தின் தலைநகரமாகும். இது மத்திய நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நேபாள நாட்டில் உள்ள நான்கு உலகப் பாரம்பரியக் களங்களில் காத்மாண்டு சமவெளியும் ஒன்றாக உள்ளது.[1]
வரலாறு
காத்மாண்டு சமவெளியில் கிமு 900 முதலே மனிதக் குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும். கௌதம புத்தர் தமது சீடருடன் கிமு 6வது நூற்றாண்டளவில் சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் இல்லை.
உலக பாரம்பரியக் களங்கள்
காத்மாண்டு சமவெளியில் அமைந்த ஏழு பண்பாட்டு உலக பாரம்பரியக் களங்கள்;.[2]
- காத்மாண்டு நகரச் சதுக்கம்
- பக்தபூர் நகர சதுக்கம்
- பதான் தர்பார் சதுக்கம்
- பசுபதிநாத் கோவில்
- சங்கு நாராயணன் கோயில்
- பௌத்தநாத்து
- சுயம்புநாதர் கோயில்
இதனையும் காண்க
- காத்மாண்டு சமவெளி
- திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- திரிபுவன் பல்கலைக்கழகம்
- நேபாளத்தின் வரலாறு
- சிங்க அரண்மனை
- நாராயணன்ஹிட்டி அரண்மனை
2015 நிலநடுக்கம்
ஏப்ரல் - மே 2015 நிலநடுக்கத்தில் காத்மாண்டு நகரம் மிகவும் சேதமடைந்தது. எண்ணற்ற மனித உயிர்களை கொள்ளை கொண்டது. தொன்மை மிக்க கட்டிடங்களையும், வழிபாட்டுத் தலங்களும் சேதமடைந்தது.[3]
-
2015 நிலநடுக்கம்
மேற்கோள்கள்