காட்டு நீர்நாய்

காட்டு நீர்நாய்[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Mustelidae
துணைக்குடும்பம்: Lutrinae
பேரினம்: Amblonyx
Rafinesque, 1832
இனம்: A. cinerea
இருசொற் பெயரீடு
Amblonyx cinerea
Illiger., 1815
Oriental small-clawed otter range
வேறு பெயர்கள்

Amblonyx cinereus
Aonyx cinereus
Aonyx cinerea

காட்டு நீர்நாய் (Oriental small-clawed otter) இது ஒரு பாலூட்டி இனம் ஆகும் இது காடுகளில் உள்ள குட்டைகளில் வசிக்கிறது இது தோற்றத்தில் கீரிப்பிள்ளையைப் போல் தோன்றினாலும் நீர்நாய் வகைகளில் ஒன்றாகும். காட்டு நீர்நாய் ஆற்று நீர்நாயை விட சிறிதாகக் காணப்படுகிறது. இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது. இது கூச்ச சுபாவம் கொண்டதாக இருப்பதால் மனிதர்களைக் கண்டால் ஒளிந்து கொள்ளும் குணத்தைக்கொண்டுள்ளது. [3] தற்போதைய நிலையில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு இந்த விலங்கினை அழிந்துவரும் இனமாக அறிவித்து, இதனைப் பாதுகாக்க வலியுறுத்தியுள்ளது. இதனை மனிதர்கள் வேட்டையாடுவதாலும், இயற்கை சூழ்நிலையினாலும் இது அழிந்துவரும் இனமாகக் கருதப்படுகிறது

மேற்கோள்கள்