காலோ இராச்சியம்

காலோ இராச்சியம்
Galuh Kingdom
Kerajaan Galuh
669–1482
காலோ இராச்சியம் - சுண்டா இராச்சியம்
காலோ இராச்சியம் - சுண்டா இராச்சியம்
தலைநகரம்Kawali
பேசப்படும் மொழிகள் சுண்டா மொழி சமசுகிருதம்
சமயம்
இந்து சமயம், பௌத்தம் சுண்டா விவித்தான்
அரசாங்கம்முடியாட்சி
மகாராசா, பிரபு 
வரலாறு 
• தருமநகராவில் இருந்து விலகல்
669
• சுண்டா - காலோ ஒருங்கிணைப்பு
1482
நாணயம்பூர்வீக தங்கம்; வெள்ளி நாணயங்கள்
முந்தையது
பின்னையது
தருமநகரா இராச்சியம்
சுண்டா இராச்சியம்

காலோ இராச்சியம் (ஆங்கிலம்: Galuh Kingdom; இந்தோனேசியம்: Kerajaan Galuh; சுண்டா மொழி: ᮊᮛᮏᮃᮔ᮪ ᮌᮜᮥᮂ) என்பது இன்றைய இந்தோனேசியாவில் உள்ள தாத்தார் சுண்டா (Tatar Sunda) கிழக்குப் பகுதியில் அமைந்து இருந்த ஓர் இடைக்கால சுண்டானிய இராச்சியமாகும். தாத்தார் சுண்டா பகுதி என்பது தற்போது மேற்கு ஜாவா மாநிலம்; மற்றும் மத்திய ஜாவாவின் பான்யூமாசான் குறுமாநிலத்தை (Banyumas Regency) உள்ளடக்கிய நிலப்பகுதி ஆகும்.

இதன் மேற்கில் சித்தாரம் ஆறு (Citarum River), கிழக்கில் பெமாலி ஆறு (Pemali River) மற்றும் செராயு ஆறு (Serayu River) ஆகிய ஆறுகள் இருந்தன.

இந்த இராச்சியம், 7-ஆம் நூற்றாண்டில் தருமநகரா இராச்சியத்தில் இருந்து பிரிந்து சென்ற இராச்சியமாக அறியப்படுகிறது.[1]

பொது

காலோ இராச்சியத்தின் சங்குவாங் கோவில் (1)
காலோ இராச்சியத்தின் சங்குவாங் கோவில் (2)

இந்த இராச்சியம் பாரம்பரியமாக, கிழக்கு பாராயங்கான் (Eastern Parahyangan) பகுதியுடன் பண்பாட்டு அடிப்படையில் தொடர்புடையது. இதன் தலைநகரம் முதலில் கரங்காமுல்யான் (Karangkamulyan) எனும் இடத்தில் அமைந்திருந்தது.

பின்னர் சௌங்காலா (Saunggalah), குனிங்கான் குறுமாநிலம் (Kuningan Regency) மற்றும் கவாலி (Kawali) ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டது.[2] காலோ என்பதன் சொற்பிறப்பியல் பழைய சுண்டானிய மற்றும் காவி மொழிச் (Kawi language) சொல்லான "இரத்தினம்" என்பதைக் குறிக்கிறது.[3]

வரலாறு

இந்த இராச்சியத்தைப் பற்றிய பெரும்பாலான சான்றுகள்; உள்ளூர் சுண்டானிய புராணங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இருந்து சேகரிக்கப்பட்டு, பந்தூன் சுண்டா (Pantun Sunda) எனும் வாய்வழி புராணக் கதைகள் மூலம் பரவின. இந்த இராச்சியயத்தில்தான் சுண்டானிய காவியமான சியோங் வானரா (Ciung Wanara) நாட்டுப்புறக் கதை தோன்றியது.[4]

பிற்காலத்தில் இயற்றப்பட்ட வரலாற்றுப் பதிவுகளான செரித்தா பாராயாங்கான் (Carita Parahyangan) மற்றும் வங்சகீர்த்தா (Wangsakerta) எனும் கையெழுத்துப் பிரதிகளில் இருந்தும் ஓரளவிற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த இராச்சியம் விட்டுச் சென்ற ஒரே கல்வெட்டு கவாலியில் கண்டுபிடிக்கப்பட்ட 14-ஆம் நூற்றாண்டின் ஆசுதானா கெடே கல்வெட்டு (Astana Gede inscription) ஆகும்.[5]

மேற்காணும் சான்றுகளில் இருந்து, காலோ இராச்சியம் என்பது ஓர் இந்து இராச்சியம் என்றும்; பிற்கால சுண்டா இராச்சியத்தின் முன்னோடி என்றும் முடிவு செய்யப்பட்டது.[6] கலிங்க இராச்சியம் (Kalingga Kingdom) தொடங்கி மயாபாகித்து பேரரசு சகாப்தம் வரையில் இருந்த ஜாவானிய இராச்சியங்களின் காலக்கட்டமே இந்த காலோ இராச்சியத்தின் காலக்கட்டமாக இருக்கலாம் என உறுதி செய்யப்பட்டதும்.[7]

வங்சகீர்த்தா கையெழுத்துப் பிரதி

வங்சகீர்த்தா (Wangsakerta) கையெழுத்துப் பிரதியின்படி, காலோ இராச்சியம் என்பது தருமநகரா இராச்சியத்தின் ஓர் அடிமை மாநிலமாக இருந்தது. தருமநகரா இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதன் ஆட்சியாளரான காலோ இராச்சியத்தின் வீராதி கந்தையன் (Wretikandayun), என்பவர் மேற்கில் உள்ள சுண்டா இராச்சியத்தில் இருந்து தன் இராச்சியத்தைத் தனியாகப் பிரித்தார்.

காலோ இராச்சியத்தின் பட்டத்து இளவரசர் மத்திய ஜாவாவில் இருந்த ஓர் இந்து இராச்சியமான கலிங்க இராச்சியத்தின் அரசியான கலிங்க அரசி சீமாவின் (Maharani Shima) மருமகனாக இருந்தார். அதனால் கலிங்க இராச்சியத்தின் ஆதரவை வீராதி கந்தையன் பெற்றார். தருமநகரா இராச்சியத்தை இரண்டு இராச்சியங்களாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தருமநகரா அரசர் தருஸ்பாவா

அந்தக் கட்டத்தில் தருமநகரா இராச்சியத்தின் அரசராக தருஸ்பாவா (King Tarusbawa of Sunda Kingdom) என்பவர் இருந்தார். அவர் ஓர் இக்கட்டான நிலையில் இருந்ததாலும், உள்நாட்டுப் போரை விளைவிக்க விரும்பாததாலும், வீராதி கந்தையனின் கோரிக்கைக்கு இணங்கினார். 670-ஆம் ஆண்டில், தருமநகரா இராச்சியம் என்பது மேற்கில் சுண்டா இராச்சியம் என்றும் கிழக்கில் காலோ இராச்சியம் என்றும் பிரிக்கப்பட்டது:

சுண்டா இராச்சியத்தின் எதிர்முனை இராச்சியமாக, காலோ இராச்சியம் ஒரு தனிப்பட்ட இராச்சியமாகத் தொடர்ந்தது. பின்னர் 10-ஆம் நூற்றாண்டில் சுண்டா இராச்சியத்திற்குள் காலோ இராச்சியம் உள்வாங்கப்பட்டது. பின்னர் சிறிது காலம் கழித்து, இரு இராச்சியங்களும் ஒன்றிணைக்கப்பட்டு சுண்டா - காலோ ஐக்கிய இராச்சியமாக (United Kingdom of Sunda and Galuh) மாறியது.[8]

காலோ அரசர்கள்

ஜாவா தீவில் காலோ இராச்சியத்தின் அமைவிடம்
காலோ இராச்சியத்தின் கொடி
சுண்டா இராச்சியத்தின் கொடி
  1. வீராதி கந்தையன் (Wretikandayun) (Rahiyangta ri Menir, 617-702)
  2. பிரபு சூராங்கனா (Mandiminyak) (Prabu) (Suraghana) (802-709)
  3. சன்னா (Sanna) (Séna/Sannaha) (609-916)
  4. பூர்ப சூரா (Purbasora) (916-723)
  5. மாதரம் சஞ்சயா (Rakeyan Jambri) (Sanjaya) (Harisdarma) (723-732)
  6. தம்பேரான் வர்மவிஜயா (Tamperan Barmawijaya) (732-739)
  7. சியோங் வானரா (Sang Manarah) (Ciung Wanara) (739-746)
  8. இராக்கையன் மேடாங் (Rakeyan Medang) (746-753)
  9. இராக்கையன் திவூஸ் (Rakeyan Diwus) (753-777)
  10. இராக்கையன் உவூஸ் (Rakeyan Wuwus) (777-849)
  11. சாங் உஜோங் செரியன் (Sang Hujung Carian) (849-852)
  12. இராக்கையன் கெண்டாங் (Rakeyan Gendang) (852-875)
  13. தேவா சாங்கியாங் (Dewa Sanghiyang) (875-882)
  14. பிரபு சாங்கியாங் (Prabu Sanghiyang) (882-893)
  15. பிரபு தித்தியா மகாராஜா (Prabu Ditiya Maharaja) (893-900)
  16. விந்துராஜா (Sang Lumahing Winduraja) (900-923)
  17. கீர்த்தா (Sang Lumahing Kreta) (923-1015)
  18. விந்துராஜா (Sang Lumahing Winduraja) (1015-1033)
  19. இராக்கையன் தருமசிகாசா (Rakeyan) (Darmasiksa) (1033-1183)
  20. தாமன் (Sang Lumahing Taman) (1183-1189)
  21. தஞ்சோங் (Sang Lumahing Tanjung) (1189-1197)
  22. கிக்கிஸ் (Sang Lumahing Kikis) (1197-1219)
  23. கிடிங் (Sang Lumahing Kiding) (1219-1229)
  24. அக்கி கோலோட் (Aki Kolot) (1229-1239)
  25. பிரபு மகாராஜா (Prabu Maharaja) (1239-1246)
  26. பிரபு புனிசூரா (Prabu Bunisora) (1357-1371)
  27. மகாபிரபு (Mahaprabu) (Niskala Wastu Kancana) (1371-1475)
  28. தேவ நிஸ்கலா (Dewa Niskala) (1475-1483)
  29. நிங்கரதுவாங்கி (Ningratwangi) (1483-1502)
  30. ஜெயநிங்கிரதன்(Jayaningrat) (1502-1528)
  31. மகாராஜா சாங்யாங் (Maharaja Galuh) ( 1528-1595 )

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்