வர்மதேவ வம்சம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/Sanur_Belankong_Pillar.jpg/220px-Sanur_Belankong_Pillar.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Airlangga.jpg/220px-Airlangga.jpg)
வர்மதேவ வம்சம் ( Warmadewa dynasty ) என்பது இந்தோனேசியாவின் பாலி தீவில் இருந்த ஓர் அரச வம்சமாகும்.
வரலாறு
வர்மதேவன் என்று அழைக்கப்படும் செரி கேசரி வருமதேவன் (Sri Kesari Warmadewa), பல்வேறு மன்னர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு பட்டனர் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. இந்தச் சூழலில் "வம்சம்" என்ற சொல் பொதுவாக பரம்பரை பரம்பரை அல்லாமல், அவர்களின் தலைப்புகளில் பொதுவான கூறுகளைப் பகிர்ந்து கொள்ளும் மன்னர்களின் குழுவைக் குறிக்கிறது.
10-ஆம் நூற்றாண்டில் சிறீகேசரி வர்மதேவன் என்பவரால் இந்த வம்சம் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த கூற்றுக்கான ஒரே ஆதாரம், பெலாஞ்சோங் கல்தூணில் (பி.13) வர்மதேவன் என்ற பெயரைப் பயன்படுத்திய முதல் பாலி மன்னர் இவராவார்.
பெலாஞ்சோங் கல்தூண்
இவர்தான் மரபுவழியை நிறுவினார் என்பதற்கு வெளிப்படையான சான்றுகள் எதுவும் இல்லை. இவர் அதன் ஆரம்பகால உறுப்பினர் என்பதற்கு மட்டுமே சான்றுகள் இருக்கின்றன. இந்தப் பெயரின் சிறீகேசரி வர்மா என்ற பகுதி மட்டுமே கல்லில் தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் இறுதி உறுப்பு '-தேவா' என அங்கு எழுதப்பட்டதாக யூகிக்கப்படுகிறது. ஆனால் இப்போது அதுவும் தெளிவாக இல்லை.
அபாங் புரா படூர் ஏ கல்வெட்டு
வம்சம் பல தலைமுறைகளாக செழித்திருந்தது. 6 ஏப்ரல் 1011 தேதியிட்ட அபாங் புரா படூர் ஏ கல்வெட்டில் (Abang Pura Batur A inscription), வர்மதேவன் என்ற தலைப்பைப் பயன்படுத்திய இறுதி ஆட்சியாளர் புகழ்பெற்ற மன்னர் உதயனா வருமதேவன் என்பவரைப் (Udayana Warmadewa) பற்றிய குறிப்புள்ளது.[1]
புசாங்கன் கல்வெட்டில் (1041) (Pucangan inscription) கொடுக்கப்பட்டுள்ள ஆயர்லங்காவின் (Airlangga) வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில், 1020 முதல் 1040களில் சாவகத்தின் புகழ்பெற்ற மன்னரான ஆயர்லங்காவின் தந்தை உதயனா வருமதேவன் என்று பல வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது.
பண்டைய பாலி இராச்சியத்தின் அரசர்கள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Dewa_Agung_in_1908.jpg/250px-Dewa_Agung_in_1908.jpg)
வருமதேவா அரச மரபு
- செரி கேசரி வருமதேவன் - (Sri Kesari Warmadewa) (914)
- செரி உக்கிரசேனன் - (Sri Ugrasena) (915-942)
- தவநேந்திர வருமதேவன் - (Tabanendra Warmadewa) (955-967)
- இந்திர ஜெயசிங்க வருமதேவன் - (Indrajayasingha Warmadewa) (960)
- சனசாது வருமதேவன் - (Janasadhu Warmadewa) (975)
- செரி விஜய மகாதேவி - (Śri Wijaya Mahadewi) (அரசி, 983)
- குணப்பிரிய தருமபத்தினி - (Gunapriya Dharmapatni|) (அரசி, 989-1007)
- உதயனா வருமதேவன் - (Udayana Warmadewa) (989-1011)
- செரி அருசுனா தேவி - (Śri Ajñadewi) (அரசி, 1016)
- மரகத பங்கஜம் - (Marakata Pangkaja) (1022-1025)
- ஆயர்லங்கா - (Airlangga) (1025-1042)
- அனாக் உங்குசு - (Anak Wungsu) (1049-1077)
- செரி மகாராஜா வளப்பிரபு - (id:Śri Maharaja Walaprabhu) (1079 - 1088)
- செரி லெட்சுமிதர விஜயதுங்கதேவி - (Śri Laksmidhara Wijayottunggadewi) (அரசி, 1088-1101)
- செரி சூரதீபன் - (Śri Suradhipa) (1115-1119)
ஜெயா அரச மரபு
- ஜெயசக்தி - (Śri Jayaśakti) (1133-1150)
- இராகஜெயன் - (Ragajaya) (1155)
- ஜெயபங்கஜன் - (Jayapangus) (1178-1181)
- அருஜெய கீர்த்தனா - (Arjayadengjayaketana) (அரசி, 1200)
- ஏகஜெயாலன் - (Haji Ekajayalancana) (1200)
- செரி ஆதிகுந்திகேதனன் - (Bhatara Guru Śri Adikuntiketana) (1204)
- ஆதிதேவயாளன் - (Adidewalancana) (1260)
- பாலி அரசி (Queen of Bali) (?–1284) சிங்காசாரி அரசின் படையெடுப்பில் ஆட்சி கவிழ்ப்பு)[2]
சிங்காசாரி அரசு
சிங்காசாரி அரசு பாலி ஆட்சியைக் கைப்பற்றுதல் 1284
- இராஜபதி மகா காசர் (Rajapatih Makakasar Kebo Parud) (1296-1300)
பூர்வீக ஆட்சியாளர்கள்
- மகாகுரு தருமதுங்க வருமதேவா (Mahaguru Dharmottungga Warmadewa) (1324-1328)
- வளஜெய கீர்த்தினகரன் (Walajayakertaningrat) (1328-?)
- செரி அசுதசூர இரத்தின பூமி (Śri Astasura Ratna Bumi Banten) (1332-1337)
மஜபாகித் ஆட்சி
- மயாபாகித்து பேரரசு பாலி ஆட்சியைக் கைப்பற்றுதல் (1343)
சான்றுகள்
- ↑ Roelof Goris (1965) Ancient History of Bali. Denpasar: Udayana University.
- ↑ John Norman Miksic; Goh Geok Yian (2016-10-14). Ancient Southeast Asia (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-27904-4.
குறிப்புகள்
- Willard A. Hanna (2004). Bali Chronicles. Periplus, Singapore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7946-0272-X.