காஸ் விதி

இயற்பியலில், காஸ் விதி (Gauss' law) காஸ் பாய விதி என்றும் அறியப்படுகிறது. இவ்விதி, எந்தவொரு மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயத்தையும், அப்பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தையும் தொடா்புபடுத்துகிறது.

இவ்விதி முதன்முதலில் 1773 ஆம் ஆண்டு ஜோசப்-லூயி லாக்ராஞ்சி என்பவரால் உருவாக்கப்பட்டது[1] . பின்னா்,1813ஆம் ஆண்டில் கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் என்பவரால் பின்பற்றப்பட்டது.[2] இரண்டு விதிகளும் நீள்வட்டத்தின் ஈா்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. காஸ் விதி மாக்ஸ் வெல்லின் நான்கு சமன்பாடுகளில் ஒன்றாகும். மாக்ஸ் வெல் சமன்பாடு மின்காந்தவியலின் அடிப்படையாகும். காஸ் விதி கூலும் விதியிலிருந்து வரவழைக்கப்படும். அதேபோல், கூலும் விதி காஸ் விதியிலிருந்தும் வரவழைக்கப்படும்.[3]

விளக்கம்

இவ்விதியின்படி, எந்தவொரு மூடிய பரப்பில் செயல்படும் மின்புலத்தின் மொத்த பாய மதிப்பு (ΦE ), அப்பரப்பில் உள்ள மொத்த மின்னூட்டத்தின் 1/ε0 மடங்குக்குச் சமம்.

இந்த மூடப்பட்ட கற்பனைப் பரப்பு காஸ்ஸியன் பரப்பு என்றழைக்கப்படுகிறது. S என்ற மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயம் (E) பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தின் மதிப்பை மட்டுமே சாா்ந்தது. ஆனால், அம்மின்னூட்டங்கள் அமைந்துள்ள இடத்தைச் சாா்ந்ததல்ல என காஸ் விதியிலிருந்து அறிகிறோம். பரப்புக்கு வெளியே உள்ள மின்னூட்டங்கள் மின்புலப் பாயத்திற்கு காரணமாவதில்லை.

காஸ்விதி, இயற்பியலில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விதிகளுடன் நெருங்கிய கணித தொடா்பினைக் கொண்டது. உதாரணமாக காந்தவியலுக்கான காஸ் விதி மற்றும் ஈா்ப்பு விசைக்கான காஸ்விதி ஆகிய விதிகளுடன் நெருங்கிய கணித தொடா்பினைக் கொண்டுள்ளது. எந்தவொரு தலைகீழ் இருமடி விதியும் காஸ் விதியை போன்று உருவாக்கப்படலாம். காஸ் விதி, கூலும் விதியின் தலைகீழ் இருமதி விதிக்கு சமமாகும். அதே போல் ஈர்ப்பு விசைக்கான காஸ் விதி, நியுட்டனின் ஈா்ப்பு விதியின் தலைகீழ் இருமடிக்கு சமமாகும்.

மேற்கோள்கள்

  1. Duhem, Pierre. Leçons sur l'électricité et le magnétisme (in French). vol. 1, ch. 4, p. 22–23.{cite book}: CS1 maint: unrecognized language (link) shows that Lagrange has priority over Gauss. Others after Gauss discovered "Gauss' Law", too.
  2. Joseph-Louis Lagrange (1773). "Sur l'attraction des sphéroïdes elliptiques" (in French). Mémoires de l'Académie de Berlin: 125. https://books.google.com/books?id=4XkAAAAAMAAJ&pg=PA619. 
  3. Halliday, David; Resnick, Robert (1970). Fundamentals of Physics. John Wiley & Sons. pp. 452–453.

வெளி இணைப்புகள்