கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது

கிளாந்தான் சுல்தான்
ஐந்தாம் முகமது
Sultan Muhammad V of Kelantan
Tengku Muhammad Faris Petra
யாங் டி பெர்துவான் அகோங்
கிளாந்தான் சுல்தான்
மலேசியாவின் 15-ஆவது
பேரரசர்
ஆட்சிக்காலம்13 டிசம்பர் 2016
மலேசியா24 ஏப்ரல் 2017
முன்னையவர்அப்துல் ஆலிம்
பிரதமர்கள்
கிளாந்தான் சுல்தான்
ஆட்சிக்காலம்13 செப்டம்பர் 2010 – இன்று
முன்னையவர்இசுமாயில் பெத்ரா
வாரிசுகள்பாயிசு பெத்ரா
முதலமைச்சர்கள்
பட்டியல்
பிறப்பு6 அக்டோபர் 1969 (1969-10-06) (அகவை 55)
இசுத்தானா பத்து, கோத்தா பாரு, கிளாந்தான், மலேசியா
துணைவர்தெங்கு சுபைதா பிந்தி தெங்கு நூருதீன் (மணமுறிவு)[1]
பெயர்கள்
தெங்கு முகம்மது பாரிசு பெத்ரா இப்னி தெங்கு இசுமாயில் பெத்ரா
பட்டப் பெயர்
சுல்தான் ஐந்தாம் முகம்மது
மரபுலோங் செனிக் மாளிகை
தந்தைகிளாந்தான் இசுமாயில் பெத்ரா
தாய்தெங்கு ஆனிசு பிந்தி தெங்கு அப்துல் அமீது
மதம்இசுலாம்

சுல்தான் ஐந்தாம் முகம்மது அல்லது கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது; (ஆங்கிலம்: Sultan Muhammad V அல்லது Muhammad V of Kelantan; மலாய்: Tengku Muhammad Faris Petra ibni Sultan lsmail Petra); (பிறப்பு: 6 அக்டோபர் 1969); கிளாந்தான் மாநிலத்தின் அரசரும், மலேசியாவின் 15-ஆவது பேரரசரும் ஆவார். இவர் 2016 டிசம்பர் முதல் 2019 சனவரி வரை மலேசியாவின் பேரரசராகப் பதவி ஏற்று இருந்தார்.

இவரின் தந்தையார் சுல்தான் இசுமாயில் பெத்ரா (Sultan Ismail Petra) சுகவீனம் அடைந்ததைத் தொடர்ந்து, 2010 செப்டம்பர் 13-ஆம் தேதி, இவர் கிளாந்தானின் ஐந்தாம் முகம்மது சுல்தானாகப் பதவி ஏற்றார். அதன் பின்னர் மலேசியாவின் பேரரசராக 2016 டிசம்பர் 13-ஆம் தேதி ஆட்சியில் அமர்ந்தார்.

கிளாந்தான் மாநிலத்தின் அரசர்

தெங்கு முகம்மது இபாரிஸ் பெட்ரா இபினி தெங்கு இஸ்மாயில் பெட்ரா 13-ஆம் திகதி செப்டம்பர் 2010-இல் கிளாந்தான் ஆட்சியாளராகப் பதவி உறுதி மொழியை எடுத்துக் கொண்டார். மாநில அதிகாரப்பூர்வ அமைப்பின் கீழ், பிரிவு 29A-வின் கீழ், நடப்பில் இருந்த தந்தையின் உடல்நலம் கருதி இவர் ஆட்சிக்கு வந்தார்.[2]

பின்னர் 2 நவம்பர் 2018-இல் முதல் இரண்டு மாதங்களுக்கு பேரரசர் பணியில் இருந்து விடுப்பில் இருந்தார். அந்தக் காலக் கட்டத்தில், (22 நவம்பர் 2018-இல்); முன்னாள் மாஸ்கோ அழகியான ஒக்சானா வோவோடினா (Oksana Voevodina in Barvikha) என்பவரை ருசியா நாட்டில் திருமணம் செய்து கொண்டதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும் இவர் பேரரசர் அரியணையில் இருந்து விலகும் வரையில், அரண்மையில் இருந்து அந்தத் திருமணத்தைப் பற்றி எந்த ஓர் அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை.

துணை யாங் டி பெர்துவான் அகோங்

சுல்தான் முகமட் அவர்கள் 2011 அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துணை யாங் டி பெர்துவான் அகோங்காக நியமிக்கப்படடர். இந்தப் பதவியை இவர் 13 டிசம்பர் 2011 முதல் 13 டிசம்பர் 2016 வரை வகித்து வந்தார்.[3][4]

யாங் டி பெர்துவான் அகோங்

14 அக்டேபர் 2016-இல் நடைபெற்ற அரசவை மாநாட்டில், சுல்தான் ஐந்தாம் முகமது அடுத்த யாங் டி பெர்துவான் அகோங்-ஆக அறிவிக்கப்படடர். இவரது ஆட்சிக்காலம் 13 டிசம்பர் 2016-இல் தொடங்கியது.[5][6]  

எவரும் எதிர்பார்க்காத நிலையில், இவர் 6 சனவரி 2019-ஆம் தேதி தம் பேரரசர் பதவியைத் துறந்தார். மலேசிய வரலாற்றில் பேரரரசர் பதவி துறப்பது அதுவே முதல் முறையாகும்.[7]

மேற்கோள்கள்

மேலும் காண்க