குடிதழீஇய இயக்கச் சங்கம்

குடிதழீஇய இயக்கச் சங்கம்
Union pour un Mouvement Populaire
தலைவர்நிக்கொலா சார்கோசி
பொதுச் செயலாளர்ஜீன்-பிரான்சுவா கோபே
தொடக்கம்17 நவம்பர் 2002
தலைமையகம்55, ரூ லா போட்டீ
75384 பாரிசு செடெக்சு 08
கொள்கைகாலிசம்[1][2][3]
பழமைவாதம்[1]
தாராள பழமைவாதம்[3][4]
கிறித்துவ சனநாயகம்[3]
அரசியல் நிலைப்பாடுமைய-வலது[5]
பன்னாட்டு சார்புபன்னாட்டு மைய மக்களாட்சியினர், பன்னாட்டு மக்களாட்சி சங்கம்]]
ஐரோப்பிய சார்புஐரோப்பிய மக்கள் கட்சி
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுஐரோப்பிய மக்கள் கட்சி
நிறங்கள்நீலம், வெள்ளை, சிவப்பு
National Assembly
313 / 577
Senate
132 / 348
European Parliament
22 / 74
Regional Councils
331 / 1,880
இணையதளம்
www.lemouvementpopulaire.fr

குடிதழீஇய இயக்கச் சங்கம் (Union for a Popular Movement, பிரெஞ்சு மொழி: Union pour un Mouvement Populaire, யூஎம்பி) பிரான்சு நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மைய-வலது கொள்கையுடைய[5] இந்தக் கட்சி 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஜாக் சிராக்கின் தலைமையில் பல மைய-வலது கட்சிகளின் சேர்க்கையால் உருவானது.

இக்கட்சியின் தற்போதையத் தலைவர் நிக்கொலா சார்கோசி 2007ஆம் ஆண்டில் பிரான்சின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய சட்டப் பேரவையில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள போதும் மேலவையான செனட்டில் எதிர்கட்சியான சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிசக் கட்சியும் பிற கட்சிகளும் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளன.

இதன் பொதுச்செயலாளராக ஜீன்-பிரான்சுவா கோபே உள்ளார். ஐரோப்பிய மக்கள் கட்சி, பன்னாட்டு மைய மக்களாட்சியினர் மற்றும் பன்னாட்டு மக்களாட்சி சங்கம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Hloušek, Vít; Kopeček, Lubomír (2010), Origin, Ideology and Transformation of Political Parties: East-Central and Western Europe Compared, Ashgate, p. 157
  2. Slomp, Hans (2011), Europe, A Political Profile: An American Companion to European Politics, vol. 2, ABC-CLIO, p. 385
  3. 3.0 3.1 3.2 Wolfram Nordsieck. "http://www.parties-and-elections.de/france.html". Parties-and-elections.de. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்பிரல் 2011. {cite web}: External link in |title= (help)
  4. Kaeding, Michael (2007), Better regulation in the European Union: Lost in Translation or Full Steam Ahead?, Leiden University Press, p. 123
  5. 5.0 5.1 Magstadt, Thomas M. (2011), Understanding Politics (9th ed.), Wadsworth, Cengage Learning, p. 183

வெளி இணைப்புகள்