குருதி மாற்றீடு

குருதி மாற்றீடு
இடையீடு
citrate, Dextrose, phosphate, Adenine (CDPA) கரைசலில் செங்குருதியணுக்கள் அடைக்கப்பட்ட நெகிழிப் பை.
ICD-9-CM99.0
MeSHD001803

குருதி மாற்றீடு என்பது ஒருவரின் குருதிச் சுற்றோட்டத்தொகுதியினுள் குருதியின் கூறுகள் வெளியிலிருந்து சிரைவழி (intravenously) மாற்றீடு செய்யப்படல். பல்வேறுபட்ட மருத்துவ நிலைமைகளில் ஒருவரில் இழக்கப்பட்ட குருதிக் கூறுகளை ஈடு செய்வதற்காக இவ்வகையான குருதி மாற்றீடு என்னும் மருத்துவ செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும். முன்னைய நாட்களில் பொதுவாக முழுமையான குருதியே இவ்வகையான மாற்றீட்டில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது, செங்குருதியணு, வெண்குருதியணு, குருதிச் சிறுதட்டுக்கள், குருதி நீர்மம் (Blood plasma), குருதி உறைதலிற்கான காரணிகள் (clotting factors) போன்ற குருதிக் கூறுகள் தனித்தனியாகவும் பயன்படுத்தப்படும்.[1][2][3]

ஒவ்வாமை சோதனை

மனிதரில் குருதி மாற்றீடு செய்யப்படும்போது, மாற்றீடு செய்யப்படும் குருதி ஒவ்வாமை அற்றதாக இருக்க வேண்டுமென்பதனால், முதலிலேயே சோதனைக்கு உட்படுத்தப்படும். இங்கே குருதிக் குழு முறைமைகள் கருத்தில் கொள்ளப்படும்.

மேற்கோள்கள்

  1. "Blood Transfusion | National Heart, Lung, and Blood Institute (NHLBI)". www.nhlbi.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-06-16.
  2. "Anesthesia in cases of poor surgical risk. Some suggestions for decreasing risk". Surg Gynecol Obstet 74: 1011–1019. 1942. 
  3. . Clinical Transfusion Medicine Committee of the, AABB"Red blood cell transfusion: a clinical practice guideline from the AABB*". Annals of Internal Medicine 157 (1): 49–58. July 2012. doi:10.7326/0003-4819-157-1-201206190-00429. பப்மெட்:22751760.