கூகுள் மொழிபெயர்ப்பு
கூகுளின் சின்னம் | |
வலைத்தள வகை | பொறிவழி மொழிபெயர்ப்பு |
---|---|
உரிமையாளர் | கூகுள் |
உருவாக்கியவர் | கூகுள் |
பதிவு செய்தல் | இல்லை |
தற்போதைய நிலை | இயங்குநிலை |
உரலி | translate |
கூகுள் மொழிபெயர்ப்பு (Google Translate) என்பது ஓர் இலவசத் தானியங்கி மொழிமாற்றிச் சேவையாகும். இது கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையை வலைக் கடப்பிடத்தினூடாகவே பெற முடியும். இதன் மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். தட்டச்சு செய்யும்போதே உடனடியாக மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது. உரையை ஒலிபெயர்ப்பு முறையில் தட்டச்சு செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.[1]
மொழிகள்
தற்போது கூகிள் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பு வசதியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மொழிகள் தமிழ் ழ், ஆங்கிலம், அரபு, அல்பானியம், அசர்பைசானம், ஆபிரிக்கானம், அருமேனியம், இத்தாலியம், இத்தியம், இந்தி, இந்தோனேசியம், உக்குரேனியம், உருது, எசுத்தோனியம், ஐரியம், இசுலேன்சுக்கம், பின்னியம், காட்டலான், கலீசியம், கன்னடம், கிரேக்கம், குரோவாசியம், குசராத்தியம், கொரியம், சீனம் (எளிய வரி வடிவம்), சீனம் (பாரம்பரிய வரி வடிவம்), செக்கம், செருபியம், இடச்சு, தேனியம், தாய், துருக்கியம், தெலுங்கு, நோர்வே, பல்கேரியம், பாசுக்கு, பிரான்சியம், விலிப்பினம், பாரசீகம், பெலருசியம், போர்த்துகேயம், போலியம், மக்கதோனியம், மலாயு, மாலுதியம், உருசியம், உருமானியம், இலத்தீன், இலத்துவியம், இலித்துவானியம், வங்காளம், வியட்நாமியம், வேல்சு, சப்பானியம், சியார்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், சுவாகிலியம், சுவீடியம், அங்கேரியம், எபிரேயம், ஐத்திக் கிரியோல் என்பனவாகும். [2]
இதையும் பார்க்க
- கூகுள் எழுத்துப்பெயர்ப்பு
- Teach You Backwards: An In-Depth Study of Google Translate for 103 Languages