கேசினோ ராயல் (2006 திரைப்படம்)

கேசினோ ராயல்
இயக்கம்மார்டின் கேம்பல்
தயாரிப்பு
  • மைக்கேல் ஜி. வில்சன்
  • பார்பரா ப்ரோக்கோலி
மூலக்கதைகேசினோ ராயல்
படைத்தவர் இயான் பிளெமிங்
திரைக்கதை
  • நீல் பர்விஸ்
  • ராபர்ட் வேட்
  • பால் ஹாக்கிஸ்
இசைடேவிட் அர்னால்டு
நடிப்பு
ஒளிப்பதிவுபெல் மியூக்ஸ்
படத்தொகுப்புஸ்டூவர்ட் பைர்ட்
கலையகம்
  • ஈயன் புரொடக்சன்ஸ்
  • ஸ்டில்ல்கிங் பிலிம்ஸ்
  • பாபேல்ஸ்பெர்க் பிலிம்
விநியோகம்
வெளியீடு14 நவம்பர் 2006 (2006-11-14)(London)
16 நவம்பர் 2006 (United Kingdom)
17 நவம்பர் 2006 (United States)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடு
மொழிஆங்கிலம்
பிரெஞ்சு
ஆக்கச்செலவு$150 மில்லியன்
மொத்த வருவாய்$599 மில்லியன்

கேசினோ ராயல் (ஆங்கில மொழி: Casino Royale) என்பது 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்தானிய நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் 21 வது படம் ஆகும். இந்த படம் 1953 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயான் பிளெமிங் எழுதிய புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட மூன்றாவது படமாகும்.

படத்தை மார்டின் கேம்பல் இயக்க, நீல் பர்விஸ் & ராபர்ட் வேட் மற்றும் பால் ஹாக்கிஸ் ஆகியோர் எழுத்துப் பணிகளை செய்துள்ளனர். இது மி6 ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாப்பாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்த முதல் படம் ஆகும். படத்தை மெட்ரோ கோல்ட்வைன் மேயர் மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் ஆகியவற்றுக்காக இயான் புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்தது. மேலும் இது இரண்டு ஸ்டுடியோக்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் எயான் புரொடக்சன்சால் தயாரிக்கப்பட்ட பாண்ட் திரைப்படமாகும். டை அனதர் டே வைத் தொடர்ந்து, எயான் புரொடக்சன்ஸ் ஜேம்ஸபாண்ட் தொடர் படத்தை மீண்டும் துவக்க முடிவு செய்தது,[2][3][4]

ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க பியர்ஸ் ப்ரோஸ்னானுக்கு அடுத்து நடிக்க ஒரு புதிய நடிகருக்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்தப் பாத்திரத்துக்காக 2005 இல் கிரேக் தேர்வு செய்யப்பட்டது கணிசமான சர்ச்சையைத் தோற்றுவித்தது. திரைப்படத்திற்கான படப்பிடிப்பானது செக் குடியரசு, பகாமாசு, இத்தாலி, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிலும் பார்ரண்டோவ் ஸ்டுடியோஸ் மற்றும் பைன்வுட் ஸ்டுடியோ போன்ற படப்பிடிப்பு அரங்குகளில் அமைக்கப்பட்ட சோடனைகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.

கேசினோ ராயல் படம் 14 நவம்பர் 2006 அன்று ஓடியோன் லெய்செஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது. படத்துக்கு பெருமளவில் நேர்மறையான விமர்சம் கிடைத்தது. இதனால் இந்தப் படத்திற்காக ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு கிரேக் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஏற்பட்ட சர்ச்சகள் காணாமல் போயின. இது கிட்டத்தட்ட $600 மில்லியன் தொகையை ஈட்டியது, 2012 இல் ஸ்கைஃபால் படத்தின் வெளியீடு வரை அதிகபட்சமாக வசூலித்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமாக இருந்தது.

கதை

சந்தேகப்படும் எந்தத் தீவிரவாதியையும் சுட்டுத் தள்ளும் உரிமை ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது. இதையடுத்து ஒரு தீவிரவாதியைத் தேடி மடகாஸ்கருக்குப் பறக்கிறார் பாண்ட். அதன் பின்னர் வழக்கமான பாண்ட் சாகசங்கள் தொடங்குகின்றன. தீவிரவாதியைத் தேடுடிப் போகும் வழியில் கதாநாயகி ஈவா க்ரீனை ஒரு அபாயத்திலிருந்து காப்பாற்றுகிறார். அவருடன் காதல், எதிரிகளுடன் மோதல் என வழக்கமான விஷயங்களுடன் படம் தொடருகிறது.

தீவிரவாதிகளின் பணத்துக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தரகுப் பணத்தை வாங்கிக்கொண்டு பத்திரமாக வைத்திருந்து அவர்களுக்கு தேவையான நேரத்தில் வழங்குவதை ஒரு தொழிலாக வில்லன் நடத்தி வருகிறார். இந்தப் பணத்தை சூதாட்டத்தில் முதலீடாகப் போட்டு தொழில்முறை சூதாடியான வில்லன் ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கிறார். காசினோ ராயல் என்ற அந்த சூதாட்ட விடுதியிலிருந்துதான் தீவிரவாதிகளுக்கு பணம் பாய்கிறது என்பதை அறிந்த பாண்ட் அங்கே செல்கிறார். முள்ளை முள்ளால் எடுப்பது போல இங்கிலாந்து நாட்டு நிழற்படை ஏஜெண்டான 007 ஜேம்ஸ்பாண்ட் வில்லனோடு சூதாடுவதற்காக இங்கிலாந்து அரசே 75 கோடி தருகிறது அவனுடன் மோதி அவனை வெல்ல திட்டமிடும் பாண்ட், சூதாட்டத்தில் குதிக்கிறார். ஆனால் சூதாட்டத்தில் கில்லாடியான அந்தத் தீவிரவாதியிடம் முதலில் ரூ. 70 கோடியை தோற்கிறார். ஆனால் அதன் நுட்பங்களை அறிந்த ஜேம்ஸ் பாண்ட் அடுத்தடுத்த சுற்றுகளில் தீவிரவாதியை வென்று ரூ. 600 கோடி வரை சம்பாதித்து எதிரியை வளைக்கிறார்.

மேற்கோள்கள்

  1. "CASINO ROYALE (2006)". Film & TV Database. London: British Film Institute. Archived from the original on 2 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 May 2012. {cite web}: Check date values in: |archive-date= (help)
  2. Robey, Tim (12 January 2011). "Sam Mendes may have problems directing new James Bond movie". The Daily Telegraph (London). https://www.telegraph.co.uk/culture/film/jamesbond/8255072/Sam-Mendes-may-have-problems-directing-new-Bond-movie.html. 
  3. "IGN: Interview: Campbell on Casino Royale". IGN.com. IGN Entertainment, Inc. 19 October 2005. Archived from the original on 22 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 22 March 2007.
  4. "New James Bond Proves Worthy of Double-0 Status". Space.com. 21 October 2006. பார்க்கப்பட்ட நாள் 16 June 2007.

வெளி இணைப்புகள்