சம்பல்
சம்பல் (Sambal) இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், புட்டு, ரொட்டி, சோறு, போன்ற முதன்மை உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு பதார்த்தம் ஆகும்.[1] பொதுவாக சம்பல் தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு போன்றவை சேர்த்து அரைக்கப்படும் அல்லது இடிக்கப்படும் உணவுப் பண்டமாகும். இதில் பல வகைகள் உண்டு.
வகைகள்
- இடிசம்பல் (இடித்த சம்பல்)
- அரைத்தசம்பல்
- தேங்காய்ச்சம்பல்
- மாசிக்கருவாட்டுச்சம்பல்
- கத்தரிக்காய்ச்சம்பல்
- மாங்காய்சம்பல்
- சீனிச் சம்பல்[2]
- செவ்வரத்தம்பூச்சம்பல்
- வல்லாரைச்சம்பல்
- கீரைச்சம்பல்
- கறிவேப்பிலைச்சம்பல்
- தூதுவளை சம்பல்
- இறைச்சி சம்பல்
- மிளாகாய்ச் சம்பல்: பொதுவாக இதையே சம்பல் என்பர். செத்தல்(காய்ந்த) மிளகாய், பச்சை மிளகாய் என இவற்றுள்ளும் இருவகை உண்டு.
- மாசிச் சம்பல் - இது மாசிக் கருவாடு சேர்க்கப்படும் சம்பல்.
- சீனிச் சம்பல் - வெங்காயத்துடன் சீனி சேர்த்துத் தயாரிக்கப்படும் சம்பல் பெரும்பாலும் சிங்களவர்கள் பாணுடன் சேர்த்துச் சாப்பிடுவர்.
- உள்ளிச் சம்பல்/ இஞ்சிச் சம்பல் போன்றவை வயிற்று பெருமலுக்கு நன்று.
மேற்கோள்கள்
- ↑ R, Priyadarshini, "Ceylon Sambal : சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு பரிமாறலாம் சிலோன் சம்பல்; அடுப்பின்றி செய்து அசத்துங்கள்!", Tamil Hindustan Times, பார்க்கப்பட்ட நாள் 2024-06-19
- ↑ "இலங்கையில் பிரபல்யமான சீனி சம்பல் ரெசிபி - லங்காசிறி நியூஸ்", Lankasri News, பார்க்கப்பட்ட நாள் 2024-06-19