சரவாக் மக்கள் உணர்வுக் கட்சி
சரவாக் மக்கள் உணர்வுக் கட்சி Sarawak People's Conscious Party Parti Sedar Rakyat Sarawak | |
---|---|
சுருக்கக்குறி | SEDAR |
தலைவர் | டத்தோ ஒசுமான் அப்துல்லா (Dato' Othman Abdullah |
தொடக்கம் | 3 சூன் 2018 |
சட்ட அனுமதி | 28 மே 2019 |
தலைமையகம் | Tingkat 1, Lot 254, SL17, Seksyen 8, Jalan Haji Taha, 93400 கூச்சிங், சரவாக் |
உறுப்பினர் | 94,970 (2023) |
கொள்கை | தேசியவாதம்; மையவாதம் |
நிறங்கள் | மஞ்சள், வெள்ளை, சிவப்பு |
மலேசிய மேலவை: | 0 / 70 |
மலேசிய மக்களவை: | 0 / 31 |
சரவாக் மாநில சட்டமன்றம்: | 0 / 82 |
இணையதளம் | |
www |
சரவாக் மக்கள் உணர்வுக் கட்சி (ஆங்கிலம்: Sarawak People's Conscious Party; மலாய்: Parti Sedar Rakyat Sarawak) (SEDAR) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். 2019-இல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட இந்தக் கட்சியின் தலைமையகம் சரவாக் கூச்சிங் மாநகரத்தில் உள்ளது.
இந்தக் கட்சி சரவாக் மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பு; மேம்பாட்டு விவகாரங்கள்; மாநிலக் கல்வி முறை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த உள்ளூர் அரசியல் கட்சி சூன் 2018-இல் டத்தோ ஒசுமான் அப்துல்லா என்பவரால் நிறுவப்பட்டது.[1]
பொது
இந்த அரசியல் கட்சி 28 மே 2019 அன்று, மலேசிய சங்கங்களின் பதிவாளர் (Malaysian Registrar of Societies) மூலம் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. செப்டம்பர் 13, 2023 அன்று, இந்தக் கட்சி தேசிய அரசியல் கட்சியாக அறிவித்தது.[2].
கொள்கை
- சரவாக் பூமிபுத்ரா மக்களின் முழு உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பது
- சரவாக் மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் மறுவாழ்வைச் செயல்படுத்துவது
- சரவாக் பொருளாதாரச் சந்தை, வங்கி நிறுவனங்கள் மற்றும் நிதி முதலீடுகளை நிலையான முறையில் உருவாக்குவது
- ஒரு நியாயமான அரசியல் கலாசாரத்தை உணரச் செய்தல்
- நிலையான, நேர்மையான, நம்பகமான, உறுதியான புதிய சரவாக் அரசாங்கத்தை உருவாக்குவது
- சரவாக்கின் நிர்வாகம் மற்றும் அரசாங்கச் சுயாட்சியை மீட்டமைத்தல்
- பண அரசியலையும் ஊழல் கலாசாரத்தையும் முற்றிலுமாக ஒழிப்பது
தேர்தல் முடிவுகள்
இந்த அரசியல் கட்சி முதல் முறையாக 2021-ஆம் ஆண்டு சரவாக் மாநில தேர்தலில் பங்கேற்றது. தேர்தலில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தோல்வியுற்றனர்; தங்களின் வைப்புத் தொகையையும் இழந்தனர்.[3]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Parti baharu Sarawak SEDAR akan ditubuhkan hari ini 0 2987". Kamek Miak Sarawak. 19 Jun 2018. பார்க்கப்பட்ட நாள் 19 December 2021.
{cite web}
: CS1 maint: url-status (link) - ↑ "SEDAR tekad tawan Sarawak PRN12". Utusan Borneo Online. 8 July 2019. பார்க்கப்பட்ட நாள் 19 December 2021.
{cite web}
: CS1 maint: url-status (link) - ↑ OMAR ZIN (10 December 2021). "23 bakal calon Parti Sedar 'lari' gagal hadir penamaan calon". Utusan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 19 December 2021.
{cite web}
: CS1 maint: url-status (link)