சிந்து ஆற்று யுத்தம்
சிந்து ஆற்று யுத்தம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின் ஒரு பகுதி | |||||||||
சலாலத்தீன் சிந்து ஆற்றைக் கடந்ததன் மூலம் யுத்தத்திலிருந்து தப்பியோடுதல் பற்றிய ஒரு கலைஞரின் சித்தரிப்பு |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
மங்கோலியப் பேரரசு | குவாரசமிய அரசமரபு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
செங்கிஸ் கான் சகதாயி கான் ஒக்தாயி கான் | சலாலத்தீன் மிங்புர்னு மாலிக் கான் |
||||||||
பலம் | |||||||||
50,000 குதிரைப்படை[1] 50,000க்கும் அதிகமான வீரர்கள்[2] | 3,000 குதிரைப்படை, 700 பாதுகாவலர்கள் [1] 30,000–35,000 வீரர்கள் (அகதிகள்)[2] |
||||||||
இழப்புகள் | |||||||||
குவாரசமிய இழப்பை விட அதிகம் | பெரும்பாலான இராணுவம் |
சிந்து ஆற்று யுத்தம் என்பது செங்கிஸ் கானின் மங்கோலியர்களுக்கும் குவாரசமிய அரசமரபின் சுல்தான் சலாலத்தீன் மிங்புர்னுவின் படைகளுக்கும் இடையில் 1221 ஆம் ஆண்டு சிந்து ஆற்றின் அருகில் நடைபெற்ற யுத்தமாகும்.
பின்புலம்
குவாரசமியாவின் தலைநகரமான சமர்கந்து மற்றும் புகாரா போன்ற நகரங்களை மங்கோலியர்கள் சூறையாடிய பிறகு மிங்புர்னு தனது வீரர்கள் மற்றும் பாரசீகத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான அகதிகளுடன் இந்தியாவிற்குத் தப்பி ஓடினார். காசுனி நகருக்கு அருகில் நடைபெற்ற பர்வான் யுத்தத்தில் வென்ற பிறகு,[3] சுமார் 30,000 வீரர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அகதிகளுடன் தஞ்சம் அடைவதற்காக மிங்புர்னு இந்தியாவை நோக்கிப் பயணித்தார்.[4] சிந்து ஆற்றைக் கடக்க அவர்கள் முயற்சித்தபோது செங்கிஸ் கானின் தலைமையிலான இராணுவமானது அவர்களைப் பின்தொடர்ந்தது.[4]
யுத்தம்
மிங்புர்னு தனது குறைந்தது 30,000 வீரர்களை, மங்கோலியர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மலைகளைப் பின்புறமாகக் கொண்டு ஒரு பிரிவையும், ஆற்று வளைவால் பின்பகுதி பாதுகாக்கப்பட்ட இடத்தில் மற்றொரு பிரிவையும் நிறுத்தினார்.[3] போரைத் தொடங்கிய ஆரம்ப மங்கோலியத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது.[3] மிங்புர்னு பதில் தாக்குதல் நடத்தியதில் மங்கோலிய இராணுவத்தின் மையப்பகுதியைக் கிட்டத்தட்டத் தாக்கும் அளவுக்குச் சென்றார்.[3] மலையின் அருகிலிருந்த மிங்புர்னுவின் இராணுவப் பிரிவை சுற்றி வளைப்பதற்காகச் செங்கிஸ் கான் 10,000 வீரர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அனுப்பினார்.[3] இரண்டு பக்கங்களிலிருந்தும் தனது ராணுவம் தாக்கப்பட்டு குழப்பத்தில் சரிய, மிங்புர்னு சிந்து ஆற்றைக் கடந்து தப்பியோடினார்.[3][5]
உசாத்துணை
- ↑ 1.0 1.1 Sverdrup 2010, ப. 109-117.
- ↑ 2.0 2.1 Dupuy & Dupuy 1993, ப. 366.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle, Vol. I, ed. Spencer C. Tucker, (ABC-CLIO, 2010), 273.
- ↑ 4.0 4.1 Cite warning:
<ref>
tag with nameSverdrup
cannot be previewed because it is defined outside the current section or not defined at all. - ↑ Sverdrup, Carl (2010). "Numbers in Mongol Warfare". Journal of Medieval Military History. 8. Boydell Press: 109–17 [p. 113]. doi:10.1515/9781846159022-004. ISBN 978-1-84383-596-7.