சிரம்பான் மாவட்டம்

சிரம்பான் மாவட்டம்
Seremban District
நெகிரி செம்பிலான்
சிரம்பான் மாவட்டம் is located in மலேசியா
சிரம்பான் மாவட்டம்
சிரம்பான் மாவட்டம்
      சிரம்பான் மாவட்டம்
ஆள்கூறுகள்: 2°45′N 101°55′E / 2.750°N 101.917°E / 2.750; 101.917
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்
தொகுதிசிரம்பான்
உள்ளூராட்சி சிரம்பான் மாநகர் மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்935.02 km2 (361.01 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்6,20,100
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
70xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

சிரம்பான் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Seremban; ஆங்கிலம்: Seremban District; சீனம்: 芙蓉县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். சிரம்பான் மாவட்டத்தின் முக்கிய நகரம் சிரம்பான் (Seremban) நகரம். அதுவே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; அமைந்து உள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒரு மாவட்டம் ஆகும்.

நிர்வாகம்

புதிதாக உருவாக்கப்பட்ட சிரம்பான் மாநகராட்சி; சிரம்பான் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது. 1 சனவரி 2020-இல் சிரம்பான் மாநகராட்சி; மற்றும் நீலாய் நகராட்சி ஆகிய இரு மன்றங்களும் ஒன்றிணைக்கப் பட்டன. அதன் மூலம் சிரம்பான் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 முக்கிம்கள் உள்ளன.

  1. அம்பாங்கான் (Ampangan)
  2. லாபு (Labu)
  3. லெங்கெங் (Lenggeng)
  4. பந்தாய் (Pantai)
  5. ராசா (Rasah)
  6. ரந்தாவ் (Rantau)
  7. சிரம்பான் நகரம் (Seremban City)
  8. செத்துல் (Setul)

நகரப் பகுதிகள்

சிரம்பான் மையப் பகுதி

சிரம்பான் மாநகரத்தின் மையப் பகுதிகள்; சிரம்பான் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.

  1. சிரம்பான் (Seremban)
  2. ராசா (Rasah)
  3. ராசா ஜெயா (Rasah Jaya)
  4. மம்பாவ் (Mambau)
  5. செனவாங் (Senawang)
  6. தெமியாங் (Temiang)
  7. லோபாக் (Lobak)
  8. பாரோய் (Paroi)
  9. புக்கிட் செடாங் (Bukit Chedang)
  10. புக்கிட் புளாசம் (Bukit Blossom)
  11. சிரம்பான் 2 (Seremban 2)
  12. அம்பாங்கான் (Ampangan)
  13. ஆக்லாந்து (Oakland)
  14. புக்கிட் கெபாயாங் (Bukit Kepayang)
  15. கெமாயான் (Kemayan)
  16. சிக்காமாட் (Sikamat)
  17. பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan)
  18. தாமான் பெர்மாய் (Taman Permai)

சிரம்பான் புறப்பகுதி

சிரம்பான் மாநகரத்தின் புறப் பகுதிகள்; நீலாய் நகராட்சிக் கழகத்தின் (Nilai Municipal Council) அதிகார வரம்பிற்குள் வருகின்றன.

  1. நீலாய் (Nilai)
  2. பண்டார் பாரு நீலாய் (Bandar Baru Nilai)
  3. ரந்தாவ் (Rantau)
  4. மந்தின் (Mantin)
  5. சுங்கை காடுட் (Sungai Gadut)
  6. லாபு (Labu)
  7. லெங்கெங் (Lenggeng)
  8. தாமான் சிரம்பான் ஜெயா (Taman Seremban Jaya)
  9. பண்டார் சிரம்பான் செலாத்தான் (Bandar Seremban Selatan)
  10. தாமான் துங்கு ஜாபார் (Taman Tuanku Jaafar)
  11. ராசா கெமாயான் (Rasah Kemayan)
  12. பந்தாய் (Pantai)
  13. உலு பெரணாங் (Ulu Beranang)
  14. பாஜம் (Pajam)

சிரம்பான் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; நெகிரி செம்பிலான்; சிரம்பான் மாவட்டத்தில் (Seremban District) 19 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD4069 சிரம்பான் SJK(T) Convent Seremban
(Kompleks Wawasan)
சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி
மலேசியத் தொலைநோக்கு பள்ளி
70300 சிரம்பான் 642 43
NBD4070 சிரம்பான் SJK(T) Lorong Java லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி 70000 சிரம்பான் 693 51
NBD4071 சிரம்பான் SJK(T) Jalan Lobak ஜாலான் லோபாக் தமிழ்ப்பள்ளி 70200 சிரம்பான் 389 33
NBD4072 நீலாய் SJK(T) Nilai நீலாய் தமிழ்ப்பள்ளி 71800 நீலாய் 537 40
NBD4073 நீலாய் SJK(T) Ladang Batang Benar பத்தாங் பெனார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71800 நீலாய் 57 11
NBD4074 கெர்பி தோட்டம் SJK(T) Ladang Kirby கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி 71900 லாபு 38 10
NBD4075 குபாங் தோட்டம் SJK(T) Ladang Kubang குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72300 சிரம்பான் 35 10
NBD4076 நீலாய் SJK(T) Desa Cempaka டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி 71800 நீலாய் 99 10
NBD4077 மந்தின் SJK(T) Ldg Cairo கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 71700 மந்தின் 163 18
NBD4078 லாபு SJK(T) Labu Bhg 1 லாபு தமிழ்ப்பள்ளி பிரிவு 1 71900 சிரம்பான் 45 11
NBD4079 லாபு SJK(T) Ladang Labu Bhg 4 லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 4 71010 லாபு 23 10
NBD4080 செனவாங் SJK(T) Ladang Senawang செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71450 சிரம்பான் 543 42
NBD4081 சிரம்பான் தோட்டம் SJK(T) Ladang Seremban சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71450 சிரம்பான் 565 44
NBD4083 கோம்போக் தோட்டம் SJK(T) Ladang Kombok[1][2] கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 60 14
NBD4084 ரந்தாவ் SJK(T) Rantau[3][4] ரந்தாவ் தமிழ்ப்பள்ளி 71200 ரந்தாவ் 293 28
NBD4085 சங்காய் சிரம்பான் தோட்டம் SJK(T) Ladang Shanghai Seremban சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி 70300 சிரம்பான் 169 15
NBD4086 பாஜம் SJK(T) Tun Sambanthan[5] துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி 71700 மந்தின் 229 27
NBD4087 செமினி
Makhota Hills
SJK(T) Ladang Lenggeng லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71750 லெங்கெங் 82 11
NBD4088 பண்டார் ஸ்ரீ செண்டாயான் SJK(T) Bandar Sri Sendayan பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி
புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம்
71950 பண்டார் ஸ்ரீ செண்டாயான் 192 17

காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  2. "SJK(T)LADANG KOMBOK,71200 RANTAU, NSDK". sjktladangkombok.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  3. "ரந்தாவ் தமிழ்ப்பள்ளி - SJK T RANTAU". பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  4. "SEJARAH SJKT RANTAU - ரந்தாவ் தமிழ்ப்பள்ளி வரலாறு" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  5. "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி". sjkttunsambanthanpajam.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2021.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Seremban District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.