சிவஞான முனிவர்

சிவஞான முனிவர் (1753 - 1785) [1]; திருநெல்வேலி, தமிழ்நாடு) ஒரு சைவ மெய்யியலாளர் ஆவார். இவர் தமிழ் மொழியிலும், சமசுகிருத மொழியிலும் சிறப்புப் பெற்றவர்.[2] ஆனந்தக் கூத்தர் – மயிலம்மை தம்பதிகளுக்கு மகனாகச் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்.[3]முக்களாலிங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர் , இளமையிலேயே துறவியானவர். வடமொழியும் தமிழ்மொழியும் நிகரானவை என்ற எண்ணம் கொண்டவர் என்பதால் சமசுகிருத நூல்கள் பலவற்றை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்.[4]

இவரை ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர் என்றும் அழைப்பர்.

இவரை செங்குந்தர் மரபினர் அதிகளவில் பின்பற்றினர் [5] இவர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபொழுது பிள்ளையார்பாளையம் முனியப்ப முதலியார் அதிக அளவில் உதவி செய்தார்.[6]

இயற்றிய நூல்கள்

  • தொல்காப்பிய பாயிர விருத்தி
  • மாபாடியம்
  • திருத்தொண்டர் திருநாமக்கோவை
  • திருமுல்லைவாயில் அந்தாதி - 100 பாடல்களைக் கொண்ட நூல்
  • குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
  • சோமேசர் முதுமொழி வெண்பா
  • இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி
  • திருவேகம்பரந்தாதி
  • கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம்
  • ஆனந்தக் களிப்பு
  • காஞ்சி புராணம்
  • முதற்காண்டம்
  • கலைசைப் பதிற்றுப்பத்தாந்தாதி
  • கலைசைப் செங்கழுநீர்
  • விநாயகர் பிள்ளைத் தமிழ்
  • அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ்
  • அகிலாண்டேசுவரர் பதிகம்

மொழிபெயர்ப்புகள்

12 மாணவர்கள்

  • திருதணிகைக் கச்சியப்ப முனிவர்
  • தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர்
  • காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
  • இலக்கணம் சிதம்பரநாத முனிவர்
  • காஞ்சி முத்துக்குமாரதேசிகர்
  • காஞ்சி சரவணபத்தர்
  • இராமநாதபுரம் சோமசுந்தரப்பிள்ளை
  • திருமுக்கூடல் சந்திரசேகர முதலியார்
  • காவாந்தண்டலம் அடைக்கலங்காத்த முதலியார்
  • கடம்பர்கோயில் கல்யாணசுந்தர உபாத்தியாயர்[7]

காண்க

சைவ சமய இலக்கியம்

மேற்கோள்கள்