சிவபுரி உச்சிநாதர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற சிவபுரி உச்சிநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருநெல்வாயில் |
அமைவிடம் | |
ஊர்: | சிவபுரி |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | உச்சிநாதர், மத்யானேஸ்வரர் |
தாயார்: | கனகாம்பிகை |
தல விருட்சம்: | நெல்லி |
தீர்த்தம்: | கிருபா சமுத்திரம் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
அமைத்தவர்: | சோழர்கள் |
சிவபுரி உச்சிநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும். [1] இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும்.
சிறப்பு
அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார். இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில் எனவும் வழங்குகின்றனர்.
ஊர்ப் பெயர் வரலாறு
சிதம்பரம் நகருக்கு உட்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதியே முற்காலத்தில் "திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது.
தல பெருமை
- சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்துடன் அருள் பாலிக்கின்றனர்.
- இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்
- அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் - பாரத் திருக்கோயில்கள் வலைதளம் பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- உச்சிநாதர் கோயில் - டெம்பில் யாத்ரா இணையதளம்
திருநெல்வாயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 3 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 3 |