சீமைக்காரை

சீமைக்காரை

சீமைக்காரை (cement, சிமெந்து) என்பது, முக்கியமான ஒரு கட்டிடப் பொருள் ஆகும். இது ஒரு சிறந்த இணைபொருள் (binder). தூள் வடிவில் உள்ள இது நீருடன் கலக்கும்போது, இறுகிக் கடினமாவதுடன், ஏனைய பொருட்களையும் இணைக்கும் தன்மையைப் பெறுகிறது. பழங்காலத்திலேயே உரோமர் எரிமலைச் சாம்பல், செங்கல் துண்டுகள், சுடப்பட்ட சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒருவகைச் சீமைக்காரையைச் செய்து பயன்படுத்தினர்.

தற்காலத்தில் சீமைக்காரையின் மிக முக்கியமான பயன்பாடு, பைஞ்சுதை மற்றும் சீமைக்காரைச் சாந்து தயாரிப்பு ஆகும். இயற்கையாகக் கிடைக்கின்ற அல்லது செயற்கையாகத் தயாரிக்கப்படும் சேர்பொருட்களைச் சீமைக்காரையுடன் கலந்து செய்யப்படும் இப்பொருட்கள் பொதுவான சூழல் நிலைமைகளில் நீடித்து உழைக்கக்கூடிய கட்டடப்பொருளாகும். சீமைக்காரை நீரியற் சீமைக்காரை (Hydraulic cement), நீரியலில் சீமைக்காரை (non-hydraulic cement) என இருவகைப்படும்.

நீரியற் சீமைக்காரைகள்

நீரியற் சீமைக்காரைகள் என்பன, நீருடன் கலக்கும்போது வேதியியல் தாக்கமுற்று இறுகிக் கடினமாகும் தன்மையுள்ள சீமைக்காரைகளாகும். இவை, இவ்வாறு இறுகிக் கடினமான பின்னர் நீருக்கு அடியிலும்கூட வலுவை இழப்பதில்லை. நீருடன் தாக்கமுறும்போது உடனடியாகவே உருவாகும் ஐதரேட்டுக்கள் (hydrates) நீரில் கரையாத் தன்மை கொண்டனவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். தற்காலத்தில் பயன்பாட்டிலுள்ள பெரும்பாலான சீமைக்காரைகள் நீரியற் சீமைக்காரைகளாகும். அத்துடன் இவை, சுண்ணக்கல், களிமண், ஜிப்சம் போன்றவற்றை மூலப்பொருள்களாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் போட்லண்ட் சீமைக்காரை வகையைச் சேர்ந்தவை.

நீரியலில் சீமைக்காரைகள், நீரற்ற சுண்ணாம்பு, ஜிப்சம் சாந்து போன்றவற்றை உள்ளடக்கியவை. இவை வலுப் பெறுவதற்கு உலர்வாக வைத்திருக்கவேண்டியது அவசியம். ஆக்சிக்குளோரைட்டு சீமைக்காரைகள் நீர்மக் கூறுகளைக் கொண்டவை. சுண்ணாம்புச் சாந்து நீரியற் சீமைக்காரைகள் போல் நீருடனான வேதியியற் தாக்கத்தினால் இறுகிக் கடினமாவதில்லை. உலர்வதன் மூலமே கடினத்தன்மை பெறுவதுடன், மிகமெதுவாகவே வளியிலுள்ள காபனீரொட்சைட்டுடன் சேர்ந்து கல்சியம் காபனேட்டை (கல்சியம் காபனேற்று) உருவாக்குவதன்மூலம் பலம் பெறுகிறது.

சீமைக்காரைகளின் வகைகள்

இந்தியாவில் பல வகையான சீமைக்காரைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படுகின்றன. சீமைக்காரைகளின் சிலவகைகளும், அதற்கு இந்திய தரநிர்ணய அமைவனம்(BUREAU OF INDIAN STANDARDS)வழங்கியுள்ள எண்களும் கீழ்கண்டவாறு.

  • போர்ட்லோண்ட் பொசலோனோ சிமெண்ட்(பீபீசி) -IS;1489(part1)-1991
  • ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட்(ஓபீசி)33கிரேட் -IS;269-2013
  • ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட்(ஓபீசி)43கிரேட் -IS;8112-2013
  • ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட்(ஓபீசி)53கிரேட் -IS;12269-2013
  • சல்பேட் ரெசிஸ்டிங் போர்ட்லேண்ட் சிமெண்ட் -IS;12330-1988
  • ராபிட் ஹார்டனிங் போர்ட்லேண்ட் சிமெண்ட் -IS;8041-1990
  • போர்ட்லேண்ட் பிளாஸ்ட் ஃபர்னஸ் ஸ்லாக் சிமெண்ட் -IS;455-1989
  • ஒயிட் போர்ட்லேண்ட் சிமெண்ட் -IS;8042-1989
  • ஹை அலுமினா சிமெண்ட் IS;6452-1989
  • ஆயில் வெல் சிமெண்ட் -IS;8229-1986
  • லோ ஹீட் போர்ட்லேண்ட் சிமெண்ட் IS;12600-1989
  • சூப்பர் சல்பேட்டட் சிமெண்ட் IS;6909-1990
  • ஹைட்ரோஃபோபிக் சிமெண்ட் -IS;8043-1991
  • மேசன்ரி சிமெண்ட் -IS;3466-1988[1]

போர்ட்லேண்ட் சீலாக் சிமெண்ட்

இது இரும்பு தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் சிலாக் (slag) என்னும் பொருளுடன் சேர்த்து தயாரிக்கப் படுவதாகும். இது சிறப்புத்தன்பூகள்வாய்ந்தது. குளோரைட் மற்றும் சல்பேட் தாக்குதலில் இருந்து கான்கீட்டை பாதுகாக்கும் தன்மைவாய்ந்தது. கடலில் கட்டப்படும் கட்டுமானங்கள்,கடல்சார்ந்த பகுதிகளில் கட்டப்படும் கட்டுமானங்கள ஆகியவற்றுக்கு பொருத்தமானது.

சல்பர் ரெசிஸ்சிங் போர்ட்லேண்ட் சிமெண்ட்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானங்கள், இரசாயன தொழிற்சாலை கட்டுமானங்கள்,நிலத்தடியில் சல்பேட் உப்பு அதிகம் இருக்கக்கூடிய இடங்கலில் உள்ள நிலத்திற்கு கீழ் கட்டப்படும் கட்டுமாணங்கள் போன்றவற்றில் பயன்படுகிறது. குலோரைட் தாக்குதலில் இருந்து இரும்புக் கம்பிகளை பாதுக்க்கும் தன்மை இந்த சிமெண்டுக்கு கிடையாது என்பதால் ,நிலத்திலோ,நிலத்தடி நீரிலோ குலோரைட் கலந்திருக்கும் இடங்களில் இந்த சிமெண்டை பயன்படுத்த உகந்ததல்ல

ராபிட்ஹார்டனிங் போர்ட்லேண்ட் சிமெண்ட்

இது விரைவாக கடினமாகி அதிக வலுவை விரைவில் அடையக்கூடிய தன்மைவாய்ந்தது.மிக விரைவாக சீர்செய்யவேண்டிய பழுதுகள், அவசரகால கட்டுமானங்கள், விமான ஓடுபாதையில் ஏற்படும் சேதங்கள் போன்றவற்றை சீர்செய்வது போன்றவற்றிக்கு பயன்படுகிறது.[2]

போர்ட்லேண்ட் பொசலொனா சிமெண்ட்

இந்த சிமெண்ட் அதிக வலிமை, நீடித்த உழைப்பு, விரிசல்களில் இருந்து பாதுகாப்பு, சல்பேட் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு, கசிவு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு போன்ற சிறப்புத் தன்மைகள் வாய்ந்ததாக கூறப்படுகிறது. வீடுகள்,வணிக கட்டடங்கள் பெரும்பாலும் இந்த சிமெண்ட் கொண்டே கட்டப்படுகிறது,

ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட்

இது விரைவாக வலிமையை ஈட்டக்கூடியது என்றாலும் போர்ட்லேண்ட்,பொசலோனா சிமெண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த சிமெண்ட்டை பயன்படுத்து கட்டப்படும் கட்டுமானங்கள் நீடித்து உழைக்கும் தன்மை குறைவு எனக் குறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. தி இந்து தமிழ் சொந்த வீடு இணைப்பு29.நவம்பர் 2014
  2. தி இந்து தமிழ் சொந்தவீடு இணைப்பு13.12.2014
  3. தி இந்து தமிழ் சொந்தவீடு இணைப்பு20.12.2014
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cement
என்பதில் ஊடகங்கள் உள்ளன.