சுயாதீனத் திரைப்படம்

சுயாதீனத் திரைப்படம் (Independent film) என்பது முழு நீளம் அல்லது குறும்பட வடிவில் தயாரிக்கப்படும் ஒரு திரைப்பட வகையாகும். இந்த வகைத் திரைப்படங்கள் கூடுதலாக சுயாதீன பொழுதுபோக்கு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. சுயாதீன திரைப்படங்கள் சில நேரங்களில் அவற்றின் கதைக்கரு, பாணி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களின் தனிப்பட்ட கலை பார்வை உணரப்படும் விதம் ஆகியவற்றால் வேறுபடுகின்றன. இவ்வாறான திரைப்படங்கள் உருவாக்குவது மிகவும் குறைவு, அவ்வாறு தயாரிக்கப்படும் படங்கள் பிரமாண்டமான தயாரிப்பை விட கணிசமாக குறைந்த பொருள்செல்வில் தயாரிக்கப்படுகின்றன.[1]

சுயாதீன திரைப்படங்கள் பெரும்பாலும் சந்தைப்படுத்தும் விதம் மிகவும் குறைவு. உள்ளூர் மற்றும் தேசிய அல்லது சர்வதேச திரைப்பட விழாக்களில் விநியோகிக்கப்படுவதற்கு முன் திரையரங்குகளில் கணிசமான அளவு திரையிடப்படுகிறது. ஒரு சுயாதீன திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திடம் தேவையான நிதி மற்றும் விநியோகத்தைக் கொண்டிருந்தால் சர்வதேச அளவில் திரையிடப்படுகிறது.

இந்த வகைத் திரைப்படத்திற்காக 2018 ஆம் ஆண்டு முதல் சென்னையில் 'சுயாதீனத் திரைப்பட விழா' என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை விருது விழா நடத்தப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்