செப்புக் குவியல் பண்பாடு

செப்பு மனித உருவங்கள், கங்கை-யமுனை ஆற்றுப்படுகை, செப்புக் காலம், கிமு 2800–1500

செப்புக் குவியல் பண்பாடு, இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மேற்கு கங்ககை=யமுனை தோவாப் பகுதியில் காணப்படும் தொல்லியல் வளாகங்களை குறிக்கிறது. இப்பண்பாடு கிமு இரண்டாம் ஆயிரத்தின் முதல் பகுதி காலத்திற்குரியது.[1][note 1][2] செப்புக் குவியல் பண்பாடு, காவி நிற மட்பாண்டப் பண்பட்டுக் காலத்துடன் தொடர்புடையவை. செப்புக் குவியல் பண்பாடு, சிந்து வெளி நாகரிகத்தின் பிந்தைய அரப்பா பண்பாட்டு காலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. கிமு இரண்டாம் ஆயிரத்தில் இந்தோ-ஆரியர்களுடன் செப்புக் குவியல் பண்பாடு தொடர்புறுத்தப்பட்டாலும், [3][4] வேத ஆரியர்களுடன் தொடர்பானது சர்ச்சைக்குரியதாக கருதப்பட்டது. ஏனெனில் வேத கால ஆரியர்களின் எல்லைக்கு கிழக்கே செப்புக் குவியல்கள் காணப்படுகிறது.[2][5]

கலைப்பொருட்கள்

செப்புப் புதையல் கண்டுபிடிப்புகள் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள யமுனா-கங்கை தோவாப் பகுதிகளில் அகழாய்வில் கண்டறியப்பட்டது. மேலும் அவை கிமு இரண்டாம் ஆயிரத்தின் முதல் பாதியில் தேதியிடப்பட்டவை ஆகும்.[2] முதல் இந்திய செப்புக் குவியல்கள், ஹார்பூன் என்பவரால் 1822இல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 1951இல் பி. பா. லால் கங்கைப் படுகை, தக்காணப் பீடபூமி, மற்றும் கிழக்கு இந்தியா பகுதிகளிலிருந்து 35 கலைப்பொருட்களை அகழாய்வில் கண்டுபிடித்தார்.[6] 1985ஆம் ஆண்டில் பால் ஆலன் யூல் என்பவர் செப்புக் குவியல் பண்பாட்டின் 1083 கலைப்பொருட்களை அகழாய்வில் கண்டுபிடித்தார். 1992இல் தெற்கு ஹரியானா மற்றும் வடக்கு இராஜஸ்தானில் செப்புக் குவியல் பண்பாட்டின் 284 கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

தொல்லியல் சூழல் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட பல கலைப்பொருட்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது.[8] இக்கண்டுபிடிப்புகள் குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டாலும், தற்போது தக்காணப் பீடபூமியில் உள்ள தைமாபாத்த்தில் கண்டெடுத்த நான்கு செப்புக் குவியல்கள் குறித்து சில சந்தேகங்கள் எழுகின்றன.[7]

அரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள இந்திய செப்புப் குவியல் கலைப்பொருள் ஒருவேளை உபயோகப் பொருளாக இல்லாவிடினும், சமயச் செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்கலாம்.

பதிவு செய்யப்பட்ட செப்புப் பொருள்கள்

தெற்கு அரியானா மற்றும் வடக்கு இராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பிலான தட்டையான அச்சுகள், ஈட்டிகள் மற்றும் வாளின் கைப்பிடிகள் உள்ளடக்கியது. லோத்தல் (குஜராத்) மற்றும் கல்லூர் (கர்நாடகா) ஆகிய இடங்களில் உள்ள செப்புக் கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டடது.

கலைப்பொருட்களின் பண்புகள்

பயன்படுத்தப்படும் செப்பு தாது, இராஜஸ்தான் (கேத்திரி), தெற்கு ஹரியானா, பீகார்/மேற்கு வங்காளம்/ஒரிசா (குறிப்பாக சிங்பூம்) மற்றும் மத்தியப் பிரதேசம் (மலாஜ் காண்ட்) ஆகிய இடங்களில் பல்வேறு செப்புத் தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.

தாதுப் பொருட்களில் 78-99% செம்பு மற்றும் 32.9% இரும்பு உள்ளது.[8] அரியானாவில் உள்ள கலைப்பொருட்கள் மிகப்பெரிய இரசாயன மாறுபாட்டைக் காட்டுகின்றது. கங்காரியாவின் செப்புத் தாதுக்கள் வேதியல் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. அரப்பா பண்பாட்டினர் செப்பு உலோகக்கலவைகளை உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்குகின்றனர்.

கலைப்பொருட்களின் விளக்கங்கள்

கல்லறை எச் கலாச்சாரம், பிந்தைய அரப்பா, காவி நிற மட்பாண்டப் பண்பாடு, செப்புக் குவியல் பண்பாடு மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு காலத்திய கலைப்பொருட்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் பிற்பகுதி (கிமு 1900-1300)

இந்தோ-ஈரானிய இடம்பெயர்வுகளுடன் தொடர்புடைய அன்ட்ரோனோவோ பண்பாடு, பாக்திரியா-மார்கியானா மற்றும் யாஸ் பண்பாடு தொல்பொருள் கலாச்சாரங்கள், செப்புக் குவியல் பண்பாட்டுடன் தொடர்புடையவை.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Yule 2003, ப. 541.
  2. 2.0 2.1 2.2 Mallory & Adams 1997, ப. 126.
  3. Mallory & Adams 1997, ப. 125.
  4. Parpola 2020.
  5. Yule 2002, ப. 118.
  6. Lal 1951, ப. 20–39.
  7. Yule 1985, ப. 10-12, Pl 2-4.
  8. P. Yule/A. Hauptmann/M. Hughes, The Copper Hoards of the Indian Subcontinent: Preliminaries for an Interpretation,Jahrbuch des Römisch-Germanischen Zentralmuseums Mainz 36, 1989 [1992] 262-263 Tab. 4 & 5 http://archiv.ub.uni-heidelberg.de/savifadok/volltexte/2009/509/.
  9. Mallory & Adams 1997, ப. 310.

குறிப்புகள்

  1. Cite warning: <ref> tag with name Yule cannot be previewed because it is defined outside the current section or not defined at all.

ஊசாத்துணை

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்