சேர்வெயர் திட்டம்

சேர்வெயர் 3 விண்கலம் சந்திரனில் தரையிறங்குவதை அப்பல்லோ 12 விண்வெளி வீரர்கள் எடுத்த படம்

சேர்வெயர் திட்டம் (Surveyor Program) என்பது நாசாவின் சந்திரனை ஆராயும் விண்வெளித் திட்டமாகும். இத்திட்டத்தில் 1966 முதல் 1968 வரையான காலப்பகுதியில் மொத்தம் ஏழு தானியங்கி விண்கலங்கள் சந்திரனை நோக்கி ஏவப்பட்டன. சந்திரனின் தரையில் மெதுவாக இறங்குவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். நாசாவின் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் அப்பல்லோ திட்டத்துக்கு முன்னோடியாக இது கருதப்படுகிறது. இத்திட்டத்தில் அனுப்பப்பட்ட விண்கலங்கள் அனைத்தும் சந்திரனிலேயே தங்கியிருக்கின்றன. எவையுமே திரும்பி வரவில்லை. சேர்வெயர் 3 இன் சில பகுதிகளை அப்பல்லோ 12 விண்கலத்தில் சென்றவர்கள் திரும்ப பூமிக்கு எடுத்து வந்தனர்.

குறிக்கோள்கள்

சேர்வெயர் 7 தரையிறங்கிய பகுதி

முக்கிய குறிக்கோளான மெதுவான தரையிறக்கம் தவிர, வேறு பல முக்கிய தகவல்களை இத்திட்டத்தின் மூலம் நாசா அறிவியலாளர்கள் பெற்றனர். பயணத்தூரத்தின் இடையீல் சில தவறுகள் திருத்தப்பட்டமை சோதிக்கப்பட்டது. அத்துடன் அப்பல்லோ திட்டத்துக்காக மனிதர்கள் இறங்குவதற்கான தகுந்த இடங்களைத் தீர்மானிக்கவும் இத்திட்டம் உதவியது. பல சேர்வெயர் விண்கலங்கள் சந்திரனின் மண் மாதிரிகளை சோதிக்கும் தானியங்கி கருவிகளை கோண்டு சென்றன. அத்துடன் சந்திரனின் மண் தூசிகளின் ஆழத்தின் அளவு இதுவரையில் அளக்கப்படவில்லை. அக்குறையை இத்திட்டம் போக்கியது. மனிதன் சந்திரனில் இறங்குவதற்கு ஏதுவான ஆழம் இருந்ததை இக்கலங்கள் ஊர்ஜிதப்படுத்தின. சந்திரனின் மண்ணின் வேதியியல் பகுப்புகளை ஆராயும் ஆய்வுக் கருவிகளையும் இத்திட்டத்தின் சில விண்கலங்கள் கொண்டு சென்றன.

திட்டங்கள்

சந்திரனில் சேர்வெயர் கலங்கள் இறங்கிய பகுதிகள்

மொத்தம் 7 விண்கலங்கள் இத்திட்டத்தில் சந்திரனை நோக்கி ஏவப்பட்டன. இவற்றில் ஐந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. 2ம், 3ம் திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை.

சேர்வெயர் 6 மட்டுமே சந்திரனின் தட்ரையீல் இருந்து மேல் கிளம்பியது. சேர்வெயர் 3 தரையிறங்கிய இடத்திலேயே அப்பல்லோ 12 தரையிறங்கியது.

விண்வெளிப் பயணப் பந்தயங்கள்

சேர்வெயர் திட்டங்கள் செயற்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்வெளிப் பயணத்திட்டத்தில் மிகத்தீவிரமாக தனித்தனியே இறங்கியிருந்தன. சேர்வெயர் 1 1966 ஜூன் மாதத்தில் தரையிறங்குவதற்கு 4 மாதங்களுக்கு முன்னரே சோவியத்தின் லூனா 9 பெப்ரவரியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்