ஜாலாவார் மாவட்டம்

5 ஆம் எண் ஜலாவார் மாவட்டம் ஆகும்.

சலாவார் மாவட்டம் (Jhalawar-ஜலாவார்) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள 33 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலவர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள கோல்வி கிராமத்தில் பௌத்த கோல்வி குகைகள் உள்ளது.

எல்லைகள்

இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடமேற்கே கோட்டா மாவட்டமும், வடகிழக்கே பரான் மாவட்டமும், கிழக்கே குணா மாவட்டமும், தெற்கே ராஜ்கார் மர்றும் ஷாஜாபூர் மாவட்டமும் அமைந்துள்ளது.

வட்டங்கள் (தாலுகாக்கள்)

இம்மாவட்டம்,

  • ஜலாவார்
  • அக்லேரா
  • பவானி
  • மண்டி
  • பிரவா
  • கான்பூர்
  • மனோகர் தானா

ஆகிய ஆறு தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 14,11,327 ஆகும்.[1]இது சுவிட்ஸர்லாந்து நாட்டின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[2] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 227 எனும் வீதத்தில் உள்ளது.[1]கல்வியறிவு 62.13% ஆகும்.[1]

பழங்குடியினர்

இம்மாவட்டத்தில் பல பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுள் மீனா மக்கள் மற்றும் பில் மக்கள் எனும் பழங்குடி இனத்தவர் பெரும்பான்மையினாராய் உள்ளனர்.

மாவட்டப் பிரிப்பு

இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிய சாஞ்சோர் மாவட்டம் நிறுவப்பட்டது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
  3. Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state