ஜூனாகத் மாவட்டம்
ஜூனாகத் மாவட்டம் (Junagadh district) குசராத்து மாநிலத்தின் மேற்கில், கத்தியவார் தீபகற்பத்தின், சௌராஷ்டிர தேசத்தில், காம்பே வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. ஜூனாகத் மாவட்டம், ஜூனாகத் நகரை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. ஜூனாகத் அரசை ஆண்ட சுதேச சமஸ்தான மன்னர், இந்திய அரசின் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் வற்புறுத்தல் காரணமாக இந்தியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தார். [1][2]
புவியியல்
ஜூனாகத் மாவட்டம், குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில், கத்தியவார் தீபகற்பத்தில் உள்ள சௌராஷ்ட்ர பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கில் ராஜ்கோட் மாவட்டம், வடமேற்கில் போர்பந்தர் மாவட்டம், கிழக்கில் அம்ரேலி மாவட்டம், தெற்கிலும் மேற்கிலும் கிர் சோம்நாத் மாவட்டம் மற்றும் அரபுக்கடல் அமைந்துள்ளது.
(67வது இந்தியா சுதந்திரமான 15-08-2013இல் ஏழு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. சோம்நாத் வருவாய் கோட்டத்தையும், கிர்னார் மலைப்பகுதிகளையும் ஜூனாகாத் மாவட்டத்திலிருந்து பிரித்து கிர்சோம்நாத் மாவட்டம் எனும் புதிய மாவட்டம் 15-08-2013-இல் உருவாக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் 10 வருவாய் வட்டங்களும், 7 நகராட்சிகளும், 547 கிராமங்களையும் கொண்டது. [3]
- சேர்காத் வட்டம்
- மானவதர் வட்டம்
- வந்தலி வட்டம்
- ஜூனாகத் நகர்புற வட்டம்
- ஜூனாகத் கிராமப்புற வட்டம்
- பேம்சான் வட்டம்
- மேந்தார்டா வட்டம்
- மாளியா - ஹாட்டீனா வட்டம்
- மாங்குரோல் வட்டம்
- கேசோத் வட்டம்
மக்கள்தொகை பரம்பல்
309 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 16.12 இலட்சம் ஆகும். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 952 பெண்கள் வீதம் உள்ளனர். இம்மாவட்ட மக்களின் எழுத்தறிவு 76.88% ஆகவுள்ளது.
போக்குவரத்து வசதிகள்
ஜூனாகத் நகர் இருப்புப்பாதை தொடருந்துகளாலும், சாலை வழிப் பேரூந்துகளாலும், வானூர்திகளாலும் குசராத்து மாநிலத்தின் பிறபகுதிகள் மற்றும் இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கீடு விவரம்
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 27,42,291 ஆகும். இந்தியாவின் 640 மாவட்டங்களில், மக்கட்தொகை அடிப்படையில் இம்மாவட்டம் 142வது இடத்தில் உள்ளது. மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 201-2011 முடிய பத்தாண்டுகளில் மக்கள்தொகை 12.01 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கல்விவளர்ச்சி விகிதம் 76.88 விழுக்காடாக உள்ளது. மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 310 மக்கள் வசிக்கின்றனர்.
காடுகளும் விலங்கினங்களும்
ஆசிய சிங்கங்களுக்கு புகழ்பெற்ற கிர் தேசியப் பூங்கா இம்மாவட்டத்தில் உள்ள கிர்நார் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. மேலும் இவ்வனப்பகுதியில் மூங்கில் காடுகளும், நீண்ட மூக்கு வல்லூறுகளும் அதிகமாக உள்ளது.
சமண, பௌத்தக் குடைவரைகள்
ஜூனாகத் நகரத்திற்கு அருகே பவ பியாரா குகைகள் உள்ளிட்ட மூன்று பௌத்த, சமணக் குடைவரைகள் உள்ளது.
புகழ்பெற்ற ஜுனாகத் மாவட்டத்தினர்
- நரசிங் மேத்தா (1414 – 1481), கவிஞர் - சாது.
- திரிபுவன்தாஸ் மோதிசந்த் ஷா (1850–1904), மாவட்டத் தலைமை மருத்துவர்,
- திருபாய் அம்பானி (1932–2002), தொழிலதிபர்
- பர்வீன் பாபி (1949–2005) , பாலிவுட் நடிகை
- இராசேந்திர சுக்லா (1942-), கவிஞர்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ http://www.oocities.org/indianphilately/chapter23a.htm
- ↑ http://books.google.co.in/books?id=kWptYbzpXE8C&pg=PA26&lpg=PA26&dq=UNITED+STATE+OF+KATHIAWAR&source=bl&ots=dErpdGrhEq&sig=mIHUfl5Q5GK4iLjZ84NxtL0oPq0&hl=en&ei=mjRoTtDxEIjYrQfv853mCg&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CEUQ6AEwBg#v=onepage&q=UNITED%20STATE%20OF%20KATHIAWAR&f=false
- ↑ ஜூனாகத் மாவட்ட நிர்வாகம்
குறிப்புதவிகள்
- குசராத்து கணக்கெடுப்பு இணையதளம் [1]
- இந்திய மக்கள் கணக்கெடுப்பு இணையதளம் [2]
- இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2011
- குசராத்து மாநில அரசின் இணையதளம் [3]
வெளி இணைப்புகள்
- ஜூனாகாத் மாவட்ட இணையதளம்
- ஜூனாகாத் மாவட்டத்தின் சுற்றுலா இடங்கள்Places in Junagadh
- ஜூனாகாத் மாவட்டப்பஞ்சாயத்து அலுவலக இணையதளம் Junagadh Jilla Panchayat official website பரணிடப்பட்டது 2014-12-05 at the வந்தவழி இயந்திரம்
ஜூனாகாத் மாவட்ட எல்லைகள்