ஜெய்-சி
ஜெய்-சி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஷான் கோரி கார்டர் |
பிற பெயர்கள் | ஜெய்-சி (Jay-Z), யங்க் ஹோவ் (Young Hov), ஜிக (Jigga) |
பிறப்பு | திசம்பர் 4, 1969 நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
பிறப்பிடம் | நியூயார்க் நகரம், நியூயார்க் |
இசை வடிவங்கள் | ஹிப் ஹொப் |
தொழில்(கள்) | ராப் பாடகர், ராப் எழுத்துவர், தலைமை இயக்க ஆணையர் (CEO) |
இசைத்துறையில் | 1989-2003, 2006-இன்று |
வெளியீட்டு நிறுவனங்கள் | ராக்-அ-ஃபெல்லா (Roc-A-Fella) |
இணைந்த செயற்பாடுகள் | கான்யே வெஸ்ட், பீனி சீகல், ஃப்ரீவே, நாஸ், பியான்சே நோல்ஸ் |
இணையதளம் | jay-z.com |
ஜெய்-சி (Jay-Z), என்றழைக்கப்படும் ஷான் கோரி கார்டர் (Shawn Corey Carter), அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்தவர். சிறுவயதிலேயே இவர் இசையில் அக்கறைப்பட்டார். 1989 முதல் 1995 வரை வேறு ராப்பர்களின் பாடல்களில் சில கவிதைகளை படைத்தார். 1996இல் வேறு ரெக்கொர்ட் நிறுவனத்தை சேரர்த்துக்கு பதில் தன் ரெக்கொர்ட் நிறுவனம், ராக்-அ-ஃபெல்லா, நிறுத்தார். இதின் மூலம் இவரின் முதலாம் ஆல்பம், ரீசனபில் டவுட், படைத்து புகழுக்கு வந்தார். 1996 முதல் 2007 வரை 11 ஆல்பம்களை படைத்த ஜெய்-சி ராப் உலகத்தில் மிகவும் செல்வந்தராவார். 7 தடவை கிராமி விருதை வெற்றிபெற்ற ஜெய்-சி ராப் இசைத் தவிர நியூயார்க் நகரத்தில் 40/40 க்ளப்பின் உடைமைக்காரர், நியூ ஜெர்சி நெட்ஸ் கூடைப்பந்து அணியின் ஒரு உடைமைக்காரர் ஆவார். இவரின் மனைவி புகழ்பெற்ற ஆர் & பி பாடகர் பியான்சே நோல்ஸ் ஆவார்.[1][2][3]
ஆல்பம்கள்
- 1996: ரீசனபில் டவுட்
- 1997: இன் மை லைஃப்டைம், வால்யும் 1
- 1998: வால்யும் 2: ஹார்டு நாக் லைஃப்
- 1998: ஸ்ட்ரீட்ஸ் இஸ் வாச்சிங் (மற்ற ராப்பர்கள் கூட)
- 1999: வால்யும் 3: லைஃப் & டைம்ஸ் ஆஃப் ஷான் கார்டர்
- 2000: த டைனஸ்டி ராக் லா ஃபமிலியா
- 2001: த புளூப்பிரிண்ட்
- 2002: த பெஸ்ட் ஆஃப் போத் வேல்ட்ஸ் (ஆர். கெலி கூட)
- 2002: த புளூப்பிரிண்ட் 2: த கிஃப்ட் & த கர்ஸ்
- 2003: த ப்ளாக் ஆல்பம்
- 2004: அன்ஃபினிஷ்ட் பிஸ்னஸ் (ஆர். கெலி கூட)
- 2004: கொலிஷன் கோர்ஸ் (லின்கின் பார்க் கூட)
- 2006: கிங்டம் கம்
- 2007: அமெரிக்கன் கேங்ஸ்டர்
மேற்கோள்கள்
- ↑ "The Carter Administration | Discography | Discogs". Discogs. Archived from the original on May 26, 2019. பார்க்கப்பட்ட நாள் February 19, 2020.
- ↑ "Jay-Z". Rock and Roll Hall of Fame. Archived from the original on May 13, 2021. பார்க்கப்பட்ட நாள் November 15, 2021.
- ↑ Bandini (June 18, 2015). "Jay Z's First Record Ever Was in 1986…And It Was Not Hawaiian Sophie. Take a Listen (Audio)". Ambrosia For Heads. Archived from the original on November 15, 2021. பார்க்கப்பட்ட நாள் November 15, 2021.