ஜொகூர் நீரிணை

ஜொகூர் நீரிணை
Straits of Johor
சிங்கப்பூர் மலேசியாவுக்கு இடையே ஜொகூர் நீரிணை
ஆள்கூறுகள்1°26′48″N 103°45′13″E / 1.44667°N 103.75361°E / 1.44667; 103.75361
வகைநீரிணை
வடிநில நாடுகள்சிங்கப்பூர்
மலேசியா
அதிகபட்ச நீளம்50 கி.மீ.
அதிகபட்ச அகலம்5 கி.மீ.
குறைந்தபட்ச அகலம்1 கி.மீ.
சிங்கப்பூரின் உட்லண்சு சோதனைச் சாவடியில் இருந்து ஜொகூர் நீரிணையில் ஜொகூர்-சிங்கப்பூர் விரைவுச்சாலை.
ஜொகூர் நீரிணையின் கிழக்கு நுழைவுக் காட்சி; இடது புறத்தில் உஜோங் தீவு; பின்னணியில் உபின் தீவு

ஜொகூர் நீரிணை (ஆங்கிலம்: Johore Strait அல்லது Tebrau Strait அல்லது Straits of Johor; மலாய் மொழி: Selat Johor; சீனம்: 柔佛海峡) என்பது சிங்கப்பூர்; தீபகற்ப மலேசியா எனும் இரு நிலப் பகுதிகளைப் பிரிக்கும் ஓர் அனைத்துலக நீரிணை ஆகும்.[1]

இந்த நீரிணையானது தெற்கில் சிங்கப்பூர் நாட்டையும் அதன் தீவுகளையும்; வடக்கே மலாய் தீபகற்பத்தின் பிரதான நிலப்பரப்பில் உள்ள மலேசிய மாநிலமான சொகூர் மாநிலத்தையும் பிரிக்கிறது.

அதே வேளையில், மேற்கில் மலாக்கா நீரிணையையும் தென்கிழக்கில் சிங்கப்பூர் நீரிணையையும் இணைக்கிறது. ஜொகூர் ஆற்றின் முகத்துவாரம்; மற்றும் ஆற்றுப் படுகைகள்; ஜொகூர் நீரிணையின் வடகிழக்கில் உள்ளன.

பாலங்கள்

ஜொகூர் நீரிணையைக் கடக்கும் வகையில் தற்போது இரண்டு பாலங்கள் உள்ளன.

1. மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம். (ஆங்கிலம்: Johor–Singapore Causeway; மலாய் மொழி: Tambak Johor)

2. மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம். (ஆங்கிலம்: Malaysia–Singapore Second Link; மலாய் மொழி: Laluan Kedua Malaysia–Singapura)

மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம்

மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம், சொகூர் பாரு மாநகரத்தையும்; சிங்கப்பூரில் உள்ள உட்லண்சு (Woodlands) பகுதியையும் இணைக்கிறது.[2]

மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம்

மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புப் பாலம்; இதைப் பொதுவாக மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் என்று அழைப்பது உண்டு. இந்த இணைப்புப் பாலம், மலேசியாவில் உள்ள இசுகண்டார் புத்தரி நிலப் பகுதியையும் சிங்கப்பூரில் உள்ள துவாசு பகுதியையும் இணைக்கிறது.

தரைப்பாலம் (Causeway) என்பது, நீர் நிலை அல்லது சதுப்புநிலத்தை இணைக்கும் வகையில் உயர்த்திக் கட்டப்பட்ட சாலை அல்லது தொடருந்துச் சாலை என்பதைக் குறிக்கும். தரைப்பாலங்கள் பொதுவாக உயர்த்தப்பட்ட மணல் திட்டின் மேல் அமைக்கப்பட்டு இருக்கும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்