ஜோனஸ் கோர்ச்சாக்

ஜோனஸ் கோர்ச்சாக்
1930 ஒளிப்படத்தில் ஜோனஸ் கோர்ச்சாக்
பிறப்புஎன்றி கோல்ட்ஸ்மித்
(1878-07-22)22 சூலை 1878
வார்சாவா, காங்கிரஸ் போலந்து, உருசியப் பேரரசு
இறப்புஅண். 7 ஆகத்து 1942(1942-08-07) (அகவை 64)
திரெப்ளிங்கா வதை முகாம், ஜெர்மன் ஆக்கிரமிப்பு போலந்து
தேசியம்போலந்து
பணிசிறார் எழுத்தாளர், மனிதநேயர், குழந்தைகள் மருத்துவர், சிறார்களுக்கான ஆசிரியர், குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பவர்.
வலைத்தளம்
korczak.org.uk

 

ஜோனஸ் கோர்ச்சாக் என்ற புனைபெயரில் அறியப்பட்ட என்றி கோல்ட்ஸ்மித் (Janusz Korczak, the pen name of Henryk Goldszmit [1] (22 யூலை 1878 அல்லது 1879 - 7 ஆகத்து 1942), [2]) என்பவர் ஒரு போலந்து யூத குழந்தை மருத்துவர், கல்வியாளர், சிறார் இலக்கிய ஆசிரியர் ஆவார். இவர் துவக்ககால சிறார் உரிமை ஆர்வளர் ஆவார். 1919 இல் குழந்தைகள் அரசியலமைப்பை உருவாக்கினார்.

வார்சாவாவில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றிவந்தர். இந்நிலையில், 1942 ஆம் ஆண்டு செருமனியின் இட்லர் படைகள் போலந்தை ஆக்கிரமித்தன. இவர் தலைவராக இருந்த ஆதரவற்றோர் அனைவரும் கெட்டோவிலிருந்து திரெப்ளிங்கா வதை முகாமுக்கு அனுப்பப்பட்டபோது, தந்தையோ அல்லது தாயோ யூரதல்லாத பட்சத்தில் கோர்ச்சாக் தன்னை விடுவித்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையிலும், இவர் அங்கிருந்து வெளியேறாமல் ஆதரவற்ற அந்த மாணவர்களுடனே தங்கினார். [3]

துவக்க கால வாழ்க்கையும் கல்வியும்

கோர்ச்சாக் 1878 இல் வார்சாவில் பிறந்தார். இவரது தந்தை இவரது பிறப்புச் சான்றிதழை உடனடியாகப் பெறத் தவறியதால் இவரது பிறந்த தேதி குறித்து இவருக்குத் தெரியவில்லை என்று கூறினார். [4] இவரது தந்தை ஜோசப் கோல்ட்ஸ்மிட், [1] யூத அறிவொளி இயக்கமான ஹஸ்கலாவின் ஆதரவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய வழக்கறிஞர், [5] இவரது தாய் போலந்தின் கலிஸ் நகரைச் சேர்ந்த ஒரு முக்கிய குடும்பத்தின் மகளான செசிலியா நீ கெபிக்கா ஆவார். [6] யூத குடும்பத்தில் பிறந்த இவர், தனது பிற்கால வாழ்க்கையில் ஒரு அறியவியலாமைவாதியாக இருந்தார். குழந்தைகள் மீது சமயத்தைத் திணிப்பதில் இவருக்கு நம்பிக்கை இல்லை. [7] [8] இவரது தந்தை 1890 இல் நோய்வாய்ப்பட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 25 ஏப்ரல் 1896 அன்று இறந்தார் [9] [10] இவரது குடும்பத்தின் நிதி நிலைமை மோசமடைந்ததால், ஹென்றிக் ஜிம்னாசியத்தில் (இடைநிலைப் பள்ளி) படித்துக்கொண்டிருத்த போதே, மற்ற மாணவர்களுக்கு தனிப்பயிற்சி ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். [11] 1896 ஆம் ஆண்டில் இவர் குழந்தைகளை வளர்ப்பது பற்றிய நையாண்டி உரையான Węzeł gordyjski ( The Gordian Knot ) மூலம் இலக்கியத் துறையில் அறிமுகமானார். [6]

1898 இல், இக்னசி ஜான் படரேவ்ஸ்கி இலக்கியப் போட்டியில் ஜானுஸ் கோர்சாக் என்ற பெயரை புனைபெயராகப் பயன்படுத்தினார். இந்தப் பெயர் ஜோசப் இக்னசி க்ராஸ்ஸெவ்ஸ்கி எழுதிய ஓ ஜனாசு கோர்சாகு ஐ பிக்னேஜ் மிக்ஸ்னிகோவ்னி என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. [12] 1890 களில் இவர் பறக்கும் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1898-1904 ஆண்டுகளில் கோர்சாக் வார்சா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். [4] அப்போது பல போலிய மொழி செய்தித்தாள்களில் எழுதினார். மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு, ஒரு குழந்தை மருத்துவரானார் . 1905-1912 இல் கோர்சாக் வார்சாவில் உள்ள பெர்சோன்ஸ் மற்றும் பாமன்ஸ் குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரிந்தார். 1905–06 இல் உருசிய-சப்பானியப் போரின்போது, ஒரு இராணுவ மருத்துவராகப் பணியாற்றினார். இதற்கிடையில், இவரது புத்தகமான Child of the Drawing Room ( Dziecko salonu ) இவருக்கு இலக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.

1920 களில் ஜானுஸ் கோர்சாக் குழந்தைகளுடன்
கோர்சாக் பணியாற்றிய 92 குரோச்மல்னா தெருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லம். இரண்டாம் உலகப் போரின் போது அழிக்கப்பட்டு மீண்டும் சீர்படுத்தப்படாமல் மாடியில் இருந்த ஒரு அறையில் அவர் வசித்து வந்தார்
கோர்சாக்கின் ஆதரற்றோர் இல்லம் இன்னும் 6 ஜாக்டோரோவ்ஸ்கா தெருவில் செயல்பட்டு வருகிறது

1907-08 இல், கோர்சாக் செருமனியின் பேர்லினில் படிக்கச் சென்றார். 1909 இல் ஆதரவற்றோர் சங்கத்தில் பணிபுரியும் போது, இவர் தனது எதிர்கால நெருங்கிய கூட்டாளியான ஸ்டெபானியா வில்சின்ஸ்காவை சந்தித்தார்.

தொழில்

1911-1912 இல், இவர் வார்சாவில் உள்ள டோம் சியரோட்டின் இயக்குநரானார், இது யூதக் குழந்தைகளுக்காக இவரே வடிவமைத்த ஒரு ஆரதவற்றோர் இல்லமாகும். தன் உதவியாளராக வில்சின்ஸ்காவை நியமித்தார். அங்கு இவர் குழந்தைகளுக்காக ஒரு வகையான குடியரசை உருவாக்கினார். அதில் சொந்தமாக ஒரு சிறிய நாடாளுமன்றம், நீதிமன்றம், ஒரு செய்தித்தாள் போன்றவை இருந்தன. மருத்துவராக தனது மற்ற பணிகளை இதற்காக குறைத்துக் கொண்டார். இந்த காலகட்டத்தில் யூத குழந்தைகளுக்கான கோடைக்கால முகாம் பற்றிய இவரது சில விளக்கங்கள் பின்னர் அவரது Fragmenty Utworów இல் வெளியிடப்பட்டு அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

முதலாம் உலகப் போரின் போது, 1914 இல் கோர்சாக் உருசிய இராணுவத்தில் லெப்டினன்ட் பதவியுடன் இராணுவ மருத்துவரானார். போலந்து-சோவியத் போரின் போது மேஜர் பதவியுடன் போலந்து இராணுவத்தில் மீண்டும் இராணுவ மருத்துவராக பணியாற்றினார். ஆனால் போலந்தின் லோட்சில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு வார்சாவில் பணிக்கு அனுப்பபட்டார். போருக்குப் பிறகு, இவர் வார்சாவில் தனது மருத்துவர் பணியைத் தொடர்ந்தார். 1919 ஆம் ஆண்டு அவர் எழுதிய ஹவ் டூ லவ் எ சில்ரன் என்ற புத்தகத்தில் குழந்தையின் அடிப்படை உரிமைகளை வரையறுத்தார். குழந்தைகள் தங்களுக்கென்று உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர். தவறு செய்யும் உரிமை, சுயமாக கருத்துகளை உருவாக்கிக் கொள்ளும் உரிமை, தங்களுக்கான மரியாரதையைப் பெறும் உரிமை அவர்களுக்க் உண்டு என்று வலியுறுத்தினார்.[13]

1926 ஆம் ஆண்டில், டோம் சியரோட்டின் (ஆதரவற்றோர் இல்லம்) குழந்தைகள் தங்கள் சொந்த செய்தித்தாளான மாலி பிரெக்லாட் (சிறிய விமர்சனம்) தொடங்க கோர்சாக் ஏற்பாடு செய்தார். இது போலந்து-யூத செய்தித்தாளான நாஸ் பிரெக்லாட் உடன் வாராந்திர இணைப்பாக வந்தது. இந்தக் காலக்கட்டத்தில், இவரது செயலாளராக புகழ்பெற்ற போலந்து புதின ஆசிரியர் இகோர் நியூவர்லி இருந்தார். இவரது ஆதரவற்றோர் இல்லத்திற்கு CENTOS என்ற போலந்து-யூத தொண்டு நிறுவனம் ஆதரவாக இருந்தது. [14]

கோர்சாக் (2017 ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆசிரியராக இருந்த எங்கள் விமர்சனம் குழந்தைகள் செய்தித்தாளின் முதல் இதழ்

1930 களில், இவர் சொந்தமாக வானொலி நிகழ்ச்சிகளை நடத்தினார். அதில் குழந்தைகளின் உரிமைகளை ஊக்குவித்து பிரபலப்படுத்தினார். 1933 ஆம் ஆண்டில், இவருக்கு பொலோனியா ரெஸ்டிட்யூட்டாவின் வெள்ளிச் சிலுவை விருது வழங்கப்பட்டது. 1934 மற்றும் 1936 இக்கு இடையில், கோர்சாக் ஒவ்வொரு ஆண்டும் கட்டளைப் பாலத்தீனத்திற்குச் சென்று அதன் கிப்புட்சைப் பார்வையிட்டார். இவர் எழுதிய ஒரு கடிதம், இவருக்கு பாலத்தீனத்திற்குச் சென்றுவிடும் நோக்கம் இருந்ததாகக் குறிக்கிறது, ஆனால் இறுதியில், தனது குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாது என்று இவர் உணர்ந்தார். [15] [ நம்பமுடியாத ஆதாரம்? ] இவர் போலந்திலேயே தங்கி தலைமை ஆசிரியராக தனது பணியைத் தொடர்ந்தார்.

ஹோலோகாஸ்ட்

செப்டம்பர் 1, 1939 தேதியிட்ட Mały Przegląd இன் கடைசி இதழ் (சிறிய விமர்சனம்)
1940 இல் வார்சாவில் ஜேர்மன் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் உத்தரவில்பேரில் மருத்துவர்களின் கட்டாயப் பதிவின் போது கோர்சாக்கின் நிரப்பபட்ட படிவம்.
Państwowa Szkoła Handlowa Męska im இன் கட்டிடம். ஜே. ஐ எம். ரோஸ்லெரோவ், நவம்பர் 1940 மற்றும் அக்டோபர் 1941 க்கு இடையில் வார்சா கெட்டோவில் உள்ள டோம் சியரோட்டின் அமைவிடம்

1939 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது, கோர்சாக் போலந்து தரைப்படையில் பணிபுரிய முன்வந்தார், ஆனால் இவரது வயது காரணமாக இவரது சேவை மறுக்கப்பட்டது. வார்சாவை நாட்சிப் படையான வேர்மாக்ட் கைப்பற்றியதை இவர் கண்டார். 1940 இல் நாட்சி ஜெர்மனியர்கள் வார்சா கெட்டோ என்னும் யூதர்களுக்கான முகாமை உருவாக்கியபோது, இவரது அனாதை இல்லம் அதன் கட்டிடமான குரோச்மல்னா 92 இல் உள்ள டோம் சியரோட்டிலிருந்து கெட்டோவுக்கு (முதலில் சோட்னா 33 மற்றும் பின்னர் சியன்னா 16 / Śliska 9) இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [16] கோர்சாக் அவர்களுடனே முகாமுக்குச் சென்றார். சூலை மாதம், ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை இரவீந்திரநாத் தாகூரின்போஸ்ட் ஆபிஸ் நாடகத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஜானுஸ் கோர்சாக் முடிவு செய்தார்.

தனிப்பட்ட வாழ்க்கையும் இறப்பும்

1942 ஆகத்து 5 அல்லது 6 அன்று, நாட்சி ஜெர்மன் வீரர்களால் 192 சிறுவர்களை யூதர்கள் என்று பட்டியலிட்டு அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டது (உண்மையான எண்ணிக்கையைப் பற்றி சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன: அது 196 ஆக இருக்கலாம்) சுமார் ஒரு டசன் பணியாளர்கள் அவர்களை தரெப்ளிங்கா அழித்தொழிப்பு முகாமுக்கு அழைத்துச் செல்ல வந்தனர். தந்தையோ தாயோ யூதரல்லாத பட்சத்தில் கோர்சாக் தன்னை விடுவித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர் அந்த ஆதரவற்ற குழந்தைகளை கைவிட முடியாது என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்தார். ஆகத்து 5 ஆம் நாள், இவர் மீண்டும் தன்னை விடுவித்துக் கொள்ளும் சலுகைகளை மறுத்து, குழந்தைகளுடன் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். [17]

குழந்தைகள் தங்களிடமிருந்த சிறந்த ஆடையை அணிந்தனர். மேலும் ஒவ்வொருவரும் ஒரு நீல கைப்பையையும் பிடித்த புத்தகம் அல்லது பொம்மையையும் எடுத்துச் சென்றனர். போர்க்கால எழுத்துகளை, ஆவணங்களை ரிங்கல்ப்ளம் பெட்டக காப்பகத்தில், [18] பாதுகாத்து வைத்த நேரில் கண்ட சாட்சியான ஜோசுவா பெர்லே, கோர்சாக்க், குழந்தைகளை கெட்டோ வழியாக உம்ஷ்லாக்பிளாட்ஸ் (மரண முகாம்களுக்கு கொண்டு செல்லுவதற்கு முன் தங்க வைக்கப்படும் முகாம்) வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றதை விவரித்தார்:

நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, ஆதரவற்ற குழந்தைகளின் குழு இறுதியாக உம்ஷ்லாக்பிளாட்சை அடைந்தபோது, ​​ஒரு சுத்ஸ்டாப்பெல் அதிகாரி கோர்சாக்கை தனக்குப் பிடித்த சிறார் நூல் ஆசிரியர்களின் ஒருவர் என்று கூறி, அவர் தப்பிச்செல்ல உதவ முன்வந்தார். அதிகாரி கோர்சாக்கை தனக்கு பிடித்த குழந்தைகள் புத்தகங்களில் ஒன்றின் ஆசிரியராக அங்கீகரித்து, அவர் தப்பிக்க உதவ முன்வந்தார். மற்றொரு பதிப்பில், நாஜி அதிகாரிகள் கோர்சாக்கிற்கு ஒருவித "சிறப்பு சலுகையை" அளிக்க மனதில் கொண்டிருந்ததால், அதிகாரி அதிகாரப்பூர்வமாக அவ்வாறு செயல்பட்டார். என்னதான் சலுகை அளித்தாலும், கோர்சாக் மீண்டும் அதற்கு மறுத்துவிட்டார். இவர் சுமார் 200 குழந்தைகளுடன், ஸ்டெபானியா வில்சின்ஸ்கா என்ற கல்வயாளர் [19] மற்றும் சுமார் 12 பணியாளர்களுடன் தொடருந்தில் ஏறினார். அதன் பிறகு இவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

கோர்சாக் திருமணம் செய்துகொள்ளவில்லை, அவருக்கென்று குழந்தைகளும் இல்லை. [20] [21]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Yad Vashem (2010). "Ceremony Marking 68 Years Since its Murder of Korczak and the Children of the Orphanage". Yad Vashem The Holocaust Martyrs' and Heroes' Remembrance Authority. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.
  2. "Changed date of death shows Janusz Korczak was killed in Treblinka". Jewish Telegraphic Agency. 30 March 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2023.
  3. Sandra Joseph, Institute of Education in London (July–August 2002). "POLE APART - the life and work of Janusz Korczak". Young Minds Magazine 59. Archived from the original on 28 September 2007. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.
  4. 4.0 4.1 "Polskie Stowarzyszenie im. Janusza Korczaka". www.pskorczak.org.pl (in போலிஷ்). Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
  5. Tadeusz Lewowicki (2000). "Janusz Korczak (1878–1942)" (PDF, 43 KB). Prospects:the quarterly review of comparative education, vol. XXIV, no. 1/2, 1994, p. 37–48. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்: International Bureau of Education. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.
  6. 6.0 6.1 Prof. Barbara Smolińska–Theiss (2012). "Janusz Korczak – zarys portretu (the portrait)" (in போலிஷ்). Rok Janusza Korczaka (The official year of Janusz Korczak). Archived from the original on 15 April 2012. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.
  7. The Month, Volume 39. Simpki, Marshall, and Company. 1968. p. 350. When Dr. Janusz Korczak, a Jewish philanthropist and agnostic, voluntarily chooses to follow the Jewish orphans under his care to the Nazi extermination camp in Treblinka...
  8. Janusz Korczak (1978). Ghetto diary. Holocaust Library. p. 42. You know I am an agnostic, but I understood: Pedagogy, tolerance, and all that.
  9. Janusz Korczak; Aleksander Lewin (1996). Sława: Opowiadania (1898-1914) (in போலிஷ்). Oficyna Wydawnicza Latona. p. 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-83-85449-35-5.
  10. Maria Falkowska (1978). Kalendarium życia, działalności i twórczości Janusza Korczaka (in போலிஷ்). Wydaw-a Szkolne i Pedagogiczne. p. 8.
  11. Joanna Cieśla (15 January 2012). "Henryk zwany Januszem. Janusz Korczak - pedagog rewolucjonista" (in போலிஷ்). S.P. Polityka. Historia. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.
  12. Józef Ignacy Kraszewski (2012). "Moja Biblioteczka". Historia o Janaszu Korczaku i o pięknej Miecznikównie. LubimyCzytać.pl. பார்க்கப்பட்ட நாள் May 25, 2012.
  13. "ஓர் ஆசிரியரின் புனிதப் பயணம்". Hindu Tamil Thisai. 2025-01-14. பார்க்கப்பட்ட நாள் 2025-01-30. {cite web}: Text "வகுப்பறை புதிது 2" ignored (help)
  14. "CENTOS". Jewish Historical Institute. Archived from the original on 2016-04-11. பார்க்கப்பட்ட நாள் 2020-07-20.
  15. Dorit Gani (April 10, 2018). "Who Stood with the Orphans When the Nazis Came?". The National Library of Israel. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
  16. "Dom Sierot. Krochmalna 92". Swedish Holocaust Memorial Association. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.
  17. Brown, Kellie D. (2020). The sound of hope: Music as solace, resistance and salvation during the holocaust and world war II. McFarland. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4766-7056-0.
  18. "Perle, Joshua". Encyclopaedia Judaica. Encyclopedia.com. 
  19. "Janusz Korczak - A Learning Environment". யாட் வசெம். பார்க்கப்பட்ட நாள் 1 December 2024.
  20. "JANUSZ KORCZAK (1878 - 1942) Educator, he followed the Jewish children into the Warsaw Ghetto and in deportation". Gariwo. பார்க்கப்பட்ட நாள் 14 April 2022.
  21. Chojczak, Szymon (15 August 2018). "The Old Doctor who went with his pupils to the gas chamber". Great Poles. பார்க்கப்பட்ட நாள் 14 April 2022.