டா. ரெட்டீசு
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1984 |
தலைமையகம் | ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
முதன்மை நபர்கள் | அஞ்சி ரெட்டி, தலைவர் ஜிவி பிரசாத், முதன்மைச் செயல் அலுவலர், |
தொழில்துறை | மருந்து |
வருமானம் | ▲ $2.1 பில்லியன் (2012) |
நிகர வருமானம் | ▲ $300 மில்லியன் (2012) |
பணியாளர் | 14,923 (2010) |
இணையத்தளம் | www |
டாக்டர் ரெட்டீசு லாபரேட்டரி வரையறுக்கப்பட்டது, (Dr. Reddy's Laboratories Ltd) ஒருங்கிணைந்த முறையில் மருந்துத் தயாரிக்கும் ஓர் நிறுவனம் ஆகும். இது தனது தயாரிப்பை மூன்று வணிகப் பிரிவுகளால் குவியப்படுத்துகிறது: இவை உலகளாவிய பண்புசார் பிரிவு, மருந்துச் சேவை மற்றும் இயக்கத்திலுள்ள உட்பொருட்கள் (PSAI) பிரிவு, உரிமையுடை பொருட்கள் பிரிவு ஆகும். முன்னதாக ஐதராபாத்தில் அமைந்திருந்த பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனம், இந்திய மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் லிமிடெட்டில் பணியாற்றி வந்த அஞ்சி ரெட்டி என்பாரால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.டாக்டர் ரெட்டீசு பலவகைப்பட்ட மருந்துப் பொருட்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்த நிறுவனம் 190க்கும் கூடுதலான மருந்துகளையும் மருந்து தயாரிப்பிற்குத் தேவையான 60 இயக்கத்திலுள்ள மருந்து உட்பொருட்களையும் (APIs), நோய்நாடு கருவிப்பெட்டகங்களையும் , தீவிர சிகிட்சைப் பிரிவு மருந்துகளையும் உயிரித் தொழினுட்பப் பொருட்களையும் தயாரித்து வருகிறது.[1][2][3]
நிறுவன வரலாறு
டாக்டர் ரெட்டி 1984 ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1986 ஆம் ஆண்டில், ரெட்டி முத்திரை கருத்துக்கள்(branded formulations) செயல்பாட்டைத் தொடங்கியது. ஒரு ஆண்டுக்குள் ரெட்டி Norilet, இந்தியாவில் நிறுவனத்தின் முதல் அங்கீகரிக்கப்பட்ட பிராண்ட் துவக்கினர். புண் மற்றும் எதுக்குதலின் oesophagitis மருந்து - - அந்த நேரத்தில் இந்திய சந்தையில் மற்ற பிராண்டுகளில் அரை விலையில் தொடங்கப்பட்டது விரைவில், டாக்டர் ரெட்டிஸ் Omez, அதன் முத்திரை omeprazole மற்றொரு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ "IND AS Consolidated Q4 FY 2023-24" (PDF). Dr. Reddy’s Laboratories. பார்க்கப்பட்ட நாள் 19 May 2024.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 25 May 2014. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
{cite web}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Dr Reddy's Laboratories 2007-2012 – MarketReports.com 2007 life sciences research report, Technology Networks, Sudbury, Essex, UK பரணிடப்பட்டது 19 சனவரி 2010 at the வந்தவழி இயந்திரம்.Accessed: 22 August 2007.