தறுவாய் வேறுபாட்டு நுண்ணோக்கி
தறுவாய் வேறுபாட்டு நுண்ணோக்கி | |
பயன்பாடு | கறையில்லா உயிரியல் பொருட்களை நுண் நோக்கீடு |
---|---|
கண்டுபிடித்தவர் | பிரிட்சு ஜெர்னிகி |
படைப்பர் | [ஐலைக்கா நுண் அமைப்புகள் நிறுவனம் |
வடிப்பு | kgt படிம வகை |
தொடர்புடைய கருவிகள் | வகையிடு குறுக்கீட்டு வேறுபாட்டு நுண்ணோக்கியியல், காப்மன் குறியேற்ற வேறுபாட்டு நுண்ணோக்கியியல், அளவியல்வகை தறுவாய் வேறுபாட்டு நுண்ணோக்கியியல் |
தறுவாய் வேறுபாட்டு நுண்ணோக்கி (Phase-contrast microscopy) என்ற நுண்ணோக்கியில், பொருளருகு வில்லையும் குவிவியத் தாங்கிகளும் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளன. இதனால் உயிர்க்கலக் கூறுகளின் அமைப்பு வேறுபாடுகளை மிகத்தெளிவாக காட்டுகின்றன. இதனால் உயிர்க் கலத்தின் உள் காணப்படும் அமைப்புகளை சாயம் ஏற்றாமல் மிகத்தெளிவாக அதிக வேறுபடுத்தும் திறனோடு காணலாம். இந்நுண்ணோக்கியில் உற்றுநோக்குவதினால் , கலங்களை கொல்லவோ, சாயம் ஏற்றவோ தேவையில்லை[1].
மேற்கோள்
- ↑ பள்ளிக்கல்வித்துறை. இயற்பியல் மேல்நிலை முதலாமாண்டு. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். p. 63.