தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்

தேவாரம் பாடல் பெற்ற
திருத்தலைச் சங்காடு சங்காரண்யேசுவரர் திருக்கோயில்
திருத்தலைச் சங்காடு சங்காரண்யேசுவரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
திருத்தலைச் சங்காடு சங்காரண்யேசுவரர் திருக்கோயில்
திருத்தலைச் சங்காடு சங்காரண்யேசுவரர் திருக்கோயில்
சங்காரண்யேசுவரர் கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:11°07′55″N 79°47′31″E / 11.1320°N 79.7920°E / 11.1320; 79.7920
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தலைச் சங்காடு
பெயர்:திருத்தலைச் சங்காடு சங்காரண்யேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:தலைச்சங்காடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சங்கவனேசுவரர், சங்காரண்யேசுவரர், சங்கருணாதேசுவரர்
தாயார்:சௌந்தர நாயகி
தல விருட்சம்:புரசு
தீர்த்தம்:சங்கு தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோச்செங்கட்சோழன் அமைத்த மாடக்கோயில்

தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 45ஆவது சிவத்தலமாகும். இக்கோயிலின் மூலவர் (சங்கு + ஆரண்யம் + ஈசுவரர் =) சங்காரண்யேசுவரர் ஆவார்.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது.

அமைப்பு

வாயிலில் நுழைந்ததும் கோயிலின் வலப்புறம் அதிகாரநந்தி உள்ளது. வாயிலைக் கடந்ததும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் மூலவர் சங்காரண்யேசுவரர் சன்னதிக்கு முன்பாக ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், கோச்செங்கணான், துவாரகணபதி உள்ளனர். மூலவருக்கு முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர், மஹாவிஷ்ணு, ஜுரஹரர், ராமர், சீதை, வலம்புரி விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். அருகே தனியாக துர்க்கை உள்ளார். பலிபீடம், நந்திக்கு இணையாக கோயிலின் இடப்புறம் சௌந்தரநாயகி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் சங்கவனேசுவரர், இறைவி சௌந்தரநாயகி.

சிறப்பு

சிறப்புலி நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. கபிலதேவ நாயனார் இத்தலம் பற்றிப் பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் இடம்பெறுகிறது. இத்தலத்தில் திருமால் வழிபட்டுப் பாஞ்ச சன்னியச் சங்கைப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.

வைணவத் திருத்தலம்

இக்கோயிலின் அருகே திருமங்கையாழ்வார் பாடிய நாண்மதியப் பெருமாள் எனும் வைணவத் திருத்தலம் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்க