தானா மேரா கிளாந்தான் தொடருந்து நிலையம்

தானா மேரா
| Seremban Line கேடிஎம் இண்டர்சிட்டி

Tanah Merah Railway Station
தானா மேரா தொடருந்து நிலையம் (2011)
பொது தகவல்கள்
அமைவிடம்தானா மேரா மாவட்டம்
கிளாந்தான்
 மலேசியா
ஆள்கூறுகள்5°48′23″N 102°08′48″E / 5.80639°N 102.14667°E / 5.80639; 102.14667
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர் மலாயா தொடருந்து
தடங்கள்மலாயா கிழக்கு கடற்கரை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1914
மறுநிர்மாணம்2008
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் இண்டர்சிட்டி   அடுத்த நிலையம்
   
பாசிர் மாஸ்
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
தெமங்கான்
ஜொகூர்
பானாவ்
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
தெமங்கான்
லிப்பிஸ்
பானாவ்
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
தெமங்கான்
மூசாங்
பானாவ்
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
தெமங்கான்
தாபோங்
அமைவிடம்
தானா மேரா தொடருந்து நிலையம்

தானா மேரா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tanah Merah Railway Station மலாய்: Stesen Keretapi Tanah Merah) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், தானா மேரா மாவட்டம், தானா மேரா நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். தானா மேரா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]

கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களையும் இந்த நிலையம் இணைக்கிறது. மலாயா தொடருந்து நிறுவனத்தின் கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் உள்ள இரண்டு தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.

பொது

தானா மேரா நகரத்திற்குள் அமைந்துள்ள ஒரே தொடருந்து நிலையம் என்பதால், கிளாந்தானில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தினால் இந்த நிலையமும் பாதிப்பு அடைவது உண்டு. இந்த நிலையத்தில் இன்டர்சிட்டி தொடருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன.[2]

தானா மேரா தொடருந்து நிலையத்தின் வடக்கு முனையில் உள்ள சாலையில் ஒரு தொடருந்துக் கடவை (Railway Crossing) உள்ளது. தொடருந்துகள் வரும்போது அந்தத் தொடருந்துக் கடவை மிகவும் பரபரப்பாக இருக்கும்.

ஏனெனில் இந்தச் சாலை, கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை; மற்றும் பினாங்கு நகருக்குச் செல்லும் சாலை; ஆகிய சாலைகளை இணைக்கும் உள்ளூர் சாலையாகும்.[3]

தொடருந்து சேவைகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்