தாரிம் வடிநிலம்

தாரிம் வடிநிலம்
  துசுங்கரியா
  தாரிம் வடிநிலம்
சீனப் பெயர்
சீனம் 塔里木盆地
Nanjiang
சீனம் 南疆
Literal meaning தெற்கு சிஞ்சியாங்
Uyghur name
Uyghur تارىم ئويمانلىقى

தாரிம் வடிநிலம் (Tarim Basin), மேற்கு சீனாவின் சிஞ்சியாங் தன்னாட்சிப் பகுதியில் அமைந்த தாரீம் ஆற்றின் வடிநிலப் பகுதிகள் ஆகும். இந்த வடிநிலத்தின் பரப்பளவு 1,020,000 km2 (390,000 sq mi) ஆகும்.[1] தாரிம் வடிநிலத்தின் வடக்கில் தியான் சான் மலைத்தொடர்களும், தெற்கில் திபெத்திய பீடபூமியை ஒட்டிய குன்லுன் மலைத்தொடர்களும் சூழ்ந்துள்ளது. தாரிம் வடிநிலத்தின் பெரும்பகுதிகளை தக்கிலமாக்கான் பாலைவனம் கொண்டுள்ளது.

மேற்கு சீனாவில் தாரின் வடிநிலத்தில் முட்டை வடிவத்தில் தக்கிலமாக்கான் பாலைவனம்

சிஞ்சியாங் மாகாணம் மூன்று முக்கிய வேறுபட்ட புவியியல், வரலாறு மற்றும் இனக்குழுக்களை அடங்கிய பிரதேசங்களைக் கொண்டுள்ளது. 1884-இல் சீனாவின் குயிங் அரச மரபு சிஞ்சியாங் மற்றும் துங்காரியா பிரதேசங்களை அரசியல் ரீதியாக சிஞ்சியாங் மாகாணம் என ஒன்றிணைத்தனர். துங்கர் மக்கள், தரிம் வடிநிலத்தில் அல்சகர் மக்கள், பாலைவனச் சோலைகளில் வாழும் துருக்கிய மொழி பேசும் முஸ்லீம் மக்களை, தற்போது சீன அரசு உய்குர் மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பகுதியில் திபெத்திய பௌத்தர்களும் வாழ்கின்றனர்.

தாரிம் வடிநிலத்தின் நிலப்பரப்புகள்

தாரிம் வடிநிலத்தையும் (தக்கிலமாக்கான் பாலைவனம்), துசுங்கரியப் பகுதிகளைப் பிரிக்கும் தியான் சான் மலைகள்

வடக்குப் பக்கம்: சீனர்கள் தாரிம் வடிநிலத்தின் இந்த வடக்குப் பிரதேசத்தை தியான் சான் தெற்குப் பாதை என்பர். சீனர்கள் இப்பகுதியில் சாலைகளும், இருப்புப் பாதைகளும் அமைத்துள்ளனர். இதன் தெற்கில் தாரீம் ஆறு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள கஷ்கர் நகரம் ஆப்கானித்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அக்சு ஆறு பாய்கிறது.

மையப் பக்கம்: தாரிம் வடிநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகள் தக்கிலமாக்கான் பாலைவனம் கொண்டுள்ளது. இப்பகுதியில் அக்சு ஆறு, கஷ்கர் ஆறு, யார்கண்ட் ஆறுகளின் நீர் தாரிம் ஆற்றுடன் கலந்து வடக்கில் பெரும் ஆறாக பாய்கிறது.

தெற்குப் பக்கம்: கஷ்கரை விட பெரிய யார்கண்ட் கவுண்டி, கார்கிலிக் கவுண்டி இந்தியாவிற்கான பாதை கொண்டுள்ளது. மேலும் காரகாக்ஸ் கவுண்டி அரிய இரத்தினக் கற்களின் விளைவிடமாகக் கொண்டுள்ளது. நவீன சாலைகள் திபெத்தை நோக்கிச் செல்கிறது. கும்தாக் பாலைவனத்தைக் கடந்து துன்ஹவுங் நகரத்திற்குச் செல்ல சாலைகள் வசதிகள் தற்போது இல்லை.

இருப்புப் பாதைகள், சாலைகள், ஆறுகள்:, ஆறுகள் மற்றும் வழித்தடங்கள்: தெற்கு சிஞ்சியாங் இரயில்வேயின் இருப்புப் பாதைகள் கஷ்கர் நகரம் வரை செல்கிறது.

சாலைகள்:சீனாவின் தேசிய நெடுஞ்சாலை எண்கள் 312, 314 மற்றும் 315 தார் வடிநிலத்தின் கஷ்கர், உரும்கி, சார்கிலிக், கோரலா போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

ஆறுகள்: அக்சு ஆறு, யார்கண்ட் ஆறு, ஹோடன் ஆறு மற்றும் தாரீம் ஆறு, தாரிம் வடிநிலத்தை வளப்படுத்துகிறது.

வணிகப் பாதைகள்: தாரிம் வடிநிலத்தின் தெற்கில் பண்டைய வணிகப் பாதைகள் இருந்தது. ஹான் அரச மரபு ஆட்சியின் போது இந்த வணிகப்பாதைய கைப்பற்றி ஜேட் கேட்-லௌலான் - கோராலா பகுதிக்க்கு வணிகப் பாதையை மாற்றினர். முன்னர் சீனாவிலிருந்து இந்தியாவிற்கான வணிகப் பாதை யார்கண்ட் மற்றும் கார்கிலிக் நகரத்திலிருந்து இருந்தது. தற்போது இப்ப்பாதையை கஷ்கர் நகரத்திற்கு தெற்கே உள்ள காரகோரம் நெடுஞ்சாலை வழியாக மாற்றப்பட்டுள்ளது.

வடக்கின் மலைப் பகுதிகள்: தாரிம் வடிநிலத்தின் வடக்கே குர்பண்டுன்குட் பாலைவனம், உரும்சி எண்ணெய் வயல்கள், இலி ஆறுகள் கொண்டது.

புவியியல்

தாரிம் வடிநிலம், 2008

கார்போனிஃபெரஸ் முதல் பெர்மியன் காலங்களில் ஒரு பண்டைய மைக்ரோ கண்டம் மற்றும் வளர்ந்து வரும் யூரேசிய கண்டம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கலவையின் விளைவாக தாரிம் வடிநிலம் அமைந்துள்ளது. தற்போது வடிநிலத்தின் விளிம்புகளைச் சுற்றியுள்ள சிதைவின் விளைவாக மைக்ரோ கான்டினென்டல் மேலோடு, வடக்கே தியான் ஷானின் கீழும், தெற்கே குன்லுன் ஷானின் கீழும் தள்ளப்படுகிறது.

வண்டல் மண் படுகையின் மையப் பகுதிகளை ஆக்கிரமித்து, 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மூல பாறைகள், எண்ணெய் மற்றும் எரி வாயுக்களைக் கொண்டுள்ளது. [2] தாரிம் வடிநிலத்தில் பரந்துள்ள கே-2 கொடுமுடி மலைகள் உலகின் இரண்டாவது உயர்ந்த மலை ஆகும். இம்மலையின் பனிகள் உருகுவதால் தாரிம் ஆற்றின் நீர் வளம் வற்றாது உள்ளது. மேலும் தாரிம் ஆற்று நீர் கடலில் கலக்காதது ஒரு சிறப்பாகும். தாரிம் ஆற்று வடிநிலத்தில் பெரும் அளவில் பெட்ரோலியப் பொருட்களும், இயற்கை எரிவாயுகள் உள்ளது. [3]:493[4] சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனம் தாரிம் வடிநிலத்தில் 26 இடங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் எந்திரங்கள் நிறுவியுள்ளது. 2010-இல் தாரிம் வடிநிலத்தில் 35 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை எடுத்துள்ளது.[5] 2015-இல் தாரிம் வடிநிலத்தின் ஆழத்தில் பெரும் அளவில் கரிமப் பொருட்கள் இருப்பதாக கண்டுபிடித்தனர்.[6]

மனிதர் சாதரானமாக வாழ வழியில்லாத தாரிம் வடிநிலம் மலைகளால் சூழப்பட்டதும், மையத்தில் பாலைவனம், வறண்ட வானிலை காரணமாக இந்நிலப்பரப்பு மனிதர்கள் தேடிய இறுதி வாழ்விடமாக அமைந்தது.[7] சீனாவின் வடக்கின் பட்டுப் பாதையின் ஒரு பாதை தாரிம் வடிநிலத்தின் வடக்கின் தியான் சான் மலைகள் மற்றும் தக்லமாகன் பாலைவனம் வழியாகச் செல்கிறது.

  • வடக்கு தாரிம் சாலை கஷ்கர், அக்சு, குச்சா, கோர்லா வழியாக அன்சி நகரத்தை அடைகிறது.
  • தெற்கு தாரிம் சாலை கஷ்கர், யார்கண்ட், கர்கிலிக், குமா, கோட்டான், கேரியா, நியா, மீரான் மற்றும் துன்குவாங் வழியாக ஆன்சி நகரத்திற்கு செல்கிறது.
  • மத்திய தாரிம் சாலை கோர்லா, லௌலான், துன்குவான் வழியாகச் செல்கிறது.

வரலாறு

ஹான் அரச மரபு

கிமு முதல் நூற்றாண்டில் சியான்கு இராச்சியத்திடமிருந்து தாரிம் வடிநிலத்தை ஹான் சீனர்கள் கைப்பற்றினர். பின்னர் தாரிம் வடிநிலம் துருக்கிய, திபெத்திய, ஹான், மங்கோலியர்களின் கீழ் இருந்தது. கிபி 1-2-ஆம் நூற்றாண்டுகளில் பலம் மிக்க குசான் பேரரசு ஆட்சியாளர்கள் இந்தோ கிரேக்க நாடுகளை வென்று, தங்கள் ஆட்சிப் பரப்பை தாரிம் வடிநிலம் வரை விரிவாக்கி, கஷ்கர் நகரத்தை நிறுவினர்.

சுய் -துங் வம்சங்கள்

ஹான் அரச மரபுபிற்குப் பின்னர் தாரிம் வடிநிலத்தை சுய்-துய் வம்சங்கள் ஆண்ட போது இந்தியப் பண்பாடு, குறிப்பாக பௌத்தப் பண்பாடு, இந்தியாவிலிருந்து நடு ஆசியா வழியாக சீனாவில் தாரிம் வடிநிலத்தை அடைந்தது. [8]

தாங் அரசமரபு ஆட்சிக் காலத்தில் தாரிம் வடிநிலத்தின் பாலைவனச் சோலைகள் இராச்சியங்களை ஆண்ட மேற்கு துருக்கிய கானகத்தின் சிற்றரசுகள் மீது சீனர்கள் முற்றுகையிட்டனர்.[9]

மீண்டும் கிபி 640-இல் தாங் அரச மரபினர் கரகோஜாவை இசுலாமிய துருக்கிய இனக்குழுவினடமிருந்து தாரிம் வடிநிலப் பகுதிகளைக் கைப்பற்றினர்[10]

கிபி 644-இல் கஷ்கர் நகரத்தையும், 649-இல் குச்சா நகரத்தையும் சீனாவின் தாங் அரசமரபினர் கைப்பற்றினர்.[11]

தாங் வம்ச பேரரசர் கிபி 657-இல் நடு ஆசியாவின் மேற்கத்திய துருக்கியர்களை போரில் வென்று தாரிம் வடிநிலத்தை கைப்பற்றினார்.[11]

துருக்கிய ஆதிக்கம்

கிபி 840-இல் உய்குர் கானகம் வீழ்ச்சியடைந்ததால் துர்பன் மற்றும் கான்சுநகரங்களில் புலம்பெயர்ந்து வாழ்ந்த துருக்கிய உய்குர் மக்கள் மற்றும் கர்லுக் மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியான தாச்சாரியன் மொழிகளை உள்வாங்கிக் கொண்டனர். துர்பனிலில் வாழ்ந்த உய்குர் மக்கள் பௌத்த சமயத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பத்தாம் நூற்றாண்டில் கர்லுக், யாக்மா, சிக்கிலிஸ் மற்றும் பிற துருக்கிய இன மக்கள் ஒன்றிணைந்து செமிரிச்சி, மேற்கு தியான் சான் மற்றும் கஷ்காரியா பகுதிகளை இணைத்து கார-கானித்து கானகம் என்ற இராச்சியத்தை நிறுவினர்.[12]

தாரிம் வடிநிலம் இசுலாமியமாதல்

பத்தாம் நூற்றாண்டில் கார-கானித்து துருக்கிய இசுலாமிய வம்ச சுல்தான் சத்துக் புகாரா கான் 966-இல் இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறி கஷ்கர் நகரத்தைக் கைப்பற்றினார்.[12]சத்துக் கான் மற்றும் அவரது மகன் துருக்கிய இன மக்களை இசுலாமிற்கு மதம் மாற பிரச்சாரம் செய்தனர்.[13] இதனால் பௌத்த சமயத்தினர் தங்களது பகுதிகளை துருக்கிய கான்களிடம் இழந்தனர். [14]இவ்வாறக அடுத்த சில நூற்றாண்டுகளுக்குள் தாரிம் வடிநிலப் பகுதிகள் இசுலாமிய மயமானது

பௌத்த உய்குர் மக்களை இசுலாமியராக மதமாற்றல்

பௌத்த மடலாயத்தின் சிதிலங்கள், சுபாஷி, (இழந்த நகரம்)

குவாச்சா மற்றும் தர்பன் பௌத்த உய்குர் இராச்சிய மக்கள் இசுலாமை ஏற்றுக்கொண்டு பௌத்த சமயத்திலிருந்து இசுலாமிற்கு மாறினர்.[15] உய்குர் மக்கள் நிறைந்த பௌத்த இராச்சியமான காரா டெல் பிரதேசத்தை மங்கோலிய இன மன்னர் ஆட்சி செய்தார். இசுலாமிய சாகதாய் கான் இப்பகுதியை வென்று மக்களை வாள் முனையில் இசுலாமிற்கு மதம் மாற்றினர்.[16] தாரிம் வடிநிலப் பகுதியின் மக்களை பௌத்த சமயத்திலிருந்து இசுலாமிய மதமாறிய துருக்கிய இன மக்களின் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவினரான சுங்கர் இன மக்கள் தங்கள் பகுதிகளில் பௌத்த நினைவுச் சின்னங்களை எழுப்பினர்.[17]

குயிங் வம்ச ஆட்சிக்கு முன்னர்

17-ஆம் நூற்றாண்டில் தாரிம் வடிநிலத்தின் தென் பகுதி சூபி இசுலாமை பின்பற்றுபவர்கள் ஒன்றிணைந்த சக்தியாக உருவெடுத்தனர். [18]

சிங் அரசமரபு

வடக்கு சிஞ்சியாங் சுங்கர் வடிநிலம் (மஞ்சள்), கிழக்கு சிஞ்சியாங் - (தர்பன்) (சிவப்பு), மற்றும் தாரிம் வடிநிலம் (நீலம்)

சிங் அரசமரபு 1884-இல் சீனாவின் அரியணை ஏறும் வரை சிஞ்சியாங் ஒரு அலகாக இருக்கவில்லை. சிஞ்சியாங் பிரதேசம் சுங்காரியா மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் என இரு வேறு அரசியல் பிரதேசமாக இருந்தது.[19][20][21][22]

சிங் வம்ச ஆட்சியின் கீழ் தாரிம் வடிநிலப் பிரதேசம், தியான்சான் நன்லு என சீனர்களால் அழைக்கப்பட்டது. இப்பிரதேச மக்களை உய்குர் மக்கள் என்றும் அழைத்தனர்.[23]

தாரிம் வடிநில மக்கள்

உய்குர் மக்கள் கோட்டான் நகரம், தாரிம் வடிநிலம்

தாரிம் வடிநிலத்தின் பெரும்பான்மை மக்கள் உய்குர் மக்கள் ஆவார்.[24]கஷ்கர், அர்துஷ் மற்றும் ஹோடான் நகரங்களில் பெரும்பான்மை மக்கள் உய்குர் இன மக்களே. இருப்பினும் உய்குர் மக்கள் சீனாவின் ஹான் இன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மேலும் இங்கு சிறுபான்மை ஹுய் மற்றும் தாஜிக், மங்கோலியர் போன்ற இனக்குழுவினர் வாழ்கின்றனர்.[25]மேலும் இங்கு திபெத்திய பௌத்தர்களும் வாழ்கின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Chen, Yaning, et al. "Regional climate change and its effects on river runoff in the Tarim Basin, China." Hydrological Processes 20.10 (2006): 2207-2216. (online பரணிடப்பட்டது 2016-05-01 at the வந்தவழி இயந்திரம் 426 KB)
  2. Tian, Fei; Lu, Xinbian; Zheng, Songqing; Zhang, Hongfang; Rong, Yuanshuai; Yang, Debin; Liu, Naigui (2017-06-26). "Structure and Filling Characteristics of Paleokarst Reservoirs in the Northern Tarim Basin, Revealed by Outcrop, Core and Borehole Images". Open Geosciences 9 (1): 266–280. doi:10.1515/geo-2017-0022. பன்னாட்டுத் தர தொடர் எண்:2391-5447 இம் மூலத்தில் இருந்து 2018-03-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180313092338/https://www.degruyter.com/view/j/geo.2017.9.issue-1/geo-2017-0022/geo-2017-0022.xml?format=INT. 
  3. Boliang, H., 1992, Petroleum Geology and Prospects of Tarim (Talimu) Basin, China, In Giant Oil and Gas Fields of the Decade, 1978-1988, AAPG Memoir 54, Halbouty, M.T., editor, Tulsa: American Association of Petroleum Geologists, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0891813330
  4. "Natural Gas Geochemistry in the Tarim Basin, China and Its Indication to Gas Filling History, by Tongwei Zhang, Quanyou Liu, Jinxing Dai, and Yongchun Tang, #10131". www.searchanddiscovery.net. 2007. Archived from the original on 2008-10-26.
  5. Karen Teo (January 4, 2005). "Doubts over Sinopec oil find in Tarim". thestandard.com.hk. Archived from the original on March 10, 2011.
  6. Li, Yan; Wang, Yu-Gang; Houghton, R. A.; Tang, Li-Song (2015). "Hidden carbon sink beneath desert" (in en). Geophysical Research Letters 42 (14): 5880–5887. doi:10.1002/2015GL064222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1944-8007. 
  7. Wong, Edward (2009-07-12). "Rumbles on the Rim of China’s Empire - NYTimes.com". www.nytimes.com இம் மூலத்தில் இருந்து 2011-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111204015033/http://www.nytimes.com/2009/07/12/weekinreview/12wong.html. பார்த்த நாள்: 2009-07-13. 
  8. Jeong Su-il (17 July 2016). "Kucha Music". The Silk Road Encyclopedia. Seoul Selection. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781624120763.
  9. Ebrey, Patricia Buckley (2010). The Cambridge Illustrated History of China. Cambridge University Press. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-12433-1.
  10. Twitchett, Denis; Wechsler, Howard J. (1979). "Kao-tsung (reign 649-83) and the Empress Wu: The Inheritor and the Usurper". In Denis Twitchett; John Fairbank (eds.). The Cambridge History of China, Volume 3: Sui and T'ang China Part I. Cambridge University Press. p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-21446-9.
  11. 11.0 11.1 Skaff, Jonathan Karem (2009). Nicola Di Cosmo (ed.). Military Culture in Imperial China. Harvard University Press. pp. 183–185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03109-8.
  12. 12.0 12.1 Golden, Peter. B. (1990), "The Karakhanids and Early Islam", in Sinor, Denis (ed.), The Cambridge History of Early Inner Asia, Cambridge University Press, p. 357, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-2-4304-9
  13. Valerie Hansen (17 July 2012). The Silk Road: A New History. Oxford University Press. pp. 226–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-993921-3.
  14. Trudy Ring; Robert M. Salkin; Sharon La Boda (1994). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. pp. 457–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-884964-04-6.
  15. James A. Millward (2007). Eurasian Crossroads: A History of Xinjiang. Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-13924-3.
  16. "哈密回王简史-回王家族的初始". Archived from the original on 2009-06-01. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.{cite web}: CS1 maint: unfit URL (link)
  17. Hamilton Alexander Rosskeen Gibb; Bernard Lewis; Johannes Hendrik Kramers; Charles Pellat; Joseph Schacht (1998). The Encyclopaedia of Islam. Brill. p. 677.
  18. "n the seventeenth century Naqshbandi Sufis consolidated power over the southern Tarim basin "China and Islam - The Prophet, the Party, and Law, Cambridge University Press.
  19. Michell 1870, p. 2.
  20. Martin 1847, p. 21.
  21. Fisher 1852, p. 554.
  22. The Encyclopædia Britannica: A Dictionary of Arts, Sciences, and General Literature, Volume 23 1852, p. 681.
  23. Millward 1998, p. 23.
  24. Bovingdon, Gardner (2010-08-06). The Uyghurs: Strangers in Their Own Land. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231519410.
  25. Stanley W. Toops (15 March 2004). S. Frederick Starr (ed.). Xinjiang: China's Muslim Borderland. Routledge. pp. 254–255. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0765613189.

ஊசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tarim Basin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.