தாள இசைக்கருவி
தாள இசைக்கருவி என்பது சீரான கால இடைவெளியுடனோ, மாறுபடும் கால இடைவெளியுடனோ தட்டி ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை குறிக்கும். இவற்றை கைகளாலோ அல்லது குச்சிகளை கொண்டோ அடிப்பதன் மூலம் ஒலி எழுப்பலாம். இவைகளை தட்டும்போது அசையும் தளத்தின் அருகிலுள்ள காற்றிலுள்ள அணுக்கள் அதிரத் தொடங்குகின்றன. இதனால் ஒலி எழும்புகிறது.[1][2][3]
தோற்கருவி
தாள இசைக்கருவிகளுள் ஒன்றான தோற்கருவி (drum), அடித்து இசையெழுப்பும் இசைக்கருவி வகையைச் சார்ந்தது. தோற்கருவிகள், மரத்தால் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டனவும், உள்ளீடற்ற உருளை வடிமானதுமான உடலின் திறந்த வாய்ப் பகுதியில் இழுத்துக் கட்டப்பட்ட ஒரு தோலையோ அல்லது இரண்டு தோல்களையோ கொண்டிருக்கும். இத்தோலின் அல்லது தோல்களின் மீது அடிப்பவரின் கையினால் அல்லது கம்பினால் அடித்து இசை எழுப்புவர்.
மேற்கோள்கள்
- ↑ The Oxford Companion to Music, 10th edition, p.775, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866212-2
- ↑ "Instruments: Philharmonia Orchestra". Philharmonia.co.uk. Archived from the original on 2013-07-22. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
- ↑ "Percussion — Musical Instruments at your Fingertips". www.miayf.org. Archived from the original on July 4, 2015.