தும்மல நாகேசுவர ராவ்

தும்மல நாகேசுவர ராவ்
சாலை மற்றும் கட்டடங்கள் துறை அமைச்சர்
தெலங்காணா அரசு
பதவியில்
16 டிசம்பர் 2014 – 28 நவம்பர் 2018
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்வெமுலா பிரசாந்த் ரெட்டி
தெலங்காணா சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
மே 2016 – நவம்பர் 2018
முன்னையவர்ராமிரெட்டி வெங்கட ரெட்டி
பின்னவர்கண்டலாஉபேந்தர் ரெட்டி
தொகுதிபாலைர்
தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
2014–2016
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1994–2004
முன்னையவர்ஜலகம் பிரசாத ராவ்
பின்னவர்ஜலகம் பிரசாத ராவ்
தொகுதிசத்துப்பள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 நவம்பர் 1953 (1953-11-15) (அகவை 70)
கொல்லகுடம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திர மாநிலம் (தற்போதைய தெலங்காணா), இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
( 2023 – தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரத் இராட்டிர சமிதி
(2014-2023)
தெலுங்கு தேசம் கட்சி
(1982 - 2014)
பிள்ளைகள்தும்முல யுகாந்தர், மோகினி போப்புரி, சந்திர்கா வல்லபானேனி
வாழிடம்(s)கம்மம், தெலங்காணா
கல்விஇளங்கலை வணிகவியல்

தும்மல நாகேசுவர ராவ் (Thummala Nageswara Rao) இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்திலும், பின்னர், தெலங்காணா அரசாங்கத்திலும் 4 முறை முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். [1] இவர் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அரசியல் வாழ்க்கை

இவர் 1982 தேர்தல் சமயத்தில் தெலுங்கு தேசத்தில் சேர்ந்தார். ஆனால் 1983 தேர்தலில் தோல்வியடைந்தார். 1985, 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் சத்துப்பள்ளி தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ஆந்திரப் பிரதேசத்தின் சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2014 தேர்தலில் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டு 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [2] ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிந்ததால் தெலங்காண சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்தது.

இவர் செப்டம்பர் 2014 இல் பாரத இராட்டி சமிதியில் சேர்ந்தார். [3] டிசம்பர் 2014 இல் அமைச்சரவையில் சேர்ந்து சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அமைச்சராக பணியாற்றினார். தற்போதைய அரசாங்கத்தில் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார். [4] இவர் கட்சியை விட்டு வெளியேறி செப்டம்பர் 2023 இல் இந்திய தேசிய காங்கிரசில்ல் சேர்ந்தார்.

2016 இல் தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினராக சில காலம் பணியாற்றினார். இடைத்தேர்தலில் பாலைர் தொகுதியில் [5] 45,676 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். [6]

மேற்கோள்கள்