தொடரியல் (நிரலாக்கம்)

ஒரு நிரல் மொழியின் தொடரியல் (syntax of language) அல்லது தொடரமைப்பு என்பது அந்த மொழியின் நிரல்களின் குறியீடுகளின் கூட்டு ஒழுங்கமைப்பு சரியென தீர்மானிக்கும் விதிமுறைகள் ஆகும். ஒரு மொழியின் தொடரியல் அந்த மொழியின் மேல் நிலை வடிவமைப்பை வரையறை செய்கிறது. உரை வடிவ நிரல் மொழிகளில் (எ.கா. எழில் நிரலாக்கல் மொழி) எழுத்துக்கள் அல்லது குறியீடுகள் வரிசையமைப்பாகவும், அவை எந்த முறையில் அமையலாம் என்றும் தொடரியல் வரையறை செய்கிறது. காட்சி நிரல் மொழிகளில் குறியீடுகளின் இட நிலைகளும் தொடர்புகளும் எவ்வாறு அமைய வேண்டும் என்று தொடரியல் வரையறை செய்கிறது.